வெள்ளி, 4 ஜூன், 2021

CHEIRO வின் சுவாரஸ்யங்கள் PART 3

 CHEIRO வின் சுவாரஸ்யங்கள் PART 3 

பிரிட்டிஷ் அரச குடும்பம் CHEIRO வின் ஜோதிட நிபுணத்துவத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்தனர். அதற்கு காரணம் CHEIRO வின், இங்கிலாந்து மாமன்னர் EDWARD VII பற்றிய ஜோதிட கணிப்பு தான். CHEIRO 1891ஆம் ஆண்டு முதல் முறையாக ராஜா  EDWARD VII சந்தித்தார். அது ஒரு சுவாரஸ்யமான கதை. CHEIROவின் பெண் வாடிக்கையாளரான ஒருவர் CHEIROவை தன் இல்லத்துக்கு வருமாறு அழைத்தார். CHEIROவும் அவருடைய இல்லத்துக்கு சென்றார். அங்கு அந்த பெண் வாடிக்கையாளர் CHEIROவிடம் நீங்கள் எனக்கு ஒரு உபகாரம் செய்ய வேண்டும். நான் இங்கு திரை போட்டிருக்கிறேன், அந்த திரைக்கு பின்னால் அமர்ந்து, திரைக்கு முன்னாள் இருப்பவர் கைகளை பார்த்து ஜோதிடம் கூற வேண்டும். அவர் இதற்காகவே இங்கு பிரத்யேகமாக வந்து கொண்டிருக்கிறார் என்றார். CHEIROவிர்க்கு வருபவர் யாரென்று தெரியாது. சற்று நேரத்தில் அவர் வந்து விடுவார் அமர்ந்து கொள்ளுங்கள் என்று கூரிவிட்டு சென்றால். CHEIRO திரைக்கு பின்னால் அமர்ந்து வெளிச்சத்தை சரிபார்த்து கொண்டு, வருபவரை எதிர் நோக்கி கொண்டிருந்தார். வந்தவர் தன் கைகளை திரைக்கு முன்னாள் இருக்கும் CHEIRO விடம் காண்பித்தார். CHEIRO அவருடைய கைகளை பார்த்து முக்கியமான சில நாட்களையும் தேதிகளையும் குறிப்பிட்டு அந்த தேதிகளும் மற்றும் நாட்களும் எவ்வளவு முக்கியம் வாய்ந்ததாக இருந்திருக்கும் என்று கூறினார். மேலும் அவர்களுடைய வாழ்கையில் எண்கள் 6 மற்றும் 9 தொடர்புடைய கிழமையோ, நாட்களோ, மாதமோ முக்கியம் வாய்ந்ததாக இருந்திருக்கும் என்று கூறினார். உதாரணத்திற்கு மார்ச் 21- ஏப்ரல் 21, ஏப்ரல் 21- மே 27, அக்டோபர் 21-நவம்பர் 27 போன்ற மேலே குறிப்பிட்ட தேதிகளில் முக்கியமான நிகழ்வுகள் உங்களை தனிப்பட்ட முறையில் பாதிக்கும் வண்ணம் இருந்திருக்கும் என்று கூறினார். அதை கேட்ட உடன் EDWARD VII அவர்கள் வியந்து, அது முற்றிலும் உண்மையகவே இருப்பதை உணர்ந்து  சற்று முன்னே வந்தது தான் தாமதம் அந்த திரையில் குத்த பட்டிருந்த ஊசி கழன்று திரை கீழ விழுந்தது. EDWARD VII அவர்களும் CHEIRO அவர்களும் நேர் எதிரே சந்தித்து கொண்டனர். CHEIRO அவர்களுக்கு சற்று பயமும் பதற்றமும் தோற்றி கொண்டது. ஆனால் EDWARD VII அவர்கள் CHEIRO விடம் நீங்கள் பயப்பட தேவையில்லை, நீங்கள் உங்கள் திரமையை அற்புதமாக வெளிப்படுத்திநநீர்கள், மேலும் முதல் முறையாக என் வாழ் நாளில் இது போன்ற விஷயங்களில் நான் முழு திருப்தி அடைந்தேன் என்று கூறினார். மேலும் EDWARD VII அவர்கள் CHEIRO விடம் நீங்கள் நான் யார் என்பதை மறந்து முன்பு போலவே நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை கூறலாம் என்றார். CHEIRO அவர்கள் சற்றே நிதானித்து மேலும் கூறலானார். அதன் பிறகு CHEIRO அவர்கள் ஒரு காகிதத்தை எடுத்து அதில் சிலவற்றை குறிப்பிட்டு எந்தெந்த வருடத்தில் மற்றும் தேதியில் அவருடைய வாழ்க்கையில் முக்கியமான சில நிகழ்வுகள் நடக்கும் என்று குறிப்பிட்டார். மேலும் EDWARD VII அவர்கள் இந்த 6ம் என்னும் 9ம் என்னும் இணையும் பொழுது என் வாழ்க்கை கடைதெருமா என்று கேட்கவும் CHEIRO அவர்கள் "ஆம்" என்று பதில் அளித்தார். அதையே EDWARD VII அவர்கள் நகைச்சுவையாக CHEIRO வை பார்க்கும் பொழுது எல்லாம் இவ்வாறு கூறுவார் "பாருங்கள் இந்த மனிதர் என்னை 69 வயதுக்கு மேல் வாழ விடமாட்டேன் என்கிறார்". CHEIRO கூறியது போல்  1841ல் பிறந்த அரசர் EDWARD VII, 1910ஆம் ஆண்டு மே மாதம் தனது 69 வது வயதில்தான் காலமானார். 

