காஞ்சி காமாட்சியின் வரலாறு
சிவன் கண் மூடல், அதனால் ஏற்பட்ட சாபம் நீங்க அன்னை ஒற்றை காலில் நின்று தவம் இயற்றுதல்.
Tiruvannamalai girivalam benefits, Guruvayurappan temple history, Augmented Reality, Lamborghini cars, Cheiro Palmistry
காஞ்சி காமாட்சியின் வரலாறு
சிவன் கண் மூடல், அதனால் ஏற்பட்ட சாபம் நீங்க அன்னை ஒற்றை காலில் நின்று தவம் இயற்றுதல்.
காஞ்சி காமாட்சியின் வரலாறு
ஏன் காஞ்சியில் இருக்கும் அணைத்து சிவாலயங்களிலும் அன்னைக்கு தனி சந்நிதி இல்லை? இந்த காஞ்சிபுர எல்லைக்கு வெளியில் இருக்கும் ஒவ்வொரு சிவா ஆலயத்திலும் அம்பிகைக்கு தனி சந்நிதி இருக்கும். ஒரு காலத்தில் கைலாசம் முதலிய எல்லா உத்தம கோயில்களில் இருந்த அம்பிகை, தன்னுடைய ஷக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி காயத்ரி மண்டபம் அடியில் உள்ள குகையில் இருக்கும் பீடத்தில் ஆகாய வடிவமாக அமர்ந்தாள். பிறகு ப்ரம்மா தவம் செய்து பிரார்த்திக்க, அந்த பிரார்த்தனைக்கு இணங்கி அன்னை தனது சக்தியை எல்லா உத்தம க்ஷேத்ரங்களுக்கும் அனுப்பி அங்கு சாந்நித்யமாக இருக்குமாறு அனுகிரகம் செய்தால். ஆனால் எல்லா சக்திகளையும் தன்னுள் அடக்கிய அடையாளத்துக்கு சான்றாக இந்த காஞ்சிபுர எல்லைக்குள் இருக்கும் சிவாலயங்களில் மாத்திரம் தனது சக்தியை அனுப்பாமல் காமக்கோட்டத்தில் உள்ள பிலகாசத்திலே தனது சக்தியை நிறுத்தி, தன்னை வேண்டி வரும் பக்தர்கள் அனைவருக்கும் தன் அருள் கடாக்ஷத்தை வாரி வழங்குகிறாள்.
காஞ்சி காமாட்சியின் வரலாறு
காமாட்சியின் அருள் லீலை - மூகர்
வாழ்க்கை அற்புதங்களாலும் தெய்வீகத் தலையீடுகளாலும் நிறைந்தது. தட்சிணப் பாதையில், வித்யாவதி என்ற ஒரு அறிஞர், பிறவியிலேயே காது கேளாத மற்றும் பேச முடியாத ஒரு அசாதாரண மகனைப் பெறும் பாக்கியம் பெற்றார். மாற்றுத்திறனாளி யான அந்த மகனுக்கு சங்கரர் என்று பெயரிடப்பட்டது. பெற்றோரின் பாண்டித்தியம் (கல்வி அறிவு) அவனுக்குப் போய்ச் சேரவில்லை. சங்கரர் 'மூகர்' (ஊமை) என்பதால், அவர் 'மூக சங்கரர்' என்று அழைக்கப்பட்டார். அவர் தினமும் காமாட்சி அம்மன் சன்னிதியில் வந்து அமருவார். மற்றொரு பக்தரான ஸ்ரீ வித்யா உபாசகர் என்பவரும், கல்வி மற்றும் சொல்லாற்றலுக்காகப் பிரார்த்தனை செய்ய அங்கே வருவார். அந்த பக்தரின் ஆசை அவ்வளவு தீவிரமாக இருந்ததால், அன்னை மனித உருவில் தோன்றினாள். அவள், தாழ்வாரத்தில் அருகருகே அமர்ந்திருந்த அந்த இருவரையும் நோக்கிச் சென்றால். தேவியின் தரிசனத்தை விரும்பிய அந்தச் சாதகன், தங்களை நோக்கி நடந்து வந்த அந்தப் பெண்ணைப் பார்த்தான்; அவள் வெற்றிலை மென்று கொண்டிருப்பதையும் கண்டான். அன்னை தன வாயினால் சுவைத்த வெற்றிலை தாம்பூலத்தை, சன்னதியில் அமர்ந்து இருந்த சாதகனுக்கு முதலில் சென்று "வேண்டுமா" என்று முக பாவனை செய்தால். அன்னை தேவியின் தரிசனத்தை மிகவும் தீவிரமாக விரும்பி, தேவியைத் தன் பக்கம் இழுக்கும் அளவுக்கு பக்தி கொண்ட அந்த பக்தன், அன்னையின் அந்த வெற்றிலை தாம்பூலத்தை ஏற்க மறுத்தான். அன்னை தன கருணை பார்வையை பக்கத்தில் அமர்ந்து இருந்த மூக சங்கரரை நோக்கினால். தேவி உடனடியாக அந்தத் தாம்பூலத்தை மூக சங்கரருக்கு வேண்டுமா என்று முக பாவனையில் கேட்டால். அதற்க்கு உடனே மூக சங்கரர் வேண்டும் என்னும் விதமாக தன் நாக்கினை நீட்டினார். தேவி உடனடியாக அந்தத் தாம்பூலத்தை மூக சங்கரருக்கு வழங்கினார். உடனடியாக அவர் தேவியை போற்றித் துதித்து இயல்பாகவே கவிதை பாடத் தொடங்கினார். அவர் ஐந்து 'சதகங்களை' (நூறு சுலோகங்கள் கொண்ட தொகுப்புகள்) தங்கு தடையற்ற ஓட்டத்துடன் இயற்றினார். இவற்றில், ‘பாதாராவிந்த’ சதகம் அன்னையின் தெய்வீக பாதங்களை மையமாகக் கொண்டது. ‘மந்தஸ்மிதா’ சதகம் தேவியின் அழகிய புன்னகையை மையமாகக் கொண்டது. ‘கடாக்ஷா’ சதகம் தேவியின் ஆசீர்வாத பார்வையில் கவனம் செலுத்துகிறது. பின்னர், காமாக்ஷி பரதேவதையால் அற்புதமாக ஆசீர்வதிக்கப்பட்டதால், காஞ்சிபுரத்தின் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் இருபதாவது பீடாதிபதியாக மூக சங்கரர் நியமிக்கப்பட்டார்.
காஞ்சி காமாட்சியின் வரலாறு
லலிதா திருபுரசுந்தரி தேவர்களுக்கு இட்ட கட்டளை
காஞ்சி காமாட்சியின் கட்டளைக்கிணங்க, தேவர்கள் பந்தகாசுரனை, தேவி தன் சுண்டு விரலால் கீறி காட்டிய இடத்தில புதைத்தனர். புதைத்த இடத்தில ஜெயஸ்தம்பம் ஒன்றையும் காமாக்ஷி அம்மனின் கட்டளையை ஏற்று நட்டனர் . மேலும் தேவர்கள் 24 அட்சரங்களை கொண்ட காயத்ரி மந்திரத்தை குறிக்கும் வண்ணமாக 24 தூண்கள் கொண்ட மண்டபம் ஒன்றையும் கட்டினார்கள். பிறகு தாங்கள் தரிசித்து பாக்கியம் பெற்ற அன்னையின் திருவுருவத்தை சிலையாக செய்து, பிரணவ மந்திரத்தை குறிக்கும் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட சிம்மாசனத்தில் அன்னையின் சிலையை பிரதிஷ்டை செய்தார்கள். பின்னர் தேவர்கள், அன்னையின் ஆணைக்கு இணங்க கதவை மூடிவிட்டு வெளியே வந்து அமர்ந்து, அன்று இரவு முழுவதும் அன்னைக்கான மந்திரத்தை உச்சரித்து தியானம் செய்து கொண்டிருந்தனர். மறுநாள் விடியற்காலைக்கு சற்று முன்பு, தேவர்கள் மிகுந்த பக்தியுடன் கதவை திறந்த பொது, அவர்கள் ஆச்சரியப்படும் வண்ணம் அன்னை ராஜா ராஜேஸ்வரியாக காட்சி கொடுத்தால். காஞ்சியில் உள்ள காமகோட்டத்தில் உள்ள காயத்ரி மண்டபத்தில், ஸ்ரீ காமாக்ஷி தேவியின் முடிசூட்டு விழாவைக் கொண்டாடும் விதமாக, தேவர்களின் தலைமைச் சிற்பியான விஸ்வகர்மா ஒரு பல்லக்கையும், பிரம்மதேவர் முத்துக்களால் ஆன ஒரு சிகை அலங்கார ஆபரணத்தையும், மகாவிஷ்ணு நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஒரு கிரீடத்தையும், சிவபெருமான் ஸ்ரீ சக்கரம் என்றழைக்கப்படும் ஒரு ஆரத்தையும் வழங்கினர். அவர்கள் ஸ்ரீ காமாக்ஷி தேவியின் திருவுருவச் சிலைக்கு அனைத்து ஆபரணங்களையும் அணிவித்து, அவளை வழிபட்டு, காஞ்சியில் உள்ள இந்தத் தலத்தைப் புனிதப்படுத்தி, இனிவரும் எல்லா காலங்களிலும் பக்தர்களுக்குத் தனது அருளைப் பொழிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.
காஞ்சி காமாட்சியின் அருள் லீலை
மஹாலக்ஷ்மி அருஉருவ சாபத்தில் இருந்து விடுபடுதல்
திருப்பாற்கடலைக் கடைந்தபோது, ஆமையாக உருவெடுத்து, மந்தார மலையைத் தன் முதுகில் தாங்கியிருந்த வெண்ணிறத் திருமேனியுடைய விஷ்ணு பகவான், ஹாலாஹல விஷத்தின் கொடிய வெப்பத்தால் பீடிக்கப்பட்டு, அவரது திருமேனி கருமை நிறமடைந்தது. பாற்கடலில் இருந்து தோன்றிய லட்சுமி தேவியை தேவர்கள் விஷ்ணு பகவானுக்குத் திருமணம் செய்து வைக்க முன்வந்தனர். தனது பளபளப்பான பொன்னிற மேனிக்கு பெயர் பெற்ற லட்சுமி தேவி, ஒருமுறை விஷ்ணுவின் கருமையான நிறத்தைக் கேலி செய்து, அவர் தனக்குச் சமமானவர் அல்ல என்று வேடிக்கையாகக் கூறினார். தனது அழகான நிறத்தைப் பற்றிய எண்ணத்தால் ஏற்பட்ட அவளது கர்வத்தை அடக்க விஷ்ணு பகவான், மஹாலக்ஷ்மி தனது அழகை இழக்க வேண்டும் என்று சபித்தார். விளையாட்டுத்தனம்கூட சில சமயங்களில் துயரமாக மாறக்கூடும் என்பதையும், மிகவும் நெருக்கமான மற்றும் அன்பானவர்களிடம் பேசும்போதுகூட ஒருவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும் உலகுக்குக் காட்ட இது ஒரு உதாரணமாகும். இதனால் லட்சுமி மிகவும் மனவேதனை அடைந்து, தான் இழந்த அழகை மீண்டும் அருளுமாறு ஸ்ரீ காமாட்சி தேவியிடம் பிரார்த்தனை செய்தாள். ஸ்ரீ காமாக்ஷி அவளுக்கு ஆறுதல் கூறி, காஞ்சிபுரத்தில் உள்ள காமகோட்டத்தின் காயத்ரி மண்டபத்தில் அமைந்துள்ள தனது சன்னதிக்கு இடதுபுறத்தில் இருக்குமாறு பணித்தார். அதன் மூலம், அவளுடைய பக்தர்கள் அவளுக்குக் குங்குமப் பிரசாதத்தை வழங்கி, அதை அவளுக்கே மீண்டும் சமர்ப்பிப்பார்கள் என்றும், அதன் மகிமையால் அவள் தனது அழகிய உருவத்தை மீண்டும் பெறுவாள் என்றும் கூறினார். அதற்குப் பதிலாக, தான் அவர்களுக்கு எல்லாச் செல்வங்களையும் வழங்குவதாக அவள் லட்சுமியிடம் கூறினாள். லட்சுமி தேவி அவளது விருப்பத்திற்கு இணங்கி, தனது அழகிய வடிவத்தை மீண்டும் பெற்றாள். இவ்வாறு அருவ லட்சுமி, சௌந்தர்ய லட்சுமியாக மாறினாள்.
விஷ்ணு பகவானும், அவசரத்தில் தனது பத்தினியான ஸ்ரீ லட்சுமியை சபித்ததில் தான் செய்த தவறை உணர்ந்து, அவளைச் சமாதானப்படுத்துவதற்காக காஞ்சிக்கு வந்தார். காயத்ரி மனபாத்தில், லட்சுமி தேவியின் அழகான திருஉருவை கண்டு அவர் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால், அவளுக்குத் தெரியாமல் பார்க்க விஷ்ணு விரும்பினார். அவர் அவளை நோக்கி ரகசியமாகச் சென்றபோதிலும், அவள் அவரை கவனித்துவிட்டாள். காமாட்சி தேவியின் பாதுகாப்பில் இருக்கும் தைரியத்தால், தன்னைத் திருட்டுத்தனமாகப் பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணுவை அவள் 'கள்வன்' அதாவது 'திருடன்' என்று அழைக்கும் துணிச்சலையும் கொண்டிருந்தாள். அதனால், காயத்ரி மண்டபத்தில் சௌந்தர்ய லட்சுமிக்கு அருகில் எழுந்தருளியிருந்த விஷ்ணு பகவான், 'கல்வர்' என்று அழைக்கப்பட்டார். கல்வர் சன்னதியானது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும், மேலும் திருமங்கை ஆழ்வார் இந்தத் தெய்வத்தைப் போற்றிப் பாடியுள்ளார்.
காஞ்சி காமாட்சியின் வரலாறு
திருவாரூரில் பிறந்தால் முக்தி, அண்ணாமலையானை நினைத்தாள் முக்தி, காசியிலே பிறவி பிணி முக்தி. காஞ்சியில்? ஆம் காஞ்சியில் ஒரு நாழிகை வாழ்ந்தால் கூட முக்தி.
காஞ்சியில் கோயில் கொண்டிருக்கும் காமாக்ஷி, தன் பக்தர்களுக்கு வேண்டும் வரத்தை அள்ளி தருபவளாக இருக்கிறாள். சக்தி, தாக்ஷயினியாக இருந்த போதில் ஈசனின் உத்தரவை மீறி தக்ஷனின் யாகத்தில் கலந்து கொண்டால். தக்ஷன் ஈசனுக்கு யாகத்தில் தரவேண்டிய அவிர்பாகத்தை கொடுக்காததை கண்டு கோபம் கொண்டு அந்த யாக அக்கினியிலே குதித்தாள். ஈசன் அந்த செய்தியை கேள்வியுற்று தாக்ஷயிணியின் உடலை தலை மேல் தூக்கி ஆடினார். அப்படி ஆடும் பொழுது அன்னையின் ஒவ்வொரு பாகமும் பூமியில் ஒவ்வொரு இடத்தில விழுந்து அது ஷக்தி பீடமாக மாறியது. அவ்வாறு அன்னையின் நாபி அதாவது வயிற்று பகுதி காஞ்சி மாநகரில் விழுந்தது. தாயின் கர்ப்பத்தில் உள்ள ஒரு குழந்தைக்கு எவ்வாறு தாயின் நாபி கொடி மூலம் தாய் உண்ணும் உணவின் போஷாக்கு சென்றடைகிறதோ, அது போல அன்னை பூதேவி, காஞ்சியில் அமர்ந்து உலகத்தில் உள்ள எல்லா ஜீவராசியையும் போஷித்து, வளர்த்து ரக்ஷித்து வருகிறாள்.
இந்த க்ஷேத்ரத்தை காஞ்சி காமகோடி என்று அழைப்பதற்கான காரணம், இந்த க்ஷேத்ரத்தில் எவன் ஒருவன் தன் ஆசைகள் நிறைவேற தான, தர்மங்களை செய்கிறானோ அந்த தான தர்ம பயன் கோடி கோடியாக வளரும் என்று ஸ்ரீ காமாக்ஷி மஹாத்மயத்தில் கூறப்பட்டுள்ளது. அதற்கு சான்றாக ஒரு நிகழ்வும் நடந்தது. முன்பொரு காலத்தில் பிரம்மன் ஆதி சக்தியை காஞ்சியில் பூஜித்து வந்தார். பூஜையின் முடிவில் தாமரை பூ ஒன்றை வான் நோக்கி எறிந்தார். அது ஒரு மானுடனாகி பிரமனை வணங்கியது. ஆகாயத்தில் இருந்து பூமிக்கு வந்ததால் ஆகாச பூபதி என்று பெயரிட்டார் ப்ரம்மா. அவனிடம் காஞ்சி மாநகரின் ஆட்சியை கொடுத்தார் ப்ரம்மா. அவனும் காஞ்சியை செவ்வனே ஆட்சி புரிந்து வந்தான்.
ஆகாச பூபதி பிள்ளை வரம் வேண்டி, அம்பாளை பிரார்த்தித்தான். அம்பாளும் ஆகாச பூபதிக்கு இறங்கி, விநாயகரையே அவனுக்கு பிள்ளையாக பிறக்க கடவது என்று அருளினால். அந்த குழந்தையின் பெயர் துண்டீரன். துண்டீரனின் நாம கரண விழா சிறப்பாக நடைபெற்றது. அன்னதானம் மிக பிரம்மாண்டமாக நிகழ்ந்தது. அங்கே தேவியும் வந்து உணவு அருந்தினால். சற்று நேரத்தில் அங்கே பொன்மழை பெய்தது. ஆகாச ராஜனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் தீடிர் என்று பொன்மழை பொழிகிறது? என்ன காரணத்தினால் என்று புரியவில்லை. அப்பொழுது கணபதியின் அம்சமான துண்டீரன் எனக்கு பொன்மழை ஏன் பொழிந்தது என்று தெரியும் என்று கூறினார். அன்னதானத்திற்கு தேவையான பொருட்கள் சரியாக இருக்கிறதா என்று ராணி சோதிக்கும்போது, அவளுடைய கை விரலில் அணிந்திருந்த மோதிரத்தில் இருந்து ஒரு சிறிய பொன்னாலான முத்து பருப்பில் விழுந்தது. அந்த பருப்பில் சமைத்த உணவில் உள்ள அந்த சிறிய பொன்முத்து சக்தியாக வந்து உண்ட தாயின் வாயில் சென்றது. அதுதான், இங்கு பொன்மழை பெய்ய காரணம். அவள் வேறு யாரும் இல்லை காமாக்ஷி தேவி. காமாக்ஷி தேவி தன் பக்தர்கள் ஆத்மார்த்தமாக கொடுக்கும் எந்த ஒரு பொருளையும் பல மடங்கு பெருக்க கூடியவள், அதனாலே அந்த க்ஷேத்ரத்துக்கு "காஞ்சி காமகோடி" என்று பெயர் வந்தது.
