வியாழன், 29 அக்டோபர், 2020

ஐந்தே நிமிடத்தில் சுந்தர காண்டம்


 

ஐந்தே நிமிடத்தில் சுந்தர காண்டம் 

சுந்தர காண்டத்தை பாராயணம் செய்பவர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் உண்டாகும். நவகிரஹ தோஷங்கள் முற்றிலும் அகலும். எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். வாழ்வில் நம்பிக்கை ஏற்படும். நோய்கள் விலகும். ராமச்சந்திர மூர்த்தியையும், ராமபக்தனான அனுமனையும் மனதில் தியானித்து, இந்த எளிய சுந்தரகாண்டத்தை படிப்போருக்கு வாழ்வில் எல்லா நன்மைகளும் வந்து சேரும். 
 

சுந்தரகாண்டம் என்று பெயர் சொல்லுவார் 
இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார் 
கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன 
கருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சேநேயர் பெருமையிது.
அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே 
ஆயுத்தமாகி நின்றான், அணைத்து வானரங்களும் 
அங்கதனும், ஜாம்பவானும் அன்புடன் 
விடை கொடுத்து வழியனுப்பினரே!
வானவர்கள் தானவர்கள் வருநாத் தேவர்கள் 
வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே!
மைனாக பர்வதம் மாருதியை உபசரிக்க 
மகிழ்வுடன் மாருதியும் மைநாகனை திருப்தி செய்து 
சுரசையை வெற்றி கண்டு ஹிம்சை வதம் செய்து 
சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சேர்ந்தான் 
இடக்காக பேசிய இலங்கையின் தேவதையை 
இடக்கையால் தண்டித்து இலங்கையை கலக்கினான் 
அழகான இலங்கையில் அன்னை ஜானகியை அங்கும் 
இங்கும் தேடியே அசோக வனத்தை அடைந்தான் 
கிம்சுபா மரத்தடியில் ஸ்ரீராமனை தியானம் செய்யும் 
சீதா பிராட்டியை கண்டு சித்தம் கலங்கினான் 
ராவணன் வெகுண்டிட, ராட்சசியார் அரண்டிட 
வைதேகி கலங்கிட, வந்தான் துயர் துடைக்க 
கணையாழியை கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி 
சூடாமணியை பெற்று கொண்ட சுந்தர ஆஞ்சேநேயர் 
அன்னையின் கண்ணீர் கண்டு, அரக்கர் மேல் கோபம் கொண்டு 
அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான்.
பிரம்மாஸ்திரத்தால் பிணைத்திட்ட ஆஞ்சேநேயர் 
பட்டாபிராமன் பெயர் சொல்ல வெகுண்ட இலங்கை வேந்தன் 
வையுங்கள் தீ வாலுக்கென்றான். வைத்த நெருப்பினால் 
வெந்ததே இலங்கை நகரம். அரக்கனின் அகந்தையை அழித்திட்ட 
அனுமானும் அன்னை ஜானகியிடம் அனுமதி பெற்றுக்கொண்டு 
ஆகாய மார்கத்தில் தாவி வந்தான். அன்னையை கண்டவிட்ட 
ஆனந்தத்தில் மெய்மறந்தான். ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த
ஸ்ரீராமனிடம் ஆஞ்சநேயர் 'கண்டேன் சீதையை' என்றான்.
வைதேகி வாய்மொழியை அடையாளமாகக்  கூறி 
சொல்லின் செல்வன் ஆஞ்சநேயர் சூடாமணியை 
கொடுத்தான், மனம் கனிந்து மாருதியை மார்போடணைத்து 
ஸ்ரீராமர் மைதிலியை சிறை மீட்க சித்தமானார்.
ஆழ்கடலில் அற்புதமாய் அணை கட்டி படைகள் சூழ 
அனுமானும், இலக்குவனும் உடன் புறப்பட்டனர்.
அழித்திட்டான் இராவணனை ஒழித்திட்டான் அதர்மத்தை 
அயோத்தி சென்று ஸ்ரீராமர் அகிலம் புகழ ஆட்சி செய்தான்.
அவனை சரண் அடைந்தோருக்கு அவன் அருள் என்றும் உண்டு.

எங்கே எங்கே ரகுநாத கீர்த்தனமோ அங்கே அங்கே 
சிரம் மேல் கரம் குவித்து மனம் உருகி நீர் சொரிந்து 
ஆனந்தத்தில் மூழ்கி இருக்கும் ஆஞ்சேநேயா!
உன்னை பணிகின்றோம், பன்முறை உன்னை பணிகின்றோம்,
பன்முறை உன்னை பணிகின்றோம்.   
 


ஞாயிறு, 18 அக்டோபர், 2020

ஆக்மெண்டெட் ரியாலிட்டி (Augmented Reality)

ஆக்மெண்டெட் ரியாலிட்டி (Augmented Reality)

ஆக்மெண்டெட் ரியாலிட்டி (Augmented Reality) என்றால் என்ன என்று இப்பதிவில் பார்ப்போம்.

ஆக்மெண்டெட் ரியாலிட்டி என்பது 2016 ஆம் வருடம் ஏற்பட்ட தொழில்நுட்ப புரட்சி என்று சொல்லலாம். சந்தையில் நாளுக்கு நாள் புது புது தொழில் நுட்பங்கள் வந்துள்ளன. அதில் ஒன்று தான் இந்த ஆக்மெண்டெட் ரியாலிட்டி (AR). இந்த ஆக்மெண்டெட் ரியாலிட்டி (AR) உபயோகப்படுத்தி POKEMAN Go என்ற மொபைல் ஆப் 2016 ஆம் வருடம் niantic என்ற டெவலப்பர், pokeman கம்பெனி உடன் இணைந்து வெளியிட்டார்கள். அந்த விளையாட்டு சந்தையில் மிகவும் பிரபலமடைந்தது. ஆக்மெண்டெட் ரியாலிட்டி (AR) என்பது நிஜ உலகத்துடன் செயற்கையான சில அம்சங்கள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் உங்களுக்கு இயற்கையும் செயற்கையும் கலந்த உணர்வை கொடுக்கும். இந்த ஆக்மெண்டெட் ரியாலிட்டி (A R ) உபயோகப்படுத்தி உருவாக்க பட்டுள்ள  மொபைல் ஆப்ஸ் சிலவற்றை பார்ப்போம் 

 1. Froggipedia- ஆக்மெண்டெட் ரியாலிட்டி (AR) இணைந்த கல்வி சார்ந்த ஆப். இந்த ஆப் மூலமாக உயிரியல் ஆய்வகத்தில் (Biological lab) நாம் தவளையை எப்படி உடல் கூறு  ஆய்வை (Anatomy)  செய்வோமா அதை கத்தியின்றி ரத்தமின்றி இந்த ஆப் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.


2. BBC Civilization- ஆக்மெண்டெட் ரியாலிட்டி (AR) இணைந்த கல்வி சார்ந்த ஆப். இந்த ஆப் மூலமாக வரலாறு சம்பந்த ஆராய்ச்சிகளை தெரிந்து கொள்ளலாம். உதாரணமாக இந்த ஆப் மூலமாக எகிப்தின் மம்மியை  (Egyptian  Mummy) ஆராய்ச்சி செய்யலாம்.


3. Pokeman Go - மொபைல் விளையாட்டு சம்பந்த ஆப். இந்த ஆப் மூலமாக விளையாடுபவர் நிஜ உலகத்தில் உலவும்  Pokeman கேரக்டரை இந்த விளையாட்டு ஆப்  உதவியுடன் கண்டுபிடிப்பது ஆகும்.


4. Quiver 3 D Colouring App: இந்த ஆப் மூலமாக ஒரு காகிதத்தில் ஏதாவது ஒரு விலங்கினை  வரைந்து, அதை இந்த  ஆப் மூலமாக கேமராவில் பதிவு செய்தால் அது உயிர்பெற்று நகர்வதை நாம் உணரலாம்.




