புதன், 27 அக்டோபர், 2021

ரமண மகரிஷியின் ஹஸ்த தீட்சை

ரமண மகரிஷியின்  ஹஸ்த தீட்சை



1908-ல் பகவான் ஸ்ரீரமண மகரிஷியிடம் இருந்து விடைபெற்று, காவிய கண்ட கணபதி சாஸ்திரி திருவொற்றியூருக்குப் பயணமானார். அங்கே, விநாயகர் கோயிலில் தங்கிக்கொண்டு, தன் தவத்தைத் தொடர்ந்தார். பிற்பகல் ஒன்றில் விழித்தபடி படுத்திருந்தபோது, அவருக்கு அருகே யாரோ அமர்வதுபோல் இருந்தது. யார் என்று பார்த்தபோது, பகவான் ஸ்ரீரமண மகரிஷி தன் உள்ளங்கையை, காவிய கண்ட கணபதியின் தலையில் அழுத்தி வைத்திருந்தார். பகவானின் உள்ளங்கை பட்டதும், கணபதி சாஸ்திரிக்கு மின்சாரம் பாய்ந்ததுபோல் உணர்வு ஏற்பட்டது. 1908-ல் நடந்த இந்த விஷயத்தை, 1929-ல் அன்பர் ஒருவர், "கணபதி சாஸ்திரியாருக்கு திருவெற்றியூர் வந்து ஹஸ்த தீட்சை கொடுத்தீர்களாமே?" என்று கேட்டபோது, பகவான், "ஆமாம், ஒரு நாள் திடீரென்று எங்கோ இந்த இடம் விட்டு மேலே பறப்பது போல் தோன்றியது மேலே எழுந்ததும், காட்சிகள் மறைந்தன. இடம் முழுவதும் வெள்ளையாயிற்று, ஏதோ ஓர் இடத்துக்கு நகர்கிறோம் என்ற உணர்வு இருந்தது. பிற்பாடு மெல்லக் காட்சிகள் தெரிந்தன. நான் கீழே இறங்கி நின்றேன். அந்த இடம் ஒரு நெடுஞ்சாலையாக இருந்தது. அந்த இடத்தில், நான் நடந்து போனேன். அங்கே ஒரு விநாயகர் கோயில் இருந்தது. உள்ளே போய் சிறிது நேரம் யாரோடு பேசினேன், என்ன பேசினேன் என்று தெரியவில்லை. ஆனால், அந்த இடம் திருவெற்றியூர் என்றும், சிவன் கோயிலுக்கு அருகே இருக்கிற விநாயகர் கோயில் என்றும் மனசுக்குத் தோன்றியது. மறுபடியும் கண் விழித்துப் பார்த்தபோது, திருவண்ணாமலையில் இருந்தேன்" என்று சர்வ சாதாரணமாக, எந்தவிதக் கர்வமுமின்றி அந்த விஷயத்தை வெளிப்படுத்தினார். வான் மார்க்கமாகப் போய், தன் அன்பருக்குக் கொடுத்த ஹஸ்த தீட்சையைத் தான் தந்ததாக ஒருபோதும் அவர் சாதித்துக் கொள்ளவில்லை. தன்னால் அவ்விதம் செய்ய முடியும் என்று பறைசாற்றிக்கொள்ளவில்லை. அது பற்றி அவராக வாய் திறக்கவும் இல்லை. காவிய கண்ட கணபதி, இது பற்றி அன்பர்களிடம் சொல்லி, அந்த அன்பர்கள் வினவிய பின்பு, அதாவது கிட்டத்தட்ட 21 வருடங்களுக்குப் பிறகு, ‘ஆமாம், அப்படி நடந்தது’ என்று, மறுக்காமல் ஒப்புக்கொண்டார். அதை மறைக்கவும் இல்லை; தன்னால் அப்படிச் செய்யமுடிந்தது என்று கொண்டாடிக்கொள்ளவும் இல்லை. என்னவோ அப்படி நடந்தது என்று மிக எளிமையான விஷயமாக அதைச் சொல்கிறார்.