இன்னொரு சமயம் அரச குடும்பத்தை சேர்ந்த நபர்களுடய கைகளை பார்பதற்கு CHEIRO வுக்கு அழைப்பு வந்தது. CHEIRO அவர்கள் அரச குடும்பத்தை சேர்ந்த ஒவ்வோருவர் கைகளையும் வரிசையாக பார்த்து கொண்டு வந்தார். அப்பொழுது இளவரசர் Edward VIII (Prince of Wales) இன் கைகளை பார்த்து கூறிய விஷயம் அரச குடும்பத்தை பதர வைத்தது. அது என்னவென்றால் இந்த இளவரசர்  அரியணை ஏறினாலும் தன் காதலுக்காக மணிமுடியை துறப்பார். காதலா அல்லது ராஜ்ஜியமா என்று யோசித்தாள் இவர் காதலை தேர்ந்தெடுத்து ராஜ்ஜியத்தை துரப்பார். அன்றைய காலகட்டத்தில் பிரிட்டனின் ஆழுமையின் கீழ் 26 நாடுகள் இருந்தது. CHEIRO அவர்கள் சொன்னது போல் EDWARD VIII 10.12.1936 அன்று தன்னுடைய காதலி Wallis Simpson என்பவருக்காக தன் மனிமுடியை துறந்தார்.

Edward VIII and Wallis Simpson on their Mediterranean holiday, 1936.

Edward VIII அவர்களை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள சுட்டிகுள் செல்லவும்.

https://en.m.wikipedia.org/wiki/Edward_VIII

புதன், 2 ஜூன், 2021

CHEIRO வின் சுவாரஸ்யங்கள் PART 2


 CHEIRO வின் சுவாரஸ்யங்கள் 

ஒரு சாயங்கால பொழுதில் ஒரு மனிதர் CHEIRO விடம் நான் உங்களை ஒரு இல்லத்திற்கு கூட்டி செல்கிறேன். அங்கே ஒருத்தருடைய கை ரேகையை நீங்கள் பார்க்க வேண்டும். அந்த கை உங்களை நிச்சயமாக ஈர்க்கும் வகையில் இருக்கும் என்று கூறினார். CHEIRO வும் அதற்க்கு சம்மதித்து அவருடைய காரில் புறப்பட்டார். மேலும் அந்த மனிதர் CHEIRO விடம் நீங்கள் கை ரேகை பார்க்கும் நபரிடம் எந்தவித கேள்விகளையும் கேட்க கூடாது, ஆனால் நீங்கள் அவர்களுடைய கை ரேகையில் என்ன பார்க்கிறீர்களா அதை அப்படியே அவரிடம் கூற வேண்டும் என்று வாக்குறுதியும் கேட்டார். CHEIRO அதற்கும் சம்மதித்தார். St. Johns Wood அருகில் உள்ள ஒரு பெரிய தோட்டம் உள்ள வீட்டிற்கு முன்னாள் CHEIRO வை அழைத்து வந்த நபர் கதவு மணியை தட்டினார். ஒரு பெண் தன் தலையும், முகமும் தெரியாத வகையில் முக்காடு போட்டு கொண்டு CHEIRO விடம் தன் கையை காண்பித்தார். CHEIRO அந்த கையை பார்த்து ப்ரம்மித்து போனார். CHEIRO கவனமாக அந்த பெண்ணின் கை ரேகையை பார்த்து அவருடைய வாழ்க்கை, புத்திசாலித்தனம், லட்சியம், வெற்றி சாதனைகள், போன்றவற்றை கூறிக்கொண்டு இருக்கும் போது அந்த பெண் "Oh My God Its all True" என்று பிரெஞ்சு மொழியில் நடு நடுவே கூறினால். அந்த பெண் இறுதியில் தன் முக திரையை விளக்கினால். அந்த பெண் வேறு யாருமில்லை SARAH BERNAHARDT என்னும் பிரபலமான பிரெஞ்சு நடிகை. CHEIRO விற்கு ஒரு பழக்கம் உண்டு. தன்னிடம் கை ரேகை பார்பவர்களுடய கை ரேகை பதிவை அவர் வைத்திருக்கும் புத்தகத்தில் பதிவிட்டு அவர்களுடைய கையொப்பததை பெறுவார். அப்படி SARAH BERNHARDT உடைய கை ரேகையும், கையொப்பததையும் பெற்றார். அதில் SARAH BERNHARDT இவ்வாறு எழுதி இருந்தார் " கடவுள் நம்முடைய கைகளில் ரேகைகளை கொடுத்து நம்முடைய கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் தெரிந்து கொள்ள வகை செய்திருக்கிறார், ஆனால் இந்த கை ரேகையை வைத்து நம்முடைய நெருங்கியவர்கள் உடைய ஆபத்துகள் மற்றும் அவர்களுடைய சோகங்கலை தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் கடவுள் எல்லாம் நன்மைக்காகவே செய்வார்".  

SARAH BERNHARDT இந் புகைப்படம் கீழே கொடுத்துள்ளேன்.


CHEIRO,  SARAH BERNHARDT பற்றி  அவருடைய புத்தகமான "Languages of the Hand" இல் இவ்வாறு எழுதி இருந்தார். SARAH BERNHARDT இந் கைகள் குண்டான வட்ட வடிவிலும், கூர்மையான விரல்களுடனும் இருந்தது. இந்த மாதிரி கைகளை உடையவர்கள் உற்சாகமானவர்களாக, கலை சம்பந்த பட்டவர்களாகவும் இருப்பார்கள். அவருடைய கைகளில் உள்ள எல்லா ரேகைகளும் நேராக முடிகிறது. அவ்வாறு நேர் கோணத்தில் முடியும் கைரேகைகளை உடையவர்கள் வலுவான முடிவு எடுக்க கூடியவராகவும், தன்னம்பிக்கை உடையவராகவும், துல்லியமான நோக்கமுடையவராகவும் இருப்பார்கள். பொதுவாக பெரும்பாலானவர்கள் கைகளில் எதாவது ஒரு ரேகை மட்டும் நேர் முகமாக செல்லும். அனால்  SARAH BERNHARDT கைகளில் அணைத்து முதன்மையான ரேகைகளும் நேர் முகமாக செல்வது, அவர் தன் சொந்த முயற்சியில் அவருடைய வெற்றி பாதையை வகுத்து கொள்வார் என்பதை குறித்தது. இன்னொரு வியக்க வைக்கும் விஷயம் என்னவென்றால் SARAH BERNHARDT இந் கைகளில் மணிக்கட்டில் (Wrist) இருந்து இரண்டு ரேகைகள் செல்கிறது. ஒரு ரேகை மணிக்கட்டில் இருந்து இரண்டாவது விரலுக்கும் (Index finger), மற்றொன்று ரேகை மூன்றாவது விரலுக்கும் (Middle finger) செல்கிறது. இது ரொம்பவும் அரிதாக இருக்க கூடிய அமைப்பு. இரண்டாவது விரலுக்கு செல்லும் கை ரேகையை " Line of Destiny" என்று கூறுவர், ஆனால் CHEIRO அவர்கள் அதை "Line of Individuality" என்று கூறுவார். மூன்றாவது விரலுக்கு செல்லும் கை ரேகையை "Line of Success" or "Line of Sun" என்று கூறுவர். அப்படி மணிக்கட்டில் இருந்து மூன்றாவது விரலுக்கு செல்லும் கை ரேகை ஒருத்தருடைய புத்திசாலித்தனம், வெற்றி, புகழ்  போன்றவற்றை குறிக்கும். பொதுவாக பெரும்பாலான கைகளில் இந்த ரேகை இருக்காது, அப்படி இருந்தாலும் அது உடைந்தோ அல்லது அலை அலையாகவோ அல்லது தெளிவாகவோ இருக்காது. ஆனால் SARAH BERNHARDT கைகளில் அந்த ரேகை தெளிவாக இருப்பதை நாம் காணலாம். அப்படி பட்டவர்கள் வெற்றிகளை குவித்து மக்கள் மத்தியில் பிரபலயமானவர்களாக இருப்பார்கள். SARAH BERNHARDT உடைய கை ரேகை பதிவை கீழே கொடுத்துள்ளேன்.

SARAH BERNHARDT பற்றி தெரிந்து கொள்ள இந்த சட்டிக்குள் செல்லவும்  https://en.wikipedia.org/wiki/Sarah_Bernhardt





ஞாயிறு, 30 மே, 2021

Dr. Henry Meyer பற்றிய CHEIROவின் கணிப்பு

Dr.Henry Meyer

CHEIRO சொன்னபடி Dr. Meyer இன் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாறியதா?. அதை தெரிந்து கொள்வதற்கு முன் யார் இந்த Dr Henry Meyer. என்ன குற்றத்துக்காக தண்டனை அனுபவிக்கிறார் என்று பார்ப்போம். Dr. Meyer என்பவர் ஒரு மருத்துவர். அவர் தன்னிடம் மருத்துவம் பார்த்துக்கொள்ளும் நோயாளிகளில் வசதி படைத்த நபருக்கு உயிர் காப்பீடு (Life Insurance) எடுத்து வைத்து கொள்வார். அன்றைய காலகட்டத்தில் ஒருவருக்கு காப்பீடு உறவினர்கள் மட்டும் தான் எடுக்க வேண்டும் என்று இல்லை, யார் வேண்டுமானாலும்  எடுக்கலாம். அதனால் மருத்துவரான Meyer தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு காப்பீடு எடுத்து அவர்களை தான் கற்ற மருத்துவத்தின் மூலமே கொலை செய்துவிட்டு காப்பீடு தொகையை பெற்றுவிடுவார். இப்படிப்பட்ட ஒருவருக்கு மரணதண்டனை விதிப்பது என்பது ஞாயம் தானே. இதை தான் நிருபரும் எண்ணினார். அனால் நடந்தவை என்னவென்றால். அந்த பரபரப்பான தீர்ப்பு நாளும் வந்தது. அதில் Dr. Meyerக்கு  தொழில்நுட்ப காரணத்தினால் (On Techincal Grounds), மரண தண்டனைக்கு பதிலாக ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பு வழங்கினார். CHEIROவின் கை ரேகை கணிப்பும் பலித்தது. CHEIRO, Dr.Henry Meyer என்பவர் ஒரு கொலை குற்றவாளி என்று அவருடைய கை ரேகை பதிவிலிருந்து எவ்வாறு கண்டு பிடித்தார். CHEIRO Dr.Henry Meyerஇன் கை ரேகை பற்றி இவ்வாறு கூறினார் "Line of Head or Line of Mentality" கை ரேகை அவருடைய உள்ளங்கையில் வித்யாசமாக ஓடியது. அதாவது அந்த கை ரேகை அவருடைய உள்ளங்கையில் நடுவில் ஓடியது மட்டுமல்லாமல் அது அவருடைய நாலாவது விரலை (மோதிர விரல்) நோக்கி சென்றது. பொதுவாக "Line of Head or Line of Mentality" ரேகை மூன்று விதமாக இருக்கும்,  "Line of Head or Line of Mentality", "Line  of Life" க்கு மேல்புறமாகவோ, உள்புறமாகவோ அல்லது இணைந்தோ இருக்கும். அவ்வாறு இல்லாமல், ஒரு அசாதாரணமான விதத்தில் "Line of Head or Line of Mentality" Dr. Henry Meyer உடைய உள்ளங்கையில் இருந்தது என்று கூறினார். Dr. Henry Meyer உடைய கை ரேகை பதிவை கீழே கொடுத்தெள்ளேன். மேலும் CHEIRO அவர்கள் Dr. Henry Meyer மரண தண்டனையிலிருந்து எவ்வாறு தப்பிப்பார் என்று எதை பார்த்து உறுதிபண்ணினார் என்று அவர் இவ்வாறு கூறினார், "Line of Life" ரேகையில் தான் எந்த வித தடங்களையும் காணவில்லை என்று கூறினார்.

 

CHEIRO வின் சுவாரஸ்யங்கள் தொடரும்.





CHEIRO வின் சுவாரஸ்யங்கள்


CHEIRO


முந்தய கட்டுரையில் CHEIRO வின் கை ரேகை நிபுணத்துவத்தை பற்றி சோதித்த "NewYork World" என்ற பத்திரிகையின் நிருபர் எப்படி ஒரு கை ரேகையை பார்த்து ஒருவர் கொலை குற்றவாளி என்று இவரால் கண்டறிய முடிந்தது என்று ஆச்சர்ய பட்டார். மேலும் இவரோ மரண தண்டனையை எதிர்நோக்கி கொண்டிருக்கும் ஒரு கொலை குற்றவாளி. இவருக்கு எப்படி Dr. Meyerக்கு  விதிக்கப்படும் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றப்படும் என்றல்லாம் பல கேள்வி கனைகுளுடன் CHEIRO விடம் இருந்து விடைபெற்றார். நிருபர் CHEIRO விடம் எதையும் கூறாமல் விடைபெற்றார். CHEIRO விற்கு தான் ஆராய்ந்து கூறிய கை ரேகை பதிவுகள் எல்லாம் உண்மையா என்று தெரிந்து கொள்ள ஆவல். CHEIRO நிருபரிடம் அதை கேட்டும் விட்டார். அனால் நிருபரோ இந்த கேள்விக்குண்டான பதில்களை வரும் ஞாயிறு அன்று வரும் நியூ யார்க்   "World" பத்திரிகையில்  தெரிந்து கொள்வீர்கள் என்று கூறிவிட்டு சென்றார். CHEIROவால் சனி கிழமை இரவு முழுவதும் சரியாக தூங்க முடியவில்லை. ஞாயிறு பொழுது விடிந்ததும் தன்னுடைய பணியாள் கதவை தட்டி பத்ரிக்கையினை கொடுத்தார். அதில் இவ்வாறு எழுதி இருந்தது " CHEIRO கை ரேகை படித்த படிவங்களின் நபர்களான Mayor , District  Attorney, Nicoll Ward McAllister , Dr. Meyer போன்றவர்களான வாழ்க்கை பற்றி  வெற்றிகரமாக படித்தார்" என்று கொட்ட எழுத்தில் இருந்தது.  

இப்போழுது நிருபரின் மனதில் எழுந்த கேள்வி Dr. Meyerக்கு விதிக்க படவிருக்கும் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாறுமா?, CHEIRO சொன்னவை பலிக்குமா?. இதை பற்றி தெரிந்து கொள்ள அடுத்த பதிவில் காணலாம்.

