காஞ்சி காமாட்சியின் அருள் லீலை
சுந்தரேஸ்வரர் கண் பார்வை பெறுதல்
நாயன்மார்களில், நால்வரில் ஒருவராக போற்றுதலுக்குரிய சுந்தரேஸ்வரர் தன் கண் பார்வையை, காஞ்சி காமாக்ஷி அம்பாளின் அருளால் பெறுதல்.
சுந்தரேஸ்வரர் தன் இடக்கண் பார்வையை காமாட்சி தாயின் அருளால் பெறுவதற்கு முன்பு, எதனால் அவருக்கு கண் பார்வை போயிற்று என்பதை நாம் பார்ப்போம்.
சுந்தரேஸ்வரர், பிறந்தாலே முக்தி கிட்டும் திருவாரூர் என்னும் இடத்தில பிறந்தார். திருவாரூரிலே பறவையார்ன்னு ஒரு அம்மையாரை திருக்கல்யாணம் செய்து கொண்டார். அந்த அம்மையார் ருத்திர கணிகையர் குலத்திலே வந்தவர். தியாகராஜ பெருமானுக்காக ஆடிப்பாடி தொண்டு செய்யக்கூடிய உயர்ந்த ஒரு குலத்தை சேர்ந்தவள் அந்த அம்மையார். சுந்தரேஸ்வரர் அவரை திருக்கல்யாணம் செய்து கொண்டு அந்த தளத்திலேயே எழுந்தருளி இருக்கார். அங்கேயே சில அற்புதங்கள் எல்லாம் நடந்து சுவாமிகள் பல யாத்திரையாக பல சிவ தலங்களுக்கு சென்று ஈசனை தரிசித்து வருவார். அப்போ யாத்திரையாக சென்னையில் உள்ள திருவொற்றியூர் திருத்தளத்துக்கு வரார். அந்த தளத்திலே ஆதிபுரீஸ்வரராக சிவபெருமான் இருக்க அந்த தளத்திற்கு சுந்தரேஸ்வரர் வந்து சேர்ந்து அங்கே ஒரு காட்சியை கண்டார். கோயிலுக்கு முன்னே கன்னிமாடம்னு ஒரு பகுதி இருக்கு. அது கன்னி பெண்கள் இறைவனுக்கு தொண்டாற்றணும்னு சொல்லி விருப்பப்படுபவர்கள் அங்கே தங்கி தொண்டாற்றுவார்கள். அந்த மண்டபத்தை கடந்து சுவாமிகள் எழுந்தருளக்கூடிய அந்த வீதியில வரும்போது தடார்னு அந்த கன்னிமாடத்தில இருந்து ஒரு திரை விலகி ஒரு முகம் மட்டும் வெளிப்பட்டு தொடுத்த மலர்களை யாரிடமோ கொடுத்து சுவாமிகிட்ட சமர்ப்பிக்க சொல்லக்கூடிய ஒரு காட்சியை பார்த்தார். அந்த பெண்மணியும் சுந்தரேஸ்வரரை பார்க்கிறார். அந்த பெண்மணியின் திருநாமம் சங்கிலியார். அந்த பெண்ணுக்கு சிவபெருமானுக்கு தொண்டு செய்து வாழ்வதுதான் வாழ்க்கையினுடைய குறிக்கோள்ன் என்று பற்றி வாழ்ந்து வருகிறாள். அந்த அம்மையார் அங்கி இருந்தபடி தியாகராஜ பெருமானுக்கு தொண்டு செய்து கொண்டு வருகிறார். சுந்தரர் நேரா திருவொற்றியூர் தியாகராஜா பெருமான் சந்நிதி சென்று, அந்த கன்னிமாடத்தில ஒரு பெண்ணை பார்த்தேன்னு, அவளை தனக்கு திருக்கல்யாணம் செய்து வைக்கும்படி முறையிடுகிறார். சிவபெருமானும் அத அங்கீகரிக்கிறார். சங்கிலி அம்மையார் கனவுல போய் திருவொற்றியூர் வந்து இருக்கும் என் பரம தொண்டனான சுந்தரேஸ்வரரை கலயாணம் செய்துக்கும்படி கூறுகிறார். ஆனா அந்த அம்மையாருக்கு மனசுல ஒரு சின்ன எண்ணம் இவரோ பல தலங்களுக்கும் தரிசனம் பண்ணிட்டு போறார். நாம இங்க கன்னிமாடத்தில இருக்கோம். இவர கல்யாணம் பண்ணிட்டு, இவர் யாத்திரையா திரும்ப புறப்பட்டு போயிட்டாருன்னா என்ன செய்வது என்று இறைவனிடம் முறையிடுகிறார். அதர்க்கு இறைவன் நீ சுந்தரரிடம் ஒரு சத்தியம் வாங்கிக்கொள், "அதாவது திருமணத்துக்கு பிறகு திருவொற்றியூர் விட்டு செல்ல கூடாது என்று". அந்த அம்மையாரும் சுந்தரேஸ்வரரிடம் நாளைக்கு திருமணத்திற்கு முன் நீங்கள் சுவாமி சன்னதியில், எக்காரணத்தை கொண்டும் திருமணத்திற்கு அப்புறமா திருவற்றியூரை விட்டு போக மாட்டேன்னு சத்தியம் பண்ணி கொடுக்கணும்னு கேட்கிறார். சுந்தரருக்கு ஒரு பக்கத்துல அந்த அம்மையார் பேர்ல ஆசை எல்லாம் இருந்தாலும் திருவாரூர் தளத்தை விடுத்து அவரால இருக்க முடியாது. அதனால இது விபரீதமா இருக்கே இந்த சத்தியம்னு சொல்லி ரொம்ப யோசிச்சு சுவாமிகிட்ட போயி இந்த மாதிரி சங்கிலி கேட்கிறாள் அதனால நாளைக்கு வந்து திருமணத்தப்போ நான் சுவாமி சன்னதியில சத்தியம் பண்ணி தர போறேன். எனக்கு நீங்க ஒரு உபாயம் பண்ணனும். நான் சத்தியம் பண்ணி தர அந்த நொடி பொழுதுக்கு சந்நிதியில் இருந்து புறப்பட்டு வாசல்ல இருக்கற அந்த ஸ்தல விருட்சத்தில போய் இருங்கள். நான் சத்தியத்தை நீர் இல்லாத இடமா நினைச்சுட்டு பொய் சத்தியமா பண்ணிடுறேன். அதுக்கு அப்புறமா நீர் திரும்பி இந்த சந்நிதியில் வந்து இருக்கலாம்னு சொல்லவும் திருவொற்றியூர் ஈஸ்வரன் அதுக்கு சுந்தரர் கிட்ட சரின்னு சொல்றாரு. நாம் ஒன்று நினைத்தாள் இறைவன் வேறு ஒன்று நினைப்பர் அல்லவா. திருவொற்றியூர் ஈசன் உடனே, சங்கிலியார் கனவுல போயி "நீ சுந்தரேஸ்வரரிடம் நாளைக்கு சன்னிதில எல்லாம் சத்தியம் பண்ணி தர வேண்டாம். நேரா மகிழ மரத்துக்கு வர சொல்லி அங்க சத்தியம் பண்ணிதான்னு சொல்லி கேள் என்று கூறுகிறார்". கல்யாணத்துக்கு ஏற்பாடு எல்லாம் ஆகி சுவாமி சன்னிதியில இந்த சத்தியத்தை பண்ணி தர வேண்டிய கட்டம். அப்போ சுந்தரருக்கு என்னன்னா சுவாமி கிட்டதான் நம்ம சொல்லிட்டோமே அந்த சுவாமி இப்ப மகிழமரத்தடியில் இருப்பாருன்னு சுந்தரேஸ்வரர் வருகிறார். அம்மையார் அந்த இடத்துல நிப்பாட்டி இதெல்லாம் நமக்குள்ள நடக்கற தனிப்பட்ட விஷயம். இத சுவாமி சன்னிதியில வச்சு எல்லாம் பண்ணக்கூடாது. ஸ்தல விருட்சமும் சுவாமி சன்னிதானமாதான் கணக்கு அதனால நீங்க வெளியில பிரகாரத்தில மகிழமரத்தடியில சத்தியம் பண்ணி கொடுங்கன்னு கேட்கவும் சுந்தரருக்கு என்ன பண்றதுன்னு தெரியல கல்யாண அவசரம் எல்லாரும் இருக்காங்க ஆனதாகட்டும்னு போய் மகிழமரத்த அடியில ஒரு சத்தியத்தை பண்ணி கொடுத்துறார். விசேஷமா திருக்கல்யாணம் ஆகுது சங்கிலியாரோட திருவற்றியூர்ல ரெண்டு பேருமே சிவதர்மங்கள் எல்லாம் செஞ்சுகிட்டு சுவாமி தரிசனம் பண்ணிட்டு அங்க வாழக்கூடிய ஒரு காலத்தில திடீர்னு வசந்த காலம் வருது அவருக்கு வசந்த காலம் வந்துருச்சுன்னா திருவாரூர்ல