ஞாயிறு, 30 மே, 2021

Dr. Henry Meyer பற்றிய CHEIROவின் கணிப்பு

Dr.Henry Meyer

CHEIRO சொன்னபடி Dr. Meyer இன் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாறியதா?. அதை தெரிந்து கொள்வதற்கு முன் யார் இந்த Dr Henry Meyer. என்ன குற்றத்துக்காக தண்டனை அனுபவிக்கிறார் என்று பார்ப்போம். Dr. Meyer என்பவர் ஒரு மருத்துவர். அவர் தன்னிடம் மருத்துவம் பார்த்துக்கொள்ளும் நோயாளிகளில் வசதி படைத்த நபருக்கு உயிர் காப்பீடு (Life Insurance) எடுத்து வைத்து கொள்வார். அன்றைய காலகட்டத்தில் ஒருவருக்கு காப்பீடு உறவினர்கள் மட்டும் தான் எடுக்க வேண்டும் என்று இல்லை, யார் வேண்டுமானாலும்  எடுக்கலாம். அதனால் மருத்துவரான Meyer தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு காப்பீடு எடுத்து அவர்களை தான் கற்ற மருத்துவத்தின் மூலமே கொலை செய்துவிட்டு காப்பீடு தொகையை பெற்றுவிடுவார். இப்படிப்பட்ட ஒருவருக்கு மரணதண்டனை விதிப்பது என்பது ஞாயம் தானே. இதை தான் நிருபரும் எண்ணினார். அனால் நடந்தவை என்னவென்றால். அந்த பரபரப்பான தீர்ப்பு நாளும் வந்தது. அதில் Dr. Meyerக்கு  தொழில்நுட்ப காரணத்தினால் (On Techincal Grounds), மரண தண்டனைக்கு பதிலாக ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பு வழங்கினார். CHEIROவின் கை ரேகை கணிப்பும் பலித்தது. CHEIRO, Dr.Henry Meyer என்பவர் ஒரு கொலை குற்றவாளி என்று அவருடைய கை ரேகை பதிவிலிருந்து எவ்வாறு கண்டு பிடித்தார். CHEIRO Dr.Henry Meyerஇன் கை ரேகை பற்றி இவ்வாறு கூறினார் "Line of Head or Line of Mentality" கை ரேகை அவருடைய உள்ளங்கையில் வித்யாசமாக ஓடியது. அதாவது அந்த கை ரேகை அவருடைய உள்ளங்கையில் நடுவில் ஓடியது மட்டுமல்லாமல் அது அவருடைய நாலாவது விரலை (மோதிர விரல்) நோக்கி சென்றது. பொதுவாக "Line of Head or Line of Mentality" ரேகை மூன்று விதமாக இருக்கும்,  "Line of Head or Line of Mentality", "Line  of Life" க்கு மேல்புறமாகவோ, உள்புறமாகவோ அல்லது இணைந்தோ இருக்கும். அவ்வாறு இல்லாமல், ஒரு அசாதாரணமான விதத்தில் "Line of Head or Line of Mentality" Dr. Henry Meyer உடைய உள்ளங்கையில் இருந்தது என்று கூறினார். Dr. Henry Meyer உடைய கை ரேகை பதிவை கீழே கொடுத்தெள்ளேன். மேலும் CHEIRO அவர்கள் Dr. Henry Meyer மரண தண்டனையிலிருந்து எவ்வாறு தப்பிப்பார் என்று எதை பார்த்து உறுதிபண்ணினார் என்று அவர் இவ்வாறு கூறினார், "Line of Life" ரேகையில் தான் எந்த வித தடங்களையும் காணவில்லை என்று கூறினார்.

 

CHEIRO வின் சுவாரஸ்யங்கள் தொடரும்.





CHEIRO வின் சுவாரஸ்யங்கள்


CHEIRO


முந்தய கட்டுரையில் CHEIRO வின் கை ரேகை நிபுணத்துவத்தை பற்றி சோதித்த "NewYork World" என்ற பத்திரிகையின் நிருபர் எப்படி ஒரு கை ரேகையை பார்த்து ஒருவர் கொலை குற்றவாளி என்று இவரால் கண்டறிய முடிந்தது என்று ஆச்சர்ய பட்டார். மேலும் இவரோ மரண தண்டனையை எதிர்நோக்கி கொண்டிருக்கும் ஒரு கொலை குற்றவாளி. இவருக்கு எப்படி Dr. Meyerக்கு  விதிக்கப்படும் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றப்படும் என்றல்லாம் பல கேள்வி கனைகுளுடன் CHEIRO விடம் இருந்து விடைபெற்றார். நிருபர் CHEIRO விடம் எதையும் கூறாமல் விடைபெற்றார். CHEIRO விற்கு தான் ஆராய்ந்து கூறிய கை ரேகை பதிவுகள் எல்லாம் உண்மையா என்று தெரிந்து கொள்ள ஆவல். CHEIRO நிருபரிடம் அதை கேட்டும் விட்டார். அனால் நிருபரோ இந்த கேள்விக்குண்டான பதில்களை வரும் ஞாயிறு அன்று வரும் நியூ யார்க்   "World" பத்திரிகையில்  தெரிந்து கொள்வீர்கள் என்று கூறிவிட்டு சென்றார். CHEIROவால் சனி கிழமை இரவு முழுவதும் சரியாக தூங்க முடியவில்லை. ஞாயிறு பொழுது விடிந்ததும் தன்னுடைய பணியாள் கதவை தட்டி பத்ரிக்கையினை கொடுத்தார். அதில் இவ்வாறு எழுதி இருந்தது " CHEIRO கை ரேகை படித்த படிவங்களின் நபர்களான Mayor , District  Attorney, Nicoll Ward McAllister , Dr. Meyer போன்றவர்களான வாழ்க்கை பற்றி  வெற்றிகரமாக படித்தார்" என்று கொட்ட எழுத்தில் இருந்தது.  