காஞ்சியில் துண்டீர மகாராஜாவுக்கு தனி சந்நிதி உள்ளது.
காஞ்சி காமாட்சியின் வரலாறு
பூத நாராயனர் வரலாறு
நாராயணர் மல்லகன் என்னும் அசுரனடன் கடுமையாக போர் புரிந்தார். நாராயணர் போர் புரியும்போது மல்லகனின் உடலில் இருந்து விழும் ஒவ்வொரு ரத்தமும் இன்னொரு அசுரனாக உருவாகி நாராயனுடன் போர் புரிந்தது. நாராயணர் பல ஆயிர கணக்கான அசுரனுடன் போர் செய்து களைத்து செய்வதறியாது சிவனிடம் முறையிட்டார். சிவன் தன்னுடைய ஜடா முடியில் இருந்து இரண்டு பூத கணங்களை உருவாக்கி மல்லகனிடம் போர் புரிந்து வெற்றி பெறும்படி ஆணை இட்டார். அந்த இரு பூத கணங்களும் மல்லகனுடன் போர் புரிய தொடங்கின. மல்லகனின் ரத்தத்தில் இருந்து இன்னொரு அசுரன் உருவாவதை உணர்ந்து, இரு பூத கணங்களும் மல்லகனின் ரத்தம் சிந்தாதவாறு, அதை குடித்து போரிட்டு வெற்றி பெற்றது. ஆனால் அசுரனின் ரத்தத்தை பூதகணங்கள் குடித்ததினால், செய்வதறியாது நாராயணனை தாக்கியது. நாராயணரும் இந்த பூதகணங்கள் ஒரு நல்ல காரியத்துக்காக சிவனின் ஜடாமுடியில் இருந்து தோன்றின. இவைகள் அசுரன் ரத்தத்தை குடித்ததினால் இவ்வாறு தாக்குகிறது என்பதை உணர்ந்து அவ்விரு பூத கணைகள் மீதும் நின்று, அமர்ந்து மற்றும் படுத்து, அந்த பூத் கணங்களை தன் சுய கட்டுப்பாட்டிற்கு நாராயணன் கொண்டு வந்தார். பூத கணங்கள் நாராயணரையே நாம் தாகக்கிவிட்டோமே, இந்த பாவத்தை எப்படி போக்குவது என்று சிவனை பிரார்த்தித்து. மேலும் நாராயணனும் சிவனின் பூத கணங்களை தாக்கியதற்காக மனம் வருந்தி சிவனை வேண்டலானார். சிவன் அவர்கள் முன் காட்சி கொடுத்து தன்னுடைய ஐந்து தலையில் இருந்தும் கங்கையை பொழியும்படி செய்து ஒரு தீர்த்தத்தை உருவாக்கினார். அந்த தீர்த்தத்தில் நீராடி பூதகணங்களை தங்கள் பாபத்தை போக்கி கொள்ளும்படி ஆணையிட்டார். பந்தகாசுரனின் ரத்தத்தை குடித்து சுயநினைவு இழந்த பூதகணங்களை நாராயணர் அடக்கி தன சுய நினைவுக்கு கொண்டு வந்ததால் இத்தலத்தில் "பூத நாராயணர்" என்று அமர்ந்த கோலத்திலும், நின்ற கோலத்திலும் மற்றும் சயன கோலத்திலும் நாராயணர் அருள் பாலிக்கிறார்.
நந்தனார் சரித்திரம்- Part 2 நந்தனார் திருப்புங்கூர் சிவலோகநாதனைத் தரிசனம் செய்து ஆதனூர் வந்த நாள் முதலாய் உணவு உண்ணாமல், உறக்கம் கொள்ளாம...