வெள்ளி, 28 மே, 2021

ஜோதிடம் உண்மையா அல்லது பொய்யா

ஜோதிடம் உண்மையா அல்லது பொய்யா  

ஜோதிடம் உண்மையா அல்லது பொய்யா என்று நிறைய விவாதங்கள் உண்டு. அனால் அதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்க போவதில்லை. ஜோதிடம் என்பது ஒரு அற்புதமான கலை. அந்த கலையை பற்றி தெரிந்து கொள்வதற்காக ஒரு ஐரிஷ் நாட்டை சேர்ந்த ஒருத்தர் நம் இந்திய நாட்டுக்கு வந்து அக்கலைகளில் ஒன்றான கை ரேகை சாஸ்திரத்தை கற்று உலக புகழ் பெற்றார். அவருடைய பெயர் CHEIRO. இவருடைய இயர் பெயர் William John Warner. கை ரேகை சாஸ்திரத்தை பற்றிய பல புத்தகங்களை எழுதியுள்ளார்.  அவருடைய கை ரேகை நிபுணத்துவம்  பற்றி சிலவற்றை இங்கு பாப்போம்.

நான் முதலில் சொன்னது போல் ஜோதிடம் உண்மையா பொய்யா என்று நம் நாட்டில் மட்டும் அல்ல உலக நாடுகளிலும் இதே நிலை தான் நிலவியது. CHEIROவை சோதிப்பதற்காக அமெரிக்காவில் உள்ள "NewYork  World" என்ற பத்திரிக்கை ஒரு சோதனை வைத்தது. அந்த சோதனை என்னவென்றால் ஒரு 13 மனிதர்களுடைய கை ரேகை பதிவுகளை CHEIRO விடம் கொடுத்து அவர்களை பற்றிய விவரங்களை CHEIRO தன் கை ரேகை நிபுணத்துவின் மூலம் சொல்ல வேண்டும். CHEIRO அவரிடம் கொடுத்த 13இல் ஒரு கை ரேகை பதித்த பிரதியை மட்டும் தனியாக வைத்து விட்டு மற்ற கை ரேகை பிரதிகளை ஆராய்ந்து அவர்களுடைய குணாதிசயங்கள், அவர்களுடைய தொழில் போன்றவற்றை துல்லியமாக சொன்னார். அவரை பேட்டி எடுத்த நிருபர் ஒரு கை ரேகை பிரதி மட்டும் பாக்கி இருக்கு என்று கூற, CHEIRO இது  ஒரு கொலை குற்றவாளியின் கை ரேகை என்று கூறினார். அவரை பேட்டி எடுத்த நிருபர் அதிர்ந்து போனார். ஆம் அது ஒரு தூக்குத்தண்டனையை எதிர் கொண்டிருக்கும் ஒரு கொலை குற்றவாளியின் கை ரேகை தான். CHEIRO அவரை பற்றி இவ்வாறு தெரிவித்தார் " அந்த மனிதர் ஒரு குற்றம் இழைத்தாரா அல்லது பல குற்றம் இழைத்தாரா என்பது முக்கியமில்லை. ஆனால் இவர் தன்னுடைய நாற்பத்தி நாலாவது வயதில் இவருடைய குற்றங்கள் கண்டறியப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க படுவார்". CHEIRO அதோடு மட்டும் விடவில்லை, அவர் கூறிய மற்றொரு விஷயம் நிருபரை மட்டும் அல்ல எல்லோரையும் ஆச்சர்ய படவைத்தது. அது என்னவென்றால் இந்த  கொலை குற்றவாளியின் தூக்குத்தண்டனை ரத்தாகி அவர் தன் ஆயுள் முழுவதும் சிறையில் இருந்து தன் வாழ்நாளை கழிப்பார். அந்த கொலை குற்றவாளியின் பெயர் Dr . Henry Meyer.  CHEIRO வை பற்றிய சுவாரசியங்கள் தொடரும்.



