சனி, 27 நவம்பர், 2021

CHEIRO வின் சுவாரஸ்யங்கள் PART 4

 CHEIRO வின் சுவாரஸ்யங்கள் PART 4



CHEIRO தன்னுடைய secretary இடம் தான் கை ரேகை பார்க்கும் நபரின் விபரஙகளை தெரிவிக்க வேண்டாம் என்று உத்தரவு இட்டுறுந்தார். அது எதற்காக வென்றால் தன்னிடம் கை ரேகை பார்க்கும் நபர்கள் பெரும்பாலானோர் பிரபல்யம் ஆனவர்களாக இருப்பதாலும், அவர்களை பற்றி முன்னமே தெரிந்து இருப்பதனால் தான் கை ரேகையை பார்த்து அலசி கூறினாலும், அவரை பற்றி ஏற்கனவே தெரிந்ததால் கூறுகிறோம் என்று நினைக்க வாய்ப்பு உண்டு என்பதற்காக. ஒருமுறை அமெரிக்காவின்  எழுத்தாளரும் நகைச்சுவையாளருமான Mark Twain என்பவர் CHEIRO, விடம் தன்னுடைய கையை காண்பித்து எதிர்காலத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு வந்திருந்தார். CHEIRO விற்கு வந்திருப்பவர் பிரபல எழுத்தாளர Mark Twain என்பது தெரியாது. Mark Twain அவர்கள் அப்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தார். Mark Twain அவர்கள் CHEIRO வை சந்திப்பதற்காக வந்து விட்டாரே தவிர மனதுக்குள் தான் நேரத்தையும் பணத்தையும் வீன் செலவு செய்கிறோமோ என்ற நினைப்பு மேலோங்கி இருந்தது. நாம் அனைவரும் நினைப்போம் அல்லவா, "வந்தது வந்து விட்டோம் அவர் என்னதான் சொல்ல போகிறார் என்று பார்த்து விடலாம்" என்று அவர் காத்திருந்தார். CHEIRO அவர்கள் Mark Twain அவர்களின கைகளை பார்த்து துல்லியமாக அவருடைய கடந்த காலத்தை கூறினார். Mark Twain அவர்களுக்கு ஒருத்தருடய எதிர்காலத்தை பற்றி முன்னமே தெரிந்து கொள்வது ஆச்சரியமாக இருந்தது. 

எழுத்தாளர் அல்லவா, எதையும் ஆதாரம் இல்லாமல் நம்புவதற்கு மனம் ஒப்பவில்லை. அதனால் அவர் CHEIRO விடம் பல கேள்விகளை கேட்டு தெளிந்தார். CHEIRO அவர்கள் தன்னிடம் உள்ள இரண்டு கை ரேகை பதிவுகளை காட்டி அதில் உள்ள ரேகைகள் ஒன்று போல் உள்ளதை காண்பித்தார். அவர்களுடைய வாழ்க்கையிலும் ஒரே மாதிரியான சம்பவங்கள் நடந்தேறின என்பதை கூறினார். அந்த இரண்டு கை ரேகை பதிவுகளில் ஒன்று தாயுடயது மற்றொன்று மகளுடயது என்று CHEIRO கூறினார். இந்த சம்பவம் Mark Twain அவர்கள் எழுதிய நாவலான "Pudd’nhead Wilson" க்கு கதை கருவாக அமைந்தது.

மேலும் Mark Twain அவர்கள் Cheiro வின் கைரேகை பதிவு புத்தகத்தில் இவ்வாறு எழுதினார் "Cheiro அவர்கள் என்னுடைய குணத்தினை மிக துல்லியமாக கூறினார். இதை நான் கூற கூடாது என்று நினைத்தாலும் Cheiro வின் ஆளுமை என்னை இதை ஒப்புக்கொள்ள வைத்தது".





புதன், 17 நவம்பர், 2021

இந்துமத சாஸ்திரத்தில் பெண்களுக்கு ஸ்ரார்த்தம் அதாவது மூதாதையரகளுக்கு திவசம் கொடுக்கும் உரிமை இல்லையா


இந்துமத சாஸ்திரத்தில் பெண்களுக்கு ஸ்ரார்த்தம் அதாவது மூதாதையரகளுக்கு திவசம் கொடுக்கும் உரிமை இல்லையா?

இந்த கேள்விக்கு எழுத்தாளர் பாலமுருகன் அவர்கள் ஒரு பெண்மணிக்கு கொடுத்த அற்புதமான இதிகாச புராணத்தை மேற்கோள் காட்டி கூறிய விளக்கம்.

"இந்துமத சாஸ்திரத்தில் மனைவிக்கு தர்ப்பணம் செய்கின்ற உரிமை இல்லை. கணவன் செய்யும்பொழுது அருகில் இருந்தும், இறந்து போன தன் கணவனுக்கு மகன் செய்கிறபொழுது தொலைவிலிருந்தும் அவள் பார்க்க வேண்டும் என்றே விதித்திருக்கிறது."

"நான் என் தகப்பனாருக்கு இதுபோலவே தர்ப்பணம் செய்ய விரும்புகின்றேன். இன்னும் சிறப்பாக செய்ய விரும்புகின்றேன். வெறும் நீர் அல்லாது மற்ற பண்டங்களும் செய்ய விரும்புகின்றேன். நான் திவசம் செய்யக் கூடாதா? பெண்களுக்கு அந்த உரிமை இல்லையா என்று ஒரு பெண் எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களிடம் கேட்டார். அதற்கு பாலகுமாரன் அவர்கள் "ஆஹா. நீங்கள் தாராளமாக செய்யலாமே" என்று அவரிடம் சொன்னதும் அவர் முகம் மலர்ந்தார். "உண்மையாகவா, அல்லது வெற்று சமாதானமா." "உண்மையாக. ஒரு பெண்மணி தெவசம் செய்திருக்கிறார்." "யார்?" "சீதாபிராட்டி" "எப்போது? எங்கே? வனவாசத்தில் இராமர் தசரதருக்கு செய்ய வேண்டிய பித்ருக்களான நாள் வந்ததும் அதை செய்ய வேண்டும் என்று நினைத்தார். நடு வனாந்தரத்தில் இருந்தார். "லக்ஷ்மணா, கிராமங்களுக்கு போய் ஏதாவது தானியங்கள் வாங்கி வா. சிரார்த்தத்திற்கு உண்டான பொருள்களை சேகரித்து வா" என்று கட்டளை இட்டார். லக்ஷ்மணன் விரைவாகப் போனார். "சீதா, நானும் இங்கே ரிஷிகளின் ஆசிரமத்தில் படைக்கப்பட வேண்டிய உணவுகள் ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு வருகிறேன். அந்த தானியங்களை சமைத்து நாம் உணவாக நம் பித்ருக்களுக்கு கொடுக்கலாம்" என்று ராமரும் நகர்ந்து போனார். சிரார்த்தம் செய்ய வேண்டிய நேரம் நெருங்கியது. சீதாபிராட்டி, கணவனும் வரவில்லை. கொழுந்தனும் வரவில்லையே என்று கவலைப்பட்டாள். சிரார்த்த காலம் முடியும் நேரம் நெருங்கையில் எழுந்தார். மனம் குவித்தார். சில பழங்களை சுட்டு மணல் மேட்டின் மீது வைத்தார். கையில் இருந்த சிறிது மாவை பிடித்து கெட்டியாக்கி அருகிலிருந்த மரத்திலிருந்து தேன் சேகரித்து அதை பிசைந்து இலையில் வைத்து மனம் உருகி தன் மாமனாரை வேண்டினார். 