காஞ்சி காமாட்சியின் வரலாறு
பந்தகாசுரன் என்னும் அசுரனை அன்னை வதம் செய்தல்
தேவர்கள் கிளியின் உருவம் கொண்டு லோகமாதாவை பல யூகங்கள் கடந்து தவம் இயற்றினார்கள். அன்னையும் தேவர்கள் படும் துயரத்தை கண்டு மனமுருகி பந்தகாசுரனை வதம் பண்ண அவதரித்தாள். தேவி ஒரு 9 வயது சிறு பாலகியாக, அவதரித்தாள். தேவர்கள் அந்த பாலா திருபுரசுந்தரியை வணங்கி தங்கள் துயரத்தை கூறினார்கள். அங்கிருந்த 9 வயது பாலா திருபுரசுந்தரியை விடைபெற்று, அஷ்டபுஜங்கள் கூடிய துர்கையாய் உருமாறி பந்தகாசுரனை வதம் செய்ய புறப்பட்டாள். தேவி துர்கை பந்தகாசுரனுடன் போர் செய்து அவன் தலையை கொய்து நேரே தேவர்கள் இருக்கும் இடத்தை நெருங்கினாள். மீண்டும் 9 வயது பாலா திருபுரசுந்தரியாக உருவெடுத்து பந்தகாசுரனின் தலையை புதைக்க ஒரு இடத்தை தன் கால் கட்டை விரலால் கீறினால். அந்த இடத்தில பந்தாசுரனின் உடலை புதைக்கும்படி தேவர்களுக்கு ஆணை இட்டால். மேலும் புதைத்த அந்த இடத்தில தன்னுடைய வெற்றிக்கு அடையாளமாக ஜெயஸ்தம்பம் நடும் படி கட்டளையிட்டு மறைந்தாள். தேவர்களும் அன்னையின் ஆணையை ஏற்று, அன்னை காட்டிய இடத்தை தோண்டினார்கள். தோண்டிய அவ்விடத்தில் மல்லகண் என்னும் அசுரன் கடும் தவம் இயற்றிக்கொண்டு இருந்தான். தேவர்களுக்கு மறுபடியும் என்ன செய்வதென்று புரியவில்லை, நாராயணா! நாராயணா! என்று அலறினர். நாராயணர் அவர்களுக்கு காட்சி கொடுத்து மல்லகனுடன் போர் புரிய துவங்கினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக