சனி, 12 நவம்பர், 2022

ஆபத்தில் உதவிய ROBOT

 ஆபத்தில் உதவிய ROBOT


அது ஒரு பெரிய தொழில் நிறுவனம். அந்த நிறுவனம் மின் ஆலை (Power Plant) உற்பத்தியில் இருந்தது. அன்று அந்த நிறுவனத்திற்கு திட்டமிடப்பட்ட பராமரிப்பு, அதாவது ஆங்கிலத்தில் SCHEDULED MAINTENANCE என்று சொல்வோம் அல்லவா அது.

அன்றைய தினம் அவர்களுக்கு கெட்ட நேரமோ அல்லது போராத காலமோ தெரியவில்லை. ஒரு 2.5 கிலோ எடையுள்ள சுத்தியல் அந்த நிறுவனத்துடைய உயர் அழுத்த நீராவி பைப்பில் (HIGH PRESSURE STEAM PIPE) விழுந்தது. அந்த சுத்தியலை எப்படி எடுப்பது என்று அவர்களுக்கு புரியவில்லை. அந்த சுத்தியலை எடுக்கும் வரை மின் ஆலை உற்பத்தியை தொடங்க முடியாது. அந்த சுத்தியல் எந்த இடத்தில் சென்று மாட்டிகொண்டு இருக்கிறது என்பதை கண்டு பிடிப்பதற்கே இரண்டு மூன்று நாட்கள் ஆகும். அதன்பிறகு அதை வெளியே எடுப்பதற்கு வழி காண வேண்டும். என்ன செய்வது என்றே பணியாளர்களுக்கு புரியவில்லை. அது வரை ஆலை உற்பத்தியை தொடங்க இயலாது. அத்தனை நாள் நிறுவனம் வருமான இழப்பை சந்திக்க நேரிடும். 

இடை நிலை பணியாளர்கள் மேல் அதிகாரிகளிடம் தகவலை தெரிவித்தனர். உடனே அவர்கள் தொழில் நுட்ப அதிகாரிகளை கூப்பிட்டு இந்த விபத்தை எப்படி சரி செய்வது என்று விவாதிக்க ஆரம்பித்தனர். தொழில் நுட்ப அதிகாரிகள் பலவாக யோசித்தனர். கடைசியாக ஒரு வழியை கண்டு பிடித்தனர். அதாவது அந்த சுத்தியல் எந்த இடத்தில் மாட்டி கொண்டு இருக்கிறதோ அந்த இடத்தில் உள்ள பைப்பை வெட்டி உள்ளே இருக்கும் சுத்தியலை எடுக்க வேண்டும். மீண்டும் வெட்டிய பைப்பை சரியாக்க வேண்டும். 

சரி இதை செய்வதர்க்கு எவ்வளவு செலவு ஆகும் என்று  மேலாண்மை பிரிவு (Management Department) தொழில் நுட்ப அதிகாரிகளிடம் வினவினர். அதற்கு அவர்கள் தோராயமாக ரூபாய் 5 கோடி செலவாகும் என்று கூறினர். அங்கு பணிபுரியும் பணியாளர் ஒருவருக்கு ஒரு யோசனை தோன்றியது.  ஏன் நாம் ரோபோவின் உதவியுடன் அந்த சுத்தியலை எடுக்க கூடாது என்று. அதை அவர் மேல் அதிகாரிகளிடம் தெரிவித்தார். 

மேல் அதிகாரிகளும், கொஞ்ச நேர யோசனைக்கு பிறகு இதுவும் நல்ல யோசனையாக தான் தெரிகிறது முயற்சித்து பார்ப்போம் என்று முடிவு எடுத்தனர். Robot தயாரிக்கும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு, நடந்த விபத்தினை பற்றி தகவல் பரிமாறினார்கள். அந்த நிறுவனமும் விபத்து நடந்த நிறுவனத்திர்க்கு செல்லும் முன் தங்களுடைய ரோபோட்டை சில மாற்றங்கள் செய்து சோதனை செய்தது. பிறகு விபத்து நடந்த நிறுவனத்திற்கு ரோபாட்டை எடுத்து கொண்டு சென்றார்கள். ஆனால் அங்கு அவர்களுக்கு பெரும் சவால் காத்திருந்தது. அந்த ரோபோட் நேர்கோட்டில் உள்ள பைப்பில் உள்ள பொருட்களை எடுப்பதற்கு ஏற்றவாறு இருந்தது. உதாரணத்திற்கு ஆள் குழாய் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை நேர்வாக்கில் உள்ள பைப்பில் இருந்து எப்படி எடுப்போமோ அவ்வாறு இருந்து. ஆனால் இங்குள்ள பைப்புகளில் பல பெண்டுகள். எல்லாம் 90 டிகிரி கொண்ட பெண்டுகள். அந்த பெண்டுகளை எல்லாம் கடந்து சுத்தியலை எடுக்க வேண்டும். 