'இந்த வனாந்தரத்தில் எங்களுக்கு கொடுப்பதற்கு இதைத் தவிர வேறு எதுவும் இல்லை. தயவு செய்து வந்து எடுத்துக் கொள்ள வேண்டும். நேரே வந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் என் மனம் சாந்தி அடையும்' என்று சொல்ல, அங்கு சில உருவங்கள் தோன்றின. அந்த மாவு பிண்டத்தின் மீதும், பழங்கள் மீதும் தங்கள் கையை வைத்து எடுத்துக் கொண்டதுபோல சுவீகரித்தன. 'நீங்களெல்லாம் யார்?' கொஞ்சம் திகைப்புடன் சீதாபிராட்டி கேட்டார். அவருக்கு வந்திருந்த உருவங்கள் எதையும் அடையாளம் காண முடியவில்லை. "நான் தசரதன். உன்னுடைய மாமனார் இவர்களெல்லாம் நம்முடைய முன்னோர்கள். இவர்களை வணங்கி அவர்கள் வாழ்த்தை பெற்றுக்கொள். நீ கொடுத்த தேனும் மாவும் மிகுந்த சந்தோஷமாக இருந்தது. சுட்ட பழம் சுவையாக இருந்தது. மனம் உருகியும், முழுமனதோடும், நல்ல அன்போடும் நீ கொடுத்த இந்த பண்டங்களை நான் எடுத்துக் கொண்டேன். நீ மிகவும் சிரத்தையாக சிரார்த்தம் செய்திருக்கிறாய். அன்பும், அடக்கமும் கலந்த இந்த சிரத்தை என்னை சந்தோஷப்படுத்தியது" என்று வாழ்த்தினார். "நீங்களெல்லாம் வந்திருப்பது தெரிந்தால் என் கணவர் எவ்வளவு சந்தோஷப்படுவார். நான் சிரார்த்தம் செய்தேன். அவைகளை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள் என்று நான் அவரிடம் சொன்னால் என்னை நம்புவாரா." "நிச்சயம் நம்புவார். அதற்குண்டான சாட்சிகளை தயார் செய்து கொள்." என்று தசரதர் கட்டளை இட்டார். "பசு நீ தயவு செய்து சாட்சியாக இருந்து என் மாமனாரோடு நான்பேசியதை என் கணவரிடம் தெரிவிக்க வேண்டும். ஏ! தாழம்பூவே. என் மாமனார் வந்திருக்கிறார். அவருக்கு உன் அடிமடியில்தான் நான் தினைமாவு வைத்தேன். நீ சாட்சியாக இருக்க வேண்டும். ஏ! அக்கினியே. நீ விளக்காக இருந்து இந்த சிரார்தத்திற்கு நடுவே என் மாமனார் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தாய். நீ சாட்சியாக இருக்க வேண்டும். ஏ! பல்குனி நதியே! உன்னுடைய நதியின் நீர் எடுத்து வந்துதான் இங்கு சுத்தம் செய்தேன். இந்த பண்டங்களை சுற்றி உன் நீரால்தான் அவருக்கு நிவேதனம் செய்தேன். எனவே, நீராகிய நீயும் எனக்கு சாட்சியாக இருக்க வேண்டும்" என்று சொன்னாள். "இவர்களை சாட்சியாக வைத்து மறுபடியும் உங்களை வணங்குகின்றேன். நீங்கள் என் சிரார்த்தத்தை ஏற்றுக் கொண்டது மிகவும் மகிழ்ச்சி. நான் பாக்கியசாலி. நான் நலமோடு என் புருஷனோடு நீண்ட நெடுங்காலம் இருக்க என்னை ஆசிர்வதியுங்கள்" என்று வணங்கினார். தசரதரும், அவரது முன்னோர்களும் சீதாபிராட்டியை