இப்போழுது நிருபரின் மனதில் எழுந்த கேள்வி Dr. Meyerக்கு விதிக்க படவிருக்கும் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாறுமா?, CHEIRO சொன்னவை பலிக்குமா?. இதை பற்றி தெரிந்து கொள்ள அடுத்த பதிவில் காணலாம்.

வெள்ளி, 28 மே, 2021

ஜோதிடம் உண்மையா அல்லது பொய்யா

ஜோதிடம் உண்மையா அல்லது பொய்யா  

ஜோதிடம் உண்மையா அல்லது பொய்யா என்று நிறைய விவாதங்கள் உண்டு. அனால் அதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்க போவதில்லை. ஜோதிடம் என்பது ஒரு அற்புதமான கலை. அந்த கலையை பற்றி தெரிந்து கொள்வதற்காக ஒரு ஐரிஷ் நாட்டை சேர்ந்த ஒருத்தர் நம் இந்திய நாட்டுக்கு வந்து அக்கலைகளில் ஒன்றான கை ரேகை சாஸ்திரத்தை கற்று உலக புகழ் பெற்றார். அவருடைய பெயர் CHEIRO. இவருடைய இயர் பெயர் William John Warner. கை ரேகை சாஸ்திரத்தை பற்றிய பல புத்தகங்களை எழுதியுள்ளார்.  அவருடைய கை ரேகை நிபுணத்துவம்  பற்றி சிலவற்றை இங்கு பாப்போம்.

நான் முதலில் சொன்னது போல் ஜோதிடம் உண்மையா பொய்யா என்று நம் நாட்டில் மட்டும் அல்ல உலக நாடுகளிலும் இதே நிலை தான் நிலவியது. CHEIROவை சோதிப்பதற்காக அமெரிக்காவில் உள்ள "NewYork  World" என்ற பத்திரிக்கை ஒரு சோதனை வைத்தது. அந்த சோதனை என்னவென்றால் ஒரு 13 மனிதர்களுடைய கை ரேகை பதிவுகளை CHEIRO விடம் கொடுத்து அவர்களை பற்றிய விவரங்களை CHEIRO தன் கை ரேகை நிபுணத்துவின் மூலம் சொல்ல வேண்டும். CHEIRO அவரிடம் கொடுத்த 13இல் ஒரு கை ரேகை பதித்த பிரதியை மட்டும் தனியாக வைத்து விட்டு மற்ற கை ரேகை பிரதிகளை ஆராய்ந்து அவர்களுடைய குணாதிசயங்கள், அவர்களுடைய தொழில் போன்றவற்றை துல்லியமாக சொன்னார். அவரை பேட்டி எடுத்த நிருபர் ஒரு கை ரேகை பிரதி மட்டும் பாக்கி இருக்கு என்று கூற, CHEIRO இது  ஒரு கொலை குற்றவாளியின் கை ரேகை என்று கூறினார். அவரை பேட்டி எடுத்த நிருபர் அதிர்ந்து போனார். ஆம் அது ஒரு தூக்குத்தண்டனையை எதிர் கொண்டிருக்கும் ஒரு கொலை குற்றவாளியின் கை ரேகை தான். CHEIRO அவரை பற்றி இவ்வாறு தெரிவித்தார் " அந்த மனிதர் ஒரு குற்றம் இழைத்தாரா அல்லது பல குற்றம் இழைத்தாரா என்பது முக்கியமில்லை. ஆனால் இவர் தன்னுடைய நாற்பத்தி நாலாவது வயதில் இவருடைய குற்றங்கள் கண்டறியப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க படுவார்". CHEIRO அதோடு மட்டும் விடவில்லை, அவர் கூறிய மற்றொரு விஷயம் நிருபரை மட்டும் அல்ல எல்லோரையும் ஆச்சர்ய படவைத்தது. அது என்னவென்றால் இந்த  கொலை குற்றவாளியின் தூக்குத்தண்டனை ரத்தாகி அவர் தன் ஆயுள் முழுவதும் சிறையில் இருந்து தன் வாழ்நாளை கழிப்பார். அந்த கொலை குற்றவாளியின் பெயர் Dr . Henry Meyer.  CHEIRO வை பற்றிய சுவாரசியங்கள் தொடரும்.



  PIXXEL: CAPTURING EARTH'S ESSENCE FROM THE SKY In today's world most of the mobile buyers used to buy mobile phones with best pixe...