அடுத்த தலைமுறையினர் புத்தகத்தில் படித்து வளர்த்து கொள்ளும் அறிவை இந்த ஆக்மெண்டெட் ரியாலிட்டி மூலம் படித்து தெரிந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை இந்த தொழில்நுட்பம் நமக்கு உணர்த்துகிறது.






வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

புகழ் சித்தன் அக அனுபவ ஆன்மீக கவிதைகள்- 4













ஈசலிறகு  போல இவ்வாழ்க்கை 
ஊசலாடும் உயிர்வாழ்க்கை 

சதமல்ல நிரந்தரமல்ல 
மாயவனின் வலையிலே 
அகப்படும் கயல் போலே

அலையலையாய் வரும் வாழ்க்கை சூழலிலே 
                                                           சுழலாதே மனமே 
தினமே தியானம் செய்து திருவருள் பெறுவோம் 
                                   திருவொற்றியூரானை பணிந்து 

                                                
                                               திருவொற்றியூரான் அடிமை 
                                               புகழ் சித்தன் 
                                                 

புகழ் சித்தன் அக அனுபவ ஆன்மீக கவிதைகள்- 3




பசிப்பிணி போக்கும் தாவரம் போலே 
பிறவிப்பிணி தீர்த்து எமக்கு 
தா   -  வரம் தருவாய் தீர்த்த பதியே 

தாவரம் பசிப்பிணி தீர்க்கும் முகில் மழை போலே 
ஏழை- எளியோர்க்கும் அருள் மழை 
யோக மழை தருவாய் தாண்டவராயா 
தில்லை தாண்டவராயா  

இருப்போருக்கும் இயலாதவருக்கும் எல்லா உயிர்களுக்கும் 
உயிராற்றல்  இயக்கமாய் இறைவனாய் 
தாள -  லயம் நடனமாடும் தில்லை தாண்டவராயா  
ஆனந்த நடனமாடும் ஆலாள கண்டனே திருநீல கண்டனே 

சித்தர்களுக்கும் யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் 
பக்தர்களுக்கும் காட்சி தரும் தில்லை தாண்டவராயா 
பேரெழிலாய் பேரண்டமாய் பேரம்பலமாய் திகழும் தாண்டவராயா 
ஆடிய பாதத்தை பணிந்தே ஆனந்த கூத்தாடுவோம். 


                        சிவ சிதம்பரம் துணை 
                        ஓம் திருச்சிற்றம்பலம் புகழே துணை 


                                                                                                       ஈசன் அடிமை 
                                                                                                       புகழ் சித்தர் 