ஆசிர்வதித்தார்கள். சிரார்த்தம் முடிந்ததும் சீதாபிராட்டி களைப்புடன் மரத்தடியில் உட்கார்ந்து கொண்டார். கண்மூடி தன் மாமனாரையும், வந்திருந்த மற்ற முன்னோர்களையும் மனதுக்குள் இருத்திக் கொண்டாள். தபதப்வென்று இராமர் ஓடி வருகின்ற சப்தம் கேட்டது. "எழுந்திரு. எழுந்திரு என்ன பகல் தூக்கம். நான் ஒரு ரிஷியிடம் சிலநல்ல விஷயங்கள் வாங்கி வந்திருக்கிறேன். எங்கே லக்ஷ்மணன்!" என்று கேட்க லக்ஷ்மணன் வேகமாக நடந்து வந்தான். அவனிடமும் நிறைய பண்டங்கள் இருந்தன. "இந்தா இதை வறுத்து வை. இதை அவித்து வை. இந்தா. என்று விதம்விதமான பண்டங்களை அவர் நீட்டினார். "இவையெல்லாம் நல்ல பண்டங்கள் பித்ருக்களுக்கு கொடுப்பதற்கு உகந்த பண்டங்கள்" என்று இராமர் சந்தோஷப்பட்டார். மெல்ல சீதை தயங்கினாள். "என்ன? இன்னும் தூக்கம் போகவில்லையா?" "இல்லை. நான் தூங்கவேயில்லை." "பிறகு என்ன செய்து கொண்டிருந்தாய்?" "சிரார்த்தம் செய்தேன்." "யாருக்கு?" "என்னுடைய மாமனாரான உங்கள் தகப்பனாருக்கு." "எப்படி?" "இதோ தேனும், மாவும் இருக்கிறது. பழங்கள் சுட்டு வைத்து அவைகளை இலையில் வைத்து படைத்தேன். இந்த இடத்தை சுத்தம் செய்தேன். அவர்களை வந்து எடுத்துக் கொள்ளும்படி வேண்டினேன்." "பிறகு?" "உங்கள் தகப்பனாரான என் மாமனார் நேரில் வந்து, மிக்க சந்தோஷம். உன் சிரார்த்தத்தை எடுத்துக் கொள்ள வந்தேன். இந்த பண்டங்கள் சுவையாக இருக்கின்றன. நீ சிரத்தையாக செய்த சிரார்த்தம் என்னை ஸ்வீகரித்தது. என்னை மகிழ்ச்சி படுத்தியது. இவை அனைத்தையும் நான் ஸ்வீகரிக்கிறேன்" என்று சொன்னார்." "அடடா, இதை எப்படி நம்புவது?" ஸ்ரீ இராமர் உரத்த குரலில் கேட்டார். "அந்த சந்தேகம் எனக்கும் வந்தது. என்ன செய்வது என்று என் மாமனாரையே கேட்டேன். யாரையாவது சாட்சியாக வைத்துக் கொள் என்று சொன்னார்." "அப்படியா. நீ செய்த சிரார்த்தத்திற்கு யார் சாட்சி." "இந்த பசு சாட்சி இந்த தாழம்பூ புதர் சாட்சி. இந்த அக்கினி விளக்கு சாட்சி. பல்குனி நதி சாட்சி" என்று அமைதியாகச் சொன்னாள். "இல்லை. என்னால் இவைகளை ஒன்றும் நம்ப முடியவில்லை." "இவர்களை கேளுங்கள். சாட்சி சொல்லும்". "நதியே, புதரே, பசுவே, விளக்கே இவள் சிரார்த்தம் செய்தாளா? ஒரு பெண் செய்த சிரார்த்தத்தை பித்ருக்கள் ஏற்றுக் கொண்டார்களா சொல்லுங்கள்" இராமர் அதட்டலாகக் கேட்டார். புதரும், பசுவும் மிரண்டன. விளக்கு துடித்தது. பல்குனி நதி அமைதியாக இருந்தது. "சொல்லுங்கள்" என்று கேட்க, "நாங்கள் எதையும் அறியோம்" என்று அவைகள் ஒரே குரலில் கூறின. சீதை விக்கித்துப் போனாள். இராமர் சட்டென்று