இருக்கணும். சுந்தரர் அன்னைக்கு ராத்திரியே சுவாமிட்ட சொல்லிட்டு கிளம்பிடுறார். தியாகராஜாட்ட விண்ணப்பம் பண்ணி திருவற்றியூர்ல இருந்து கிளம்புறார். திருவற்றியூர் எல்லையை தாண்டி ஒரு அடி எடுத்து வச்சாராம். ரெண்டு கண் பார்வையும் மங்கி போய்விட்டது. நேரா அங்க இருந்து வடதிருமுல்லை வாயில் போறார் பாசுபதா பரமேஸ்வரன் சொல்லி அந்த எம்பெருமானை பாடுறார் கண் இல்லாத நிலையிலேயே பாடுறார். அங்கிருந்து நேரா திருவண்பாக்கம் போறார். திருவண்பாக்கத்துக்கு போயி அங்க நின்னு இவர் சாமியை பார்த்து "உளிரோன்னு" கேடக்குறார். நான் இங்கதான் இருக்கேன் போயிட்டு வான்னு சுவாமி அசரீரி கூறுகிறார். அப்போ கண்பார்வை தெரியாமல் இந்த மாதிரி வந்த நிலைக்கு அவருக்கு ஒரு தண்டு கொடுத்தாராம் சுவாமி. கண்பார்வை கேட்டு வந்தா ஊன்றி நடந்து போகும்னு ஒரு தண்டை கொடுத்தாரேன்னு சுந்தரருக்கு கோவம் வேற. இப்படிய எல்லாம் அனுபவித்து கொண்டு நேரா காஞ்சிபுரத்திற்கு எழுந்தருளி திருக்காமக்கோட்டத்தில அருள்பலித்து கொண்டு இருக்கும் நாயகியாக இருக்கக்கூடிய காமாட்சி அம்பிகையை தரிசனம் செய்கிறார். பிள்ளை படும் துயரை பார்த்து அவளால பொறுக்க முடியாமல் அவள் சுந்தரருக்கு அருள் பாலிக்கிறாள். மனித உடம்பில இடப்பாக கூறு அம்பிகையினுடையது அதனாலதான் இருதயம் இங்க துடிக்குது இது சக்திங்கறதுனாலதான் இருதயத்தை சுவாமி இங்க இடது பக்கத்துல வச்சிருக்கார் இதுதான் சக்தி இது நிக்கிற மட்டும் தான் எல்லாம். அந்த சக்தி தத்துவத்தை காட்டி கொடுக்கும்வண்ணம், மேலும் ஈசனின் இடபாகம் அம்பிகைக்குரியதானபடியால இடக்கன் பார்வை சுந்தரேஸ்வரர் திரும்ப அம்பிகையின் அருளால் திரும்ப பெறுகிறார். சுந்தரேஸ்வரர் அம்பிகை வணங்குறார் ஒரு கண்பார்வை கிடைச்சிடுது நேரா கட்சி ஏகம்பத்துக்கு புறப்பட்டு போயி இந்த அனுபவத்தை முழுக்க "ஆலந்தான்கந்த அமுது செய்தானேன்னு" ஒரு பதிகத்தில பதிவு பண்ணிடுறார். அதுல ஆலந்தான் தமுது செய்தானை அப்படின்னு அப்படின்னு ஆரம்பித்து அந்த அந்த பதிகம் முழுவதும் அம்பிகை சிவ பூஜை செஞ்ச விஷயத்தை சொல்றார். மணலால லிங்கம் பிடித்து அம்பிகை சிவ பூஜை செய்து அந்த ஸ்தலத்தை நமக்காக ஏற்படுத்தி கொடுத்த சிறப்பை அந்த ஆலந்தான் உகந்து பதிகம் முழுக்க சொல்றார் இன்னைக்கும் அந்த பதிகம் பாராயணம் பண்ணும்போது இடக்கன் நோய் இருக்க கூடியவங்க அறுவை சிகிச்சைக்கு எல்லாம் போறவங்களுக்கு அதை ஒரு மருந்து போல சொல்றதுதான் அது நிறைய பேருக்கு பயன் கொடுத்திருக்கு மங்கி போகக்கூடிய காலத்தில எல்லாம் அது ஒரு துணையாக இருந்திருக்குன்னு பார்க்கிறோம். இந்த பதிகம் இடது கண்ணில் உள்ள கோளாறுகளை நீக்கவும், இழந்த பார்வையை பெறவும் உதவும் என்று நம்பப்படுகிறது