தீபாவளி பண்டிகையின் நோக்கம்


தீபாவளி பண்டிகையின் நோக்கம்



சொன்னவர் காஞ்சி சந்திரசேகர சுவாமிகள்


தீபாவளி அன்று அமாவாஸ்யை தர்ப்பணமும் சேர்ந்து வந்துள்ளது. பித்ரு தர்ப்பணம் செய்பவர்கள் தர்ப்பணத்தன்று எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் இல்லையே. சற்று குழப்பமாக உள்ளது. 

பொதுவாக தர்ப்பணம் செய்யும் நாளன்று எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது. ஆனால், தீபாவளி அன்று நாம் அனுஷ்டிப்பதற்கு பெயர் கங்கா ஸ்நானம் என்பதாகும். அவசியம் எல்லோரும் இதை அனுஷ்டிக்க வேண்டும்.


மஹா பெரியவா அவர்கள் இந்த கங்கா ஸ்நானத்தை பற்றி சொல்லியிருப்பதை சற்று இங்கு பார்ப்போம்:


’பிள்ளை போன நாளைப் பண்டிகையாக எல்லோரும் எந்தக் காலத்திலும் நின்று போகாமல் செய்து வரவேண்டும்’ என்று பூமாதேவி ஆசைப்பட்டாள். பண்டிகை என்பதால் மங்கள ஸ்நானம், புது வஸ்திர தாரணம், பக்ஷண போஜனம் எல்லாவற்றையும் ஏற்படுத்திக் கொடுத்தாள். இதிலே பிள்ளை நினைவு வரும்படி புதிசாக, நூதனமாக ஏதாவது இருக்க வேண்டுமென்று உதயத்துக்கு முந்தியே தைல ஸ்நானம் செய்ய வேண்டும் என்று வரம் வாங்கினாள். பகவானே இதற்கு ஒப்புக் கொண்டும் கூட, இப்படி சாஸ்திர விரோதமாக அப்யங்கனம் பண்ண யாராவது பயப்படப் போகிறார்களே என்று நினைத்து, பயம் போகும்படியாக என்ன செய்யலாம் என்று பார்த்தாள். ‘அன்றைக்கு அந்த வேளையில் தேய்த்துக் கொள்கிற எண்ணையில் லக்ஷ்மியும், குளிக்கிற வெந்நீரில் கங்கையும் வஸிக்கும்படி செய்துவிட்டால் யாரும் பயப்பட மாட்டார்கள்; லக்ஷ்மியும் கங்கையும் வேண்டாம் என்று எவருமே நினைக்க மாட்டார்கள். இதனால் ஸகல ஜனங்களுக்கும், பண்டிகை என்ற ஸந்தோஷத்துடன் புண்ணியம் என்பதும் கிடைக்கும்’ என்று நினைத்தாள். இதனால்தான் அந்த ஸ்நானத்துக்கு கங்கா ஸ்நானம் என்றே பேர் ஏற்பட்டது.”


சரி, விஷயத்துக்கு வருவோம்.


சாதாரணமாக மற்ற நாட்களில் நாம் எண்ணெய் தேய்த்துக் குளிப்போமே அந்த குளியல் மாதிரி கிடையாது இது. கங்கா ஸ்நானம் என்பது சாஸ்த்ரத்தில் எடுத்துள்ள ஒரு அனுஷ்டானமாகும். ஆதலால் அனைவரும் அதி காலையில் விதிப்படி கங்கா ஸ்நானம் செய்யலாம்.புத்தாடையும் உடுத்திகொள்ளலாம். தோஷமில்லை.

பிறகு சுமார் காலை 9 மணிக்கு பிறகு மீண்டும் குளிர்ந்த நீரில் அல்லது வெந்நீரில் ஒரு ஸ்நானம் செய்து மடியாக வஸ்த்ரம் தரித்து தர்ப்பணம் செய்பவர்கள் தர்ப்பணத்தை அனுஷ்டிக்கலாம்.



  PIXXEL: CAPTURING EARTH'S ESSENCE FROM THE SKY In today's world most of the mobile buyers used to buy mobile phones with best pixe...