தர்ப்பை பாயில் உட்கார்ந்தார். ஆசமனம் செய்தார். அருகில் தம்பியும் பாய் போட்டு உட்கார அவரும் சிரார்த்தத்திற்கு தயாரானார். "கொண்டு வந்த பொருள்களை வை" என்று கோபம் குறையாமல் சீதையை நோக்கி கட்டளை இட, அவளால் கால தாமதம் ஆகி விடுமே என்று பயப்பட, சீதை விரைவாக செயலாற்றி அவருக்கு முன்பு அந்தந்த விஷயங்களை வைத்து சிரார்த்த காரியங்களை விரைவாகச் செய்ய ஏற்பாடு செய்தாள். நீர் கொண்டு வைத்தாள். மனம் துக்கத்தில் ஆழ்ந்தது. ஸ்ரீ ராமர், சூரியனை நோக்கி வணங்கி, "சூரியனே நீ இங்கு வந்து பிராமணனாக அமர்ந்து இந்த சிரார்த்தத்தை என்னுடைய தந்தையிடம் கொடுக்கும்படியாக வேண்டுகிறேன்" என்றபோது ஒரு அசரீரி கேட்டது. "சிரார்த்தம் முடிந்துவிட்டதே." "என்னது?" "உங்கள் தகப்பனாருக்கு இன்று நீங்கள் செய்ய வேண்டிய சிரார்த்தம் செய்தாகிவிட்டதே" என்று சொல்ல, "யார் பேசுவது? ஏன் மறைந்திருந்து பேசுகிறீர்கள்?" என்று கோபமாக கட்டளை இட சூரியன் எதிரே வந்து நின்றார். "நான் சூரியன் இந்த சிரார்த காரியம் உங்கள் மனைவியால் சிறப்பாக செய்யப்பட்டு பித்ருக்கள் உள்ளே நுழைந்து ஆவலாக அவர்கள் கொடுத்த பண்டங்களை உண்டு அவளை ஆசிர்வதித்துவிட்டு போனார்கள். அந்த பிரசாதத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்ல மனம் நெகிழ்ந்தார். சூரியனை வணங்கி, "சரி" என்று சம்மதித்தார். சூரியன் அந்த இடத்திலிருந்து மறைந்தார். "சந்தோஷமாக இருக்கிறது. என் மனைவியே நான் இல்லாதபோது நான் நெடுந்தூரம் போன போது சிரார்த்த காரியங்கள் செய்தாள். அவை ஏற்கப்பட்டன என்று கேட்க, மிக சந்தோஷமாக இருக்கிறது. சீதையே! நீ மிகப் பெரிய புண்ணியசாலி. இத்தனை நாள் நான் தர்ப்பணம் செய்திருக்கிறேன். மூன்று முறை சிரார்தம் செய்திருக்கிறேன். ஆனாலும் என் தகப்பனோ, என் பித்ருக்களோ என்னிடம் வரவில்லை. நான் சிரத்தையாக செய்யவில்லை போலும். ஆனால் நீ சிரத்தையாகச் செய்து அவர்கள் தரிசனத்தையும், ஆசிர்வாதத்தையும் பெற்றிருக்கிறாய். நீ என்னைவிட பாக்கியசாலி" என்று புகழ்ந்தார். லக்ஷ்மணன் சீதையை விழுந்து வணங்கி ஆசிர்வாதம் பெற்றார். இராமரும், லஷ்மணரும் விலகிய பிறகு அவள் பல்குனி நதியை பார்த்தாள். "என்ன ஏன் பொய் சொன்னீர்கள். அட பல்குனி நதியே. நீ இனி மேலே பிரவாகித்து என்ன பயன். உன்னிடமிருந்து நீர் கொண்டு வந்து செய்த சிரார்தத்தை இல்லையென்று சொல்லிவிட்டாயே. எனவே நீ அந்தர்வாகினியாக பூமிக்கு அடியில் ஓடும் நதியாக இரு" என்று சாபமிட்டாள். பல்குனி நதி சுருண்டு கொண்டது. "தாழம்பூ புதரே. எவ்வளவு அருமையான மணம். எவ்வளவு பெரிய மடல் என்று ஆசையாக உன்னை பறித்து உன் மீது நைவேத்யம் வைத்தேனே. இப்படி தவறாக பேசிவிட்டாயே. இல்லையென்று பொய் சொல்லிவிட்டாயே. நான் தினந்தோறும் பூஜிக்கின்ற சிவன் உனக்கு ஆசிர்வாதம் தரமாட்டார். நீ அவருக்கு பிடிக்காததாக, அவர் மீது சூட்ட முடியாததாக இரு. உனக்கும், சிவனுக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை. ஏ பசுவே, வாய் திறந்து உண்மையை சொல்லியிருக்க வேண்டாமா. உன் வாய் எப்பொழுதுமே கோணலாகவே கிடக்கட்டும். உன்னுடைய பின்பக்கம் நல்ல பாக்கியத்தை பெறட்டும். வாய் அபாக்கியவானாக இருக்கட்டும்" என்று சபித்தாள். விளக்கு துடித்தது. "அக்னி பொய் சொல்லலாமா. அதுதானே சாட்சி. உலகத்தில் எல்லோருக்கும், எதற்கும் சாட்சியாக இருக்கக் கூடியவன். தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் பாலமாக இருக்கக்கூடியவன் நீதானே. உனக்கு நல்லது. கெட்டது தெரியவில்லை. உனக்கு எது சரி, தவறு என்று தெரியவில்லை. உன்னால் உண்மையாக இருக்க முடியவில்லை. நல்லது, கெட்டது தெரியாத நீ எல்லாவற்றையும் அழிப்பவனாக, எல்லாவற்றையும் உருக்குலைப்பவனாக இரு. உன்னால் நல்லவைகள், கெட்டவைகள் சகலமும் தீயட்டும். நல்லவைகளை அழித்த பாவத்தை கடைசிவரை உன் தலையில் விழுந்து கொண்டே இருக்கும்" என்று சபித்தாள். அக்னி துடித்து மெல்ல அடங்கியது. "இதுதான் கதை. சீதை செய்த சிரார்தம் ஏற்கப்பட்டது மட்டும் இல்லை. அந்த சிரார்தத்தை மறுதலித்த நான்கு பேருக்கும் கடும் தண்டனை கிடைத்தது. புரிகிறதா. பெண்கள் சிரார்தம் செய்ய முடியாது என்று எந்த அந்தணனும் சொல்ல முடியாது. உங்களுக்கு அவர்கள் உதவியாக வராவிட்டால் என்ன, நீங்களே காலையில் எழுந்து உடலை தூய்மை படுத்திக்கொண்டு ஒரு இலையில் உங்களுடைய பெற்றோர்களுக்கு வேண்டிய விஷயங்களை நீங்களே தயார் செய்து, இது உனக்காக அப்பா, இது உனக்காக அம்மா. என் மூத்தோர்களே இந்த பண்டங்கள் உங்களுக்காக, என தயார் செய்து அதை படையல் இட்டு, விழுந்து வணங்கி, "என்னால் இயன்றதை செய்தேன். இதை ஏற்றுக்கொள்ளுங்கள். இதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கெஞ்சுங்கள். கண்ணீர் வடிய அவர்களை நினைத்து வணங்குங்கள். அன்று அவர்கள் வருகைக்காக காத்திருங்கள். ஏதோ ஒரு க்ஷணம் அவர்கள் உங்களை தொடுவார்கள். நிச்சயம் உங்களை ஆசிர்வதிப்பார்கள்.




  PIXXEL: CAPTURING EARTH'S ESSENCE FROM THE SKY In today's world most of the mobile buyers used to buy mobile phones with best pixe...