புகழ் சித்தன் அக அனுபவ ஆன்மீக கவிதைகள் - 1



தாளம் தப்பாமல் 

ஞாலம் ஆடும் ஆட்டம் 

தப்பாட்டம் ஆடினால் 

நான் எங்கே நீ எங்கே 

யார் இங்கே 

                               அன்பே சிவம் 

                              திருச்சிற்றம்பலம் 

                             இவன் - புகழ் சித்தன் 

"Mottainai" a Japanese Word about Conservation of Resources



ஜப்பானிய மக்களிடம் ஒரு வினோதமான பழக்கம் உண்டு. நாம் நமக்கு தேவை இல்லாத ஒரு பொருள் வீட்டில் இருந்தால், ஒன்று அதை குப்பையில் போட்டு விடுவோம் அல்லது பழைய பொருட்களை  வாங்குபவரிடம் விற்று விடுவோம். ஆனால் அவர்கள் அப்படி செய்வதில்லை. ஜப்பானிய மொழியில் "MOTTAINAI" என்று ஒரு வார்த்தை உண்டு, அதன் அர்த்தம் கடவுள் நமக்கு கொடுத்த வளத்தை வீணாக்கக்கூடாது அல்லது பாதுகாக்க வேண்டும். ஜப்பானியர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் எந்த ஒரு பொருளையும் தூக்கி போடுவதில்லை, அதற்க்கு பதிலாக அந்த பொருளை எப்படி மேலும் உபயோக படும்படி செய்வது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். இந்த தத்துவத்தை பற்றி "SONY" நிறுவனத்தின் தலைவர் தன்னுடைய சுயசரிதை புத்தகமான " MADE IN JAPAN-AKIO MORITA & SONY" என்ற புத்தகத்தில் கூறியிருப்பார். அவர் அந்த புத்தகத்தில் ஜப்பானியர்களாகிய நாங்கள் எந்த பொருளையும் வீணடிக்க மாட்டோம். மேலை நாடுகளில் குளிரை தாக்கு பிடிக்க அறை முழுவதும் ஹீட்டரை பயன்படுத்துவார்கள் ஆனால் ஜப்பானியர்கள் அப்படி செய்வதில்லை அதற்க்கு பதிலாக கால்களை மட்டும் வெது வெதுப்பாக வைத்து கொள்ள எலக்ட்ரிக் ஹீட்டர்களை பயன்படுத்துவோம். 

நோபல் பரிசு வென்ற Wangari Mathai, "Mottainai" என்ற ஜப்பானிய வார்த்தையை தன்னுடைய சுற்று சூழல் பாதுகாப்பு பிரசாரத்தில் உபயோக படுத்தினர். 2009ஆம் வருடத்தில் நடந்த "United Nations Summit on Climate Change" என்னும் தலைப்பில் சேமிப்பு (Reduce), மறுபயன்பாடு (Reuse), மறுசுழற்சி (Recycle) என்னும் மூன்று "R" இன் பயன்பாட்டை "Mottainai" என்னும் ஜப்பானிய வார்த்தையின் மூலம் பிரபலப்படுத்தினார்.

"Conservation of Resources", "Waste Recycling", "Environmental Protection" போன்ற நவீன கோட்பாட்டுகளை கடை பிடிப்பதற்கு நாமும் ஜப்பானியர்களை போல் வாழ கற்று கொண்டு நம் பிள்ளைகளுக்கும் கற்று கொடுக்க வேண்டும்.

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

புகழ் சித்தன் அக அனுபவ ஆன்மீக கவிதைகள் - 2

காற்றின் சலனங்கள் கீதமே 
மரம், செடி, கொடி, நடனமாட 

நீரோடையின் சலனங்கள் 
உயிரினங்களின் தாகம் தீர்க்க

செந்தீயின் சலனங்கள் 
உலகிற்கு உதவிட 

மேகத்தின் சலனங்கள் 
உயிர் மழை ஜீவ மழை 
சகலத்திற்கும் ஜகத்திற்கும் 
அகிலத்திற்கும் ஆண்டவனின்  
அகப்பார்வையினாலே இயங்க வைத்த இறைவா 

மேகங்களில் சலனமாடும் திருநீலகண்டேஸ்வரா 
ஜலங்களிலே சலனமாடும் ஜலகண்டேஸ்வரா 
தீயினிலே சலனமாடும் அருணாச்சலேஸ்வரா 
அனைத்திற்கும் ஆதார பொருள் நீயே 

காலத்தை இயக்கும் காலபைரவா 
அடைந்தேன் உன்னை சரணடைந்து 
சர்வ வியாபக பொருள் தத்துவமே 
தத்துவமசி சிவத்துவமசி 

சிவஓம் சிவஓம் என்று 
உன்னை சரணடைந்தேன் 

                                         சிவன் அடிமை 
                                         திருச்சிற்றம்பலம் 
                                         புகழ் சித்தன் 

நந்தனார் சரித்திரம்- Part 2

  நந்தனார் சரித்திரம்-  Part 2 நந்தனார் திருப்புங்கூர் சிவலோகநாதனைத் தரிசனம் செய்து  ஆதனூர் வந்த நாள் முதலாய் உணவு உண்ணாமல், உறக்கம் கொள்ளாம...

Thiruvannamalai Girivalam benefits