வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

புகழ் சித்தன் அக அனுபவ ஆன்மீக கவிதைகள்- 4













ஈசலிறகு  போல இவ்வாழ்க்கை 
ஊசலாடும் உயிர்வாழ்க்கை 

சதமல்ல நிரந்தரமல்ல 
மாயவனின் வலையிலே 
அகப்படும் கயல் போலே

அலையலையாய் வரும் வாழ்க்கை சூழலிலே 
                                                           சுழலாதே மனமே 
தினமே தியானம் செய்து திருவருள் பெறுவோம் 
                                   திருவொற்றியூரானை பணிந்து 

                                                
                                               திருவொற்றியூரான் அடிமை 
                                               புகழ் சித்தன் 
                                                 

புகழ் சித்தன் அக அனுபவ ஆன்மீக கவிதைகள்- 3




பசிப்பிணி போக்கும் தாவரம் போலே 
பிறவிப்பிணி தீர்த்து எமக்கு 
தா   -  வரம் தருவாய் தீர்த்த பதியே 

தாவரம் பசிப்பிணி தீர்க்கும் முகில் மழை போலே 
ஏழை- எளியோர்க்கும் அருள் மழை 
யோக மழை தருவாய் தாண்டவராயா 
தில்லை தாண்டவராயா  

இருப்போருக்கும் இயலாதவருக்கும் எல்லா உயிர்களுக்கும் 
உயிராற்றல்  இயக்கமாய் இறைவனாய் 
தாள -  லயம் நடனமாடும் தில்லை தாண்டவராயா  
ஆனந்த நடனமாடும் ஆலாள கண்டனே திருநீல கண்டனே 

சித்தர்களுக்கும் யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் 
பக்தர்களுக்கும் காட்சி தரும் தில்லை தாண்டவராயா 
பேரெழிலாய் பேரண்டமாய் பேரம்பலமாய் திகழும் தாண்டவராயா 
ஆடிய பாதத்தை பணிந்தே ஆனந்த கூத்தாடுவோம். 


                        சிவ சிதம்பரம் துணை 
                        ஓம் திருச்சிற்றம்பலம் புகழே துணை 


                                                                                                       ஈசன் அடிமை 
                                                                                                       புகழ் சித்தர் 



புகழ் சித்தன் அக அனுபவ ஆன்மீக கவிதைகள் - 1



தாளம் தப்பாமல் 

ஞாலம் ஆடும் ஆட்டம் 

தப்பாட்டம் ஆடினால் 

நான் எங்கே நீ எங்கே 

யார் இங்கே 

                               அன்பே சிவம் 

                              திருச்சிற்றம்பலம் 

                             இவன் - புகழ் சித்தன் 

"Mottainai" a Japanese Word about Conservation of Resources



ஜப்பானிய மக்களிடம் ஒரு வினோதமான பழக்கம் உண்டு. நாம் நமக்கு தேவை இல்லாத ஒரு பொருள் வீட்டில் இருந்தால், ஒன்று அதை குப்பையில் போட்டு விடுவோம் அல்லது பழைய பொருட்களை  வாங்குபவரிடம் விற்று விடுவோம். ஆனால் அவர்கள் அப்படி செய்வதில்லை. ஜப்பானிய மொழியில் "MOTTAINAI" என்று ஒரு வார்த்தை உண்டு, அதன் அர்த்தம் கடவுள் நமக்கு கொடுத்த வளத்தை வீணாக்கக்கூடாது அல்லது பாதுகாக்க வேண்டும். ஜப்பானியர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் எந்த ஒரு பொருளையும் தூக்கி போடுவதில்லை, அதற்க்கு பதிலாக அந்த பொருளை எப்படி மேலும் உபயோக படும்படி செய்வது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். இந்த தத்துவத்தை பற்றி "SONY" நிறுவனத்தின் தலைவர் தன்னுடைய சுயசரிதை புத்தகமான " MADE IN JAPAN-AKIO MORITA & SONY" என்ற புத்தகத்தில் கூறியிருப்பார். அவர் அந்த புத்தகத்தில் ஜப்பானியர்களாகிய நாங்கள் எந்த பொருளையும் வீணடிக்க மாட்டோம். மேலை நாடுகளில் குளிரை தாக்கு பிடிக்க அறை முழுவதும் ஹீட்டரை பயன்படுத்துவார்கள் ஆனால் ஜப்பானியர்கள் அப்படி செய்வதில்லை அதற்க்கு பதிலாக கால்களை மட்டும் வெது வெதுப்பாக வைத்து கொள்ள எலக்ட்ரிக் ஹீட்டர்களை பயன்படுத்துவோம். 

