Nayanmaargal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Nayanmaargal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 4 ஜனவரி, 2022

குங்கிலியக் கலய நாயனார்

குங்கிலியக்  கலய  நாயனார் 




அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரான இவருக்கு 'குங்கிலியக்  கலய  நாயனார்' என்ற பெயர் எப்படி வந்தது என்று பாப்போம். இவருடைய இயற்பெயர் 'கலய'. இவர் திருக்கடையூரில் ஒரு அந்தண குடுமபத்தில்  பிறந்தார். இவருக்கு திருக்கடையூரில் இருக்கும் அமிர்தகடேஸ்வரர் அபிராமி கோயிலில் உள்ள ஈசன் பால் உள்ள அதீத பக்தியினால் தினமும் கோயிலில் குங்கிலிய புகை (அதாவது சாம்பிராணி) போடுவது வழக்கம். நல்ல செல்வந்த குடும்பத்தில் பிறந்தவர் என்பதாலும் இந்த குங்கிலிய புகை போடும் தொண்டை நெடுங்காலம் செய்து வந்தார். அதனாலேயே இவருக்கு 'குங்கிலியக்  கலய  நாயனார்' என்ற பெயர் வந்தது. இறைவனார் இவரை சோதிக்க எண்ணினார். வறுமை அவரையும் அவர் குடும்பத்தையும் சூழ்ந்தது. வீட்டில் இருக்கும் விலையுர்ந்த பொருட்களை எல்லாம் விற்க முற்பட்டார். வறுமையிலும் தன்னுடைய குங்கிலிய புகை போடும் தொண்டை தொடர்ந்தார். ஒரு நாள் வறுமை அவர்களை மிகவும் வாட்டியது. விற்பதற்கு வீட்டில் ஒன்றுமில்லை. அவருடைய பெண்டிரும் மக்களும் பசியால் வாடினர். குங்கிலியக்  கலய  நாயனாரின் மனைவியிடம் அவர் கட்டின தாலியை தவிர வேறு பொருள் எதுவும் இல்லை. குழந்தைகளின்  பசியை போக்குவதற்காக தன்னுடைய தாலியை குங்கிலியக்  கலய  நாயனாரிடம் கொடுத்து அரிசி வாங்கி வர அனுப்பினார். 

குங்கிலியக்  கலய  நாயனார்  அரிசி வாங்குவதற்காக சந்தை சென்றார். இறைவன் இவரை சோதிக்க எண்ணினார். ஈசன் குங்கிலிய வியாபாரம் செய்யும் ஒரு வணிகனாக உருமாறி, குங்கிலியம் விற்று கொண்டு வந்தார். குங்கிலியக்  கலய  நாயனார் அரிசி வாங்குவதற்காக அரிசி கடையில் நின்று கொண்டு இருந்தார். நம் அருகில் எதோ குங்கிலிய வாசனை வருகிறதே என்று திரும்பி பார்த்தார். ஒரு வணிகன் கூடை நிறைய குங்கிலியம் விற்று கொண்டு வருவதை பார்த்தார். மனம் இறைவனுக்கு செய்யும் கைங்கரியம் பால் திரும்பியது. வறுமையும் மறந்து போனது. மனைவி எதற்காக இந்த தாலியை கொடுத்தார் என்பதும் மறந்து போனது. குங்கிலியம் விற்கும் வணிகனை நிறுத்தினார். அப்பா! இந்த ஒரு கூடை குங்கிலியத்திற்கு இந்த தாலி போதுமானதாக இருக்குமா? என்று கேட்டார். வந்திருப்பதோ  ஈசன், ஆம் சரியாக இருக்கும் என்று தாலியை பெற்று கொண்டு கூடை குங்கிலியத்தையும் நாயனாரிடம் ஒப்படைத்தார். 

நாயனார் மிகுந்த சந்தோஷத்துடன் குங்கிலியத்தை வாங்கி கொண்டு அமிர்தகடேஸ்வரர் அபிராமி கோயிலுக்கு சென்று கோயில் மடப்பள்ளியில் குங்கிலியத்தை சேர்த்தார். மனதிற்குள் மிகுந்த மகிழ்ச்சியும், சந்தோசமும். இன்னும்  கொஞ்ச நாளைக்கு குங்கிலிய தொண்டுக்கு தடை இல்லை என்று மனம் தேற்றி கொண்டார். அப்படியே  கோயிலில் கண் அசந்து தூங்கினார். அவர் மனைவி, கணவர் வருவார் என்று காத்திருந்து வாசலையே பார்த்திருந்தார். கணவர் வருவதாக தெரியவில்லை. பிள்ளைகளும் அவளும் பசி மயக்கத்திலேயே தூங்கி போனார்கள். உலகத்துக்கே படி அளக்கும் ஈசன் தன் தொண்டனையும், தொண்டன் குடும்பத்தையும் பசியால் வாடுவிடுவாரா என்ன?. 