ரோபாட்டை எடுத்து வந்த தொழில் நுட்ப அதிகாரிகள், ரோபோட்டில் சில மாறுதல்களை செய்து அந்த சுத்தியலை எடுக்க முற்பட்டனர். கிட்டத்தட்ட 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த சுத்தியலை வெற்றிகரமாக எடுத்தனர். அதற்கு அவர்கள் வசூலிக்க பட்ட கட்டணம் ரூபாய் 16 லட்சம். குறைந்தது 5 கோடி செலவு மற்றும் தோராயமான 5 கோடி வருவாய் இழப்பையும் சேர்த்தால் 10 கோடி அளவிளான செலவுக்கு வெறும் 16 லட்சத்தில் ரோபோட்டின் உதவியுடன் இந்த பிரச்சினையில் இருந்து அந்த நிறுவனம் வெளிவந்தது. 

இந்த சம்பவம் வேறு எங்கும் நடக்கவில்லை, நம் இந்தியாவில் 2017 ஆம் வருடம் தான் நடந்தது. அந்த விபத்திர்க்கு உள்ளான நிறுவனம் குஜராத்தில் இயங்கி கொண்டிருந்த "TATA POWER PLANT". அந்த ரோபோட் தயாரிக்கும் நிறுவனம், அகமதாபாதில் இயங்கி கொண்டிருக்கும் "GRID BOTS TECHNOLOGIES".









ஒரு கைதியின் கண்டுபிடிப்பு- Tooth Brush

டூத் பிரஷை கண்டுபிடித்தவர் ஒரு   கைதியான வியாபாரி


நம்மில் பலர் நினைப்போம், நாம் தினசரி உபயோகப்படுத்தும் ஒவ்வொரு பொருளும் எங்கோ ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்தது என்று. ஆனால் அது உண்மை அல்ல. ஒரு கண்டுபிடிப்பின் துவக்கம் நம் தேவைகளின் ஆரம்பமாக கூட இருக்கலாம். 

அப்படி ஒரு கைதி தன் தேவைக்காக கண்டு பிடித்த பொருள் தான் நாம் இன்று தினந்தோறும் உபயோக படுத்தும் டூத் பிரஷ். என்ன, ஆச்சிர்யமாக இருக்கிறது அல்லவா?. 