நோபல் பரிசு வென்ற Wangari Mathai, "Mottainai" என்ற ஜப்பானிய வார்த்தையை தன்னுடைய சுற்று சூழல் பாதுகாப்பு பிரசாரத்தில் உபயோக படுத்தினர். 2009ஆம் வருடத்தில் நடந்த "United Nations Summit on Climate Change" என்னும் தலைப்பில் சேமிப்பு (Reduce), மறுபயன்பாடு (Reuse), மறுசுழற்சி (Recycle) என்னும் மூன்று "R" இன் பயன்பாட்டை "Mottainai" என்னும் ஜப்பானிய வார்த்தையின் மூலம் பிரபலப்படுத்தினார்.

"Conservation of Resources", "Waste Recycling", "Environmental Protection" போன்ற நவீன கோட்பாட்டுகளை கடை பிடிப்பதற்கு நாமும் ஜப்பானியர்களை போல் வாழ கற்று கொண்டு நம் பிள்ளைகளுக்கும் கற்று கொடுக்க வேண்டும்.

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

புகழ் சித்தன் அக அனுபவ ஆன்மீக கவிதைகள் - 2

காற்றின் சலனங்கள் கீதமே 
மரம், செடி, கொடி, நடனமாட 

நீரோடையின் சலனங்கள் 
உயிரினங்களின் தாகம் தீர்க்க

செந்தீயின் சலனங்கள் 
உலகிற்கு உதவிட 

மேகத்தின் சலனங்கள் 
உயிர் மழை ஜீவ மழை 
சகலத்திற்கும் ஜகத்திற்கும் 
அகிலத்திற்கும் ஆண்டவனின்  
அகப்பார்வையினாலே இயங்க வைத்த இறைவா 

மேகங்களில் சலனமாடும் திருநீலகண்டேஸ்வரா 
ஜலங்களிலே சலனமாடும் ஜலகண்டேஸ்வரா 
தீயினிலே சலனமாடும் அருணாச்சலேஸ்வரா 
அனைத்திற்கும் ஆதார பொருள் நீயே 

காலத்தை இயக்கும் காலபைரவா 
அடைந்தேன் உன்னை சரணடைந்து 
சர்வ வியாபக பொருள் தத்துவமே 
தத்துவமசி சிவத்துவமசி 

சிவஓம் சிவஓம் என்று 
உன்னை சரணடைந்தேன் 

                                         சிவன் அடிமை 
                                         திருச்சிற்றம்பலம் 
                                         புகழ் சித்தன் 

புகழ் சித்தன் அக ஆன்மீக அனுபவ கவிதைகள்


விக்னங்களை தீர்க்கும் 

விக்னேஸ்வராயா நமஹ 

ஆக்ஞா சக்கரம் திறக்க 

அருள்புரிவாய் ஆனைமுகனே 


இவன் - புகழ் சித்தன் 

ஓரை அறிந்து செயல்பட உங்களை யாராலும் ஜெயிக்க முடியாது



ஓரை என்பது நாட்காட்டியில் 24 மணிநேரமும் செயல்படும் முட்களை போன்றது. வேத ஜோதிடத்தில்  ஏழு கிரஹத்திற்கும் தனி தனியே ஒவ்வொரு நாட்களுக்கும் பகல் இரவு உட்பட ஓரைகள் பிரிக்கப்பட்டுள்ளது. 

ஞாயிறு கிழமையன்று சூரியனின் ஹோரையால் அந்த நாள் துவங்கி சூரியனின் ஆதிக்க நாளாக வேத கால ரிஷிகளால் அருளப்பட்டது. அது அனுபவத்திலும் சரியானதாக இன்றளவும் செயல்பட்டுவருகிறது. 

மேற்குறிப்பிட்டது போல திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில்  முறையே சந்திரன், செவ்வாய், புதன் போன்ற கிரஹங்களின் ஆதிக்க நாட்களாக அந்தந்த கிழமைகளில் அந்த நாளின் ஆதிக்கத்திற்குட்பட்ட கிரஹத்தின் ஓரைகள் அந்த நாளின் சூரிய உதயத்திற்கு பின்பு துவங்கும்.. 

மேற்படி ஓரைகள் சுப மற்றும் அசுப ஓரைகள் என்று இருவகையாக பிரிக்கப்பட்டு, சுப ஹோரைகளில் சுப காரியங்கள் செய்யவும் அசுப ஹோரைகளில் சுப காரியங்களை தவிர்க்கவும் வேத ஜோதிடத்தில் சொல்லப்பட்டது. 

குரு, சுக்ரன் மற்றும் புதன் ஹோரைகளில் சுப காரியங்களை செய்தால் நல்ல விதமாக எந்தவித தடங்களுமின்றி காரியவிருத்தி ஏற்படும். உதாரணமாக தங்க நகைகள் வாங்க உகந்த ஹோரை குரு ஹோரை. வீட்டிற்கு தேவையான பொருட்கள் மற்றும் வாகனம் வாங்க  உகந்த ஹோரை சுக்கிர ஹோரையாகும். புதன் ஹோரையில் வியாபாரம் துவங்க, அறிவியல் மற்றும் விண்வெளி சார்ந்த ஆராய்ச்சிகளை துவங்க மற்றும் உயர் கல்விக்கு விண்ணப்பிக்க  உகந்த ஹோரையாகும். இதுபோன்று அந்தஅந்த கிரஹத்தின் சுப தன்மைகளை அறிந்து ஒரு செயலை நீங்கள் செய்தால் மேற்படி சுப ஹோரையில் பயனை அடையலாம்.

அசுப ஹோரைகளை அசுப தன்மைகொண்டது என்று தவிர்க்க வேண்டாம். அதிலும் சில நன்மைகள் உள்ளது. சனீஸ்வரர், செவ்வாய் போன்ற கிரஹங்களின் ஆதிக்க நாள் மற்றும் ஹோரைகளில் அவர்களின் தன்மைக்கேற்ப வாழ்க்கையில் நமக்கு தேவைப்படும் சில செயல்களை மேற்படி ஹோரைகளில் செய்தால் பயன்பெறலாம். உதாரணமாக சனீஸ்வரர், செவ்வாய் ஹோரைகளில் கடனை திரும்ப செலுத்த ஆரம்பித்தால் மலை போல் உள்ள கடனும் பனி போல் விலகி விடும். 

வேத ஜோதிடத்தில் ராகு கேதுக்களை பற்றிய சூக்ஷும கணக்குகள் தெரிய வந்த பின்னர் அந்த ராகு கேதுக்களின் தன்மைகளை ஆராய்ந்து ஒவ்வொரு நாளிலும் ராகுவிற்குரிய நேரமாக ராகுகாலமென்றும் கேதுவுக்குரிய நேரமான எமகண்டம் என்றும் பிரித்து சொல்லப்பட்டுள்ளது. எனவே மேற்படி ஓரைகளில் ராகு கேதுவால் கிரஹணம் ஏற்படுவதால் ராகு கேதுவுக்குரிய பலன்களே அந்த நேரத்தில் செயல்படும். எனவே ஹோரை அறிந்து செயல்படும் போது ராகு கேதுக்களின் கால நேரத்தை தவிர்ப்பது நல்லது. 

சூரியன் அசுப ஹோரை என்றாலும் அரசாங்க சம்பந்த காரியங்களை சூரியன் ஹோரையில் செய்யலாம். சந்திர ஹோரையில் வளர்பிறை சந்திர நாட்களில் சுப காரியங்களை செய்யலாம். மேற்படி ஹோரைகளை தவிர ராகுவிற்குரிய ராகு காலத்தில் துர்கை அம்மனை வழிபடுவதின் மூலம் எதிரிகள் மற்றும் துன்பத்தில் இருந்து விடுபடலாம். கேதுவிற்குரிய  எமகண்டத்தில் விநாயகரை வழிபடுவதின் மூலம் வறுமை நீங்கும். 

எனவே மேற்படி ஹோரைகளின் தன்மைக்கேற்ப செய்ய வேண்டிய செயல்களை செய்து, செய்ய வேண்டாத செயல்களை தவிர்த்து வாழ்வில் வரும் சவால்களை எளிதாக  சந்தித்து வெற்றி பெறலாம்.

மேற்படி ஹோரைகளில் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் உங்களை யாராலும் ஜெயிக்க முடியாது.

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


  PIXXEL: CAPTURING EARTH'S ESSENCE FROM THE SKY In today's world most of the mobile buyers used to buy mobile phones with best pixe...