ஈசன் குங்கிலியக்  கலய  நாயனாரின் மனைவியின் கனவில் தோன்றினார். தாயே! எழுந்திரு உன் வீட்டில் சகல சம்பத்துகளும் இருக்கும்படி செய்தேன். குங்கிலியக்  கலய  நாயனாரின் மனைவி கண் விழித்து பார்த்தார். கனவா அல்லது நினைவா! வீடு முழுவதும் விலையுர்ந்த பொருட்களும், உணவு தானிய பொருட்களும் இருக்கின்றதே. எல்லாம் ஈசனின் கருணை என்று எண்ணி தன கணவருக்காக கரியமுது சமைக்க தயாரானாள். ஈசன் அதோடு விட வில்லை குங்கிலியக்  கலய  நாயனாரின் கனவிலும் சென்று, மகனே! எழுந்திரு, உன் மனைவி உனக்காக கரியமுது சமைத்து காத்து கொண்டிருக்கிறாள். சென்று வயிறார உன் என்று உரைத்தார். குங்கிலியக்  கலய  நாயனார் வீட்டை நோக்கி சென்றார். என்னே ஆச்சரியம் அவர் வீடு முழுவதும் செல்வம் நிறைந்து இருந்தது. மனைவிடம் கேட்டார், மனைவி  தன்னுடைய கனவு பற்றி குங்கிலியக் கலய நாயனாரிடம் தெரிவித்தார். குங்கிலியக்  கலய  நாயனாரும் தன கனவில் வந்து ஈசன் தன்னை சாப்பிட வீட்டிற்கு செல்லுமாறு கூறியதையும் மணிவயிடம் சொன்னார். குங்கிலியக்  கலய  நாயனாரும் அவருடைய மனைவியும் ஈசனின் கருணையை நினைத்து மெய்யுருகி நின்றனர்.




குங்கிலியக்  கலய  நாயனார் பற்றிய மற்றுமொரு சம்பவம்:

திருப்பனந்தாள் என்னும் ஊரில் அருண ஜடேஸ்வரர் என்று திருப்பெயர் கொண்டு ஈசன் வீற்று இருந்தார். அவ்வூரை சோழ மன்னன் ஆண்டு வந்தான். அவ்வூரில் உள்ள அருண ஜடேசவ்ரர் கோயிலை புனரமைக்க எண்ணினான். ஆனால் சோழ மன்னனின் மனதிற்குள் ஒரு சிறிய வருத்தம் இருந்தது. அது என்னவென்றால் கோயிலில் உள்ள லிங்கம் முன் பக்கம் சாய்ந்தவாறு இருப்பது. லிங்கம் எப்படி சாய்ந்தவாரானது? தாடகை (இவர் ராமாயணத்தில் வரும் தாடகை அல்ல) என்னும் பெண்மணி தனக்கு குழந்தை வரம் வேண்டி அருண ஜடேஸ்வரருக்கு தினமும் மாலை தொடுத்து சூட்டினால். ஒரு நாள் மாலையை சூடும் பொழுது தான் உடுத்தி இருந்த சேலை நழுவிற்று, தன சேலையை முழங்கையால் பிடித்து கொண்டால். மாலையையும் கையில் பிடித்து கொண்டால். ஆனால் அவளால் மாலையை உயர்த்தி ஈசனுக்கு சூட முடியவில்லை. ஈசனிடம் மனமுருகி வேண்டினாள், தன் மானத்தையும் காத்து, தன் மாலையையும் ஏற்றுக்கொள்ள வேண்டினாள். ஈசன் பக்தையின் திருவுள்ளத்திற்கேற்ப தன லிங்க மேனியை சாய்த்து மாலையை ஏற்று கொண்டார். அன்றிலிருந்து ஈசனின் லிங்க மேனி சாய்ந்தவாறு இருந்தது.





மன்னனுக்கோ ஈசனின் லிங்க மேனியை நிமிர்த்த வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார். தன்னுடைய சேனைப்படை வைத்து ஈசனின் லிங்க மேனியை நிமிர்த்த முயற்சித்தார். ஆனால் அவருடைய முயற்சி பலனளிக்கவில்லை. தன பட்டது யானையை கொண்டும் ஈசனின் லிங்க திருமேனியை நிமிர்த்த தயாரானார். அதுவும் பலனளிக்கவில்லை. என்ன செய்வதென்று தெரியாது ஈசனிடம் மனமுறுகினார். அருகிலிருந்த பெரியோர்கள் குங்கிலிய கலய நாயனார் பற்றியும் அவருடைய சிவ பக்தியை பற்றியும் கூறினார்கள். ஈசன் எவ்வாறு தன் பக்தைக்காக தன் லிங்க திருமேனியை சாய்த்தாரோ, அதே ஈசன் இன்னொரு பக்தனுக்காக தன்னுடைய லிங்க திருமேனியை நிமிர்த்து கொள்வார், கவலைப்படாதீர்கள் என்று கூறினர். 

குங்கிலியக்  கலய  நாயனாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. குங்கிலிய களைய நாயனார் திருப்பனந்தாள் என்னும் ஊரில் இருக்கும் அருண ஜடேஸ்வரர் கோயிலை நோக்கி சென்றார். ஈசனின் லிங்க திருமேனியை சுற்றி கயிறை காட்டினார். மற்றொரு பக்கம் இருக்கும் கயிறை தன்னுடைய கழுத்தில் மாட்டி கொண்டார். ஈசனை தன் கழுத்தில் மாட்டியிருக்கும் கயிறால் இழுத்தார். ஈசனின் திருமேனி மெல்ல நிமிர்ந்தது. என்னும் வேகமாக இழுத்தார். ஈசனின் லிங்க திருமேனி முழுவதுமாக நிமிர்ந்தது. பட்டத்து யானைக்கு நிமிராத ஈசனின் லிங்க திருமேனி குங்கிலியக்  கலய  நாயனாரின் பக்திக்கு நிமிர்ந்தது. 







  PIXXEL: CAPTURING EARTH'S ESSENCE FROM THE SKY In today's world most of the mobile buyers used to buy mobile phones with best pixe...