வில்லியம் அட்டிஸ் என்பவர் ஒரு பிரிட்டிஷ் வியாபாரி. அவர் ஒரு கை தகராரினால் ஜெயிலுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை. சிறை காவலர்கள் ஒவ்வோரு கைதியின் அறைகளை காலையில் தட்டி அவர்களை பல் தேய்க்க சொல்வார்கள். ஆனால் கைதிகளுக்கு பல் தேய்ப்பது என்றால் அவ்வளவு பெரிய கஷ்டம். அந்த காலத்தில் பல் தேய்ப்பதற்கு மர குச்சி, உப்பு, கரித்தூல் போன்றவற்றினால் பல்லை சுத்தம் செய்தனர்.  இது சாதாரண மக்களுக்கே கஷ்டமாக இருந்தது. சிறை கைதிகளை சொல்லவே வேண்டாம். பெரும்பாலான சிறை கைதிகள் பல்லை சுத்தம் செய்யவே மாட்டார்கள். சிலர் ஏனோ தானோ வென்று சுத்தம் செய்வார்கள். இதை கவனித்த வில்லியம் அட்டிஸ்க்கு இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று தோன்றியது. அன்று இரவு சிறை சாலையில் மாமிச உணவு தயாரித்து இருந்தார்கள். வில்லியம் அட்டிசும் அன்று அந்த மாமிச உணவை ஒரு வெட்டு வெட்டினார். நிறைய எலும்பு துண்டுகள் அவர் சாப்பிடும் மேஜையில் இருந்தது. ஒரு நீளமான எலும்பு துண்டை எடுத்தார். அந்த எலும்பு துண்டை வைத்து யோசிக்கலனார். ஏன் நாம் இந்த எலும்பு துண்டை வைத்து பல் துலக்க கூடாது என்று யோசிக்கலனார. இல்லை இல்லை இந்த எலும்பு துண்டை வெறுமனே பயன்படுத்தினால் பல்லுக்கு பாதிப்பு தான் ஏற்படும். இதை பற்றியே சில நாட்கள் சிந்தித்தார். ஒரு நாள் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. ஏன் நாம் குதிரையின் முடியை இந்த எலும்பின் முனையில் பதித்து, அதனை கொண்டு பல் தேய்க்கலாமே என்று யோசித்தார். உடனே ஒரு காவல் அதிகாரியை தொடர்பு கொண்டு குதிரையின் கழுத்தில் இருக்கும் முடி தனக்கு வேண்டும் என்று கேட்டார். காவலர் எதற்காக உனக்கு தேவை என்று கேட்டார். அதற்கு வில்லியம் அட்டிஸ் பதில் ஏதும் கூரமல், எனக்கு இந்த பொருளை கொண்டு வந்து கொடுத்தாள் தான் சிரையில் இருந்து வெளியில் வரும்போது அவருக்கு தக்க சன்மானம் தருவதாக கூறினார். வில்லியம் அட்டிஸ் ஒரு வியாபாரி அல்லவா! 

சிறை காவலரோ முயற்சி செய்கிறேன் என்று கூறி விடை பெறுகிறார். மறுநாள் வில்லியம் அட்டிஸ் கேட்டபடி சிறை காவலர் குதிரையின் முடியை கொடுத்தார்.  வில்லியம் அட்டிஸ்க்கு பெரும் மகிழ்ச்சி. தான் எண்ணிய படியே அந்த எலும்பு துண்டின் முனையில் குதிரையின் ரோமத்தை செருகி காய வைத்தார். மறு நாள் அந்த குதிரை ரோமங்களை கொண்ட எலும்பு துண்டை வைத்து பற்களை சுத்தம் செய்தார். மற்ற கைதிகள் எல்லாம் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர். இது என்ன புது விதமான ஒரு பொருளை வைத்து இவர் பற்களை சுத்தம் செய்கிராரே என்று கைதிகள் பிரமிப்பாக பார்த்தனர். சில கைதிகள் அவரிடம், இது என்ன என்று விசாரித்தனர். சில கைதிகள் தங்களுக்கும் இது போன்ற ஒரு பொருளை செய்து தருமாறு வில்லியம் அட்டிசிடம் கேட்டனர். வில்லியம் அட்டிசும் பல சிறை கைதிகளுக்கு தான் கண்டுபிடித்த டூத் பிரஷை செய்து கொடுத்தார். உலகின் முதல் டூத் பிரஷ் எலும்பு துண்டினாலும் மற்றும் குதிரை ரோமத்தினாலும் ஆனது என்றால் நம்ப முடியவில்லை அல்லவா. வில்லியம் அட்டிஸ் தான் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அந்த டூத் பிருஷை பெரிய அளவில் தயாரிக்கலானார். 

இங்கிலாந்து மக்களுக்கு வில்லியம் அட்டிசின் இந்த கண்டுபிடிப்பு மிகவும் பிடித்து விட்டது. பெரும்பாலானோர் இந்த புதிய வடிவமைப்பை கொண்ட டூத் பிருஷை உபயோகிக்க ஆரம்பித்தனர். அது வில்லியம் அட்டிசை பெரும் பணக்கராரராக ஆக்கியது.


https://youtu.be/6w4aCY_3OXE





  PIXXEL: CAPTURING EARTH'S ESSENCE FROM THE SKY In today's world most of the mobile buyers used to buy mobile phones with best pixe...