திங்கள், 2 நவம்பர், 2020

லம்போர்கினி (LAMBORGHINI) கார்கள் உருவான கதை


லம்போர்கினி (LAMBORGHINI) கார்கள் உருவான கதை




நம் அனைவருக்கும் LAMBORGHINI CARS என்றால் ஆடம்பர கார்கள் என்று தெரியும். அப்படிப்பட்ட LAMBORGHINI CARS  உருவான காரணம் சுவாரசியமானது. FERUCCIO  LAMBORGHINI  என்பவர் திராட்சை விவசாயி குடும்பத்தை சேர்ந்தவர். FERUCCIO  LAMBORGHINI அவர்களுக்கு குடும்ப தொழில் ஆன திராட்சை சாகுபடியில் ஆர்வமில்லை. அதற்க்கு பதிலாக அவருக்கு விவசாயத்துக்கு உபயோகிக்கும் எந்திரங்கள்  மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. அதன் காரணமாக அவர் பழைய ராணுவ எந்திரங்களை  வாங்கி  விவசாயத்துக்கு பயன்படும் எந்திரங்களான 'TRACTORS' ஆக மாற்றி வடிவமைத்தார். அவர் மேலும் பொழுதுபோக்குக்காக புது வகையான ஸ்போர்ட்ஸ் கார்களை வாங்குவதில் ஆர்வம் கொண்டவர். அப்படி வாங்கிய FERRARI காரின் சோதனை ஓட்டத்தின் போது சில குறைபாடுகளை கண்டறிந்தார். 1960 ஆம் ஆண்டு ENZO FERRARI'S கார்கள் உலகளவில் முதல் இடத்தை பிடித்திருந்தது. FERUCCIO  LAMBORGHINI தான் கண்டறிந்த தொழில் நுட்ப குறைபாடுகளை  ENZO FERRARI இடம் கூறினார். ஆனால் ENZO FERRARI அவர்கள் அக்குறைபாடுகளை ஏற்பதற்கு பதிலாக FERUCCIO  LAMBORGHINI இடம் உங்களுக்கு ஸ்போர்ட்ஸ் கார்களை பற்றிய தொழில்நுட்பத்தை விட TRACTORS பற்றிய தொழில்நுட்ப  அறிவு அதிகமாக உள்ளது என்று கூறினார். ENZO FERRARI இன் இந்த கருத்து FERUCCIO  LAMBORGHINI இடம் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுவரை பொழுதுபோக்குக்காக உபயோகித்த சொகுசு கார்களை, உற்பத்தி செய்ய தீர்மானித்தார். மேலும் தனக்கு ஸ்போர்ட்ஸ் கார்களிலும் தொழில்நுட்ப அறிவு உள்ளது என்பதை  ENZO FERRARI க்கு உணர்த்த விரும்பினார்.  FERUCCIO  LAMBORGHINI அவர்கள் பல மாதிரிகளை உருவாக்கினார். 1964 ஆம் ஆண்டு OCTOBER மாதத்தில் "TURIN MOTOR SHOW" வில் தன்னுடைய "LAMBORGHINI 350 GTV" என்னும் உயர் ரக காரை அறிமுகபடுத்தினார். இன்றைக்கு ஆடம்பர கார்களின் பட்டியலில் LAMBORGINI கார்கள் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. 

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்

நமக்கு நல்ல ஆலோசனை எங்கிருந்து வந்தாலும் அதை நாம் ஏற்று கொள்ளவேண்டும். அது ஒரு சாதாரண மெக்கானிக்கிடம் இருந்தாலும் அதில் உள்ள குறைபாடுகளை ஏற்று அதை நாம் திருத்தி கொள்ளவேண்டும். நாம் கூறும் விஷயத்தை ஒருவர் ஏற்க மறுத்தால், அதனை அவர் எவ்வாறு ஏற்பாரோ அவ்வாறு நாம் கூற வேண்டும் உதாரணத்திற்கு LAMBORGHINI யை போல.


  PIXXEL: CAPTURING EARTH'S ESSENCE FROM THE SKY In today's world most of the mobile buyers used to buy mobile phones with best pixe...