திங்கள், 2 நவம்பர், 2020

லம்போர்கினி (LAMBORGHINI) கார்கள் உருவான கதை


லம்போர்கினி (LAMBORGHINI) கார்கள் உருவான கதை




நம் அனைவருக்கும் LAMBORGHINI CARS என்றால் ஆடம்பர கார்கள் என்று தெரியும். அப்படிப்பட்ட LAMBORGHINI CARS  உருவான காரணம் சுவாரசியமானது. FERUCCIO  LAMBORGHINI  என்பவர் திராட்சை விவசாயி குடும்பத்தை சேர்ந்தவர். FERUCCIO  LAMBORGHINI அவர்களுக்கு குடும்ப தொழில் ஆன திராட்சை சாகுபடியில் ஆர்வமில்லை. அதற்க்கு பதிலாக அவருக்கு விவசாயத்துக்கு உபயோகிக்கும் எந்திரங்கள்  மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. அதன் காரணமாக அவர் பழைய ராணுவ எந்திரங்களை  வாங்கி  விவசாயத்துக்கு பயன்படும் எந்திரங்களான 'TRACTORS' ஆக மாற்றி வடிவமைத்தார். அவர் மேலும் பொழுதுபோக்குக்காக புது வகையான ஸ்போர்ட்ஸ் கார்களை வாங்குவதில் ஆர்வம் கொண்டவர். அப்படி வாங்கிய FERRARI காரின் சோதனை ஓட்டத்தின் போது சில குறைபாடுகளை கண்டறிந்தார். 1960 ஆம் ஆண்டு ENZO FERRARI'S கார்கள் உலகளவில் முதல் இடத்தை பிடித்திருந்தது. FERUCCIO  LAMBORGHINI தான் கண்டறிந்த தொழில் நுட்ப குறைபாடுகளை  ENZO FERRARI இடம் கூறினார். ஆனால் ENZO FERRARI அவர்கள் அக்குறைபாடுகளை ஏற்பதற்கு பதிலாக FERUCCIO  LAMBORGHINI இடம் உங்களுக்கு ஸ்போர்ட்ஸ் கார்களை பற்றிய தொழில்நுட்பத்தை விட TRACTORS பற்றிய தொழில்நுட்ப  அறிவு அதிகமாக உள்ளது என்று கூறினார். ENZO FERRARI இன் இந்த கருத்து FERUCCIO  LAMBORGHINI இடம் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுவரை பொழுதுபோக்குக்காக உபயோகித்த சொகுசு கார்களை, உற்பத்தி செய்ய தீர்மானித்தார். மேலும் தனக்கு ஸ்போர்ட்ஸ் கார்களிலும் தொழில்நுட்ப அறிவு உள்ளது என்பதை  ENZO FERRARI க்கு உணர்த்த விரும்பினார்.  FERUCCIO  LAMBORGHINI அவர்கள் பல மாதிரிகளை உருவாக்கினார். 1964 ஆம் ஆண்டு OCTOBER மாதத்தில் "TURIN MOTOR SHOW" வில் தன்னுடைய "LAMBORGHINI 350 GTV" என்னும் உயர் ரக காரை அறிமுகபடுத்தினார். இன்றைக்கு ஆடம்பர கார்களின் பட்டியலில் LAMBORGINI கார்கள் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. 

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்

நமக்கு நல்ல ஆலோசனை எங்கிருந்து வந்தாலும் அதை நாம் ஏற்று கொள்ளவேண்டும். அது ஒரு சாதாரண மெக்கானிக்கிடம் இருந்தாலும் அதில் உள்ள குறைபாடுகளை ஏற்று அதை நாம் திருத்தி கொள்ளவேண்டும். நாம் கூறும் விஷயத்தை ஒருவர் ஏற்க மறுத்தால், அதனை அவர் எவ்வாறு ஏற்பாரோ அவ்வாறு நாம் கூற வேண்டும் உதாரணத்திற்கு LAMBORGHINI யை போல.


வியாழன், 29 அக்டோபர், 2020

ஐந்தே நிமிடத்தில் சுந்தர காண்டம்


 

ஐந்தே நிமிடத்தில் சுந்தர காண்டம் 

சுந்தர காண்டத்தை பாராயணம் செய்பவர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் உண்டாகும். நவகிரஹ தோஷங்கள் முற்றிலும் அகலும். எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். வாழ்வில் நம்பிக்கை ஏற்படும். நோய்கள் விலகும். ராமச்சந்திர மூர்த்தியையும், ராமபக்தனான அனுமனையும் மனதில் தியானித்து, இந்த எளிய சுந்தரகாண்டத்தை படிப்போருக்கு வாழ்வில் எல்லா நன்மைகளும் வந்து சேரும். 
 

சுந்தரகாண்டம் என்று பெயர் சொல்லுவார் 
இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார் 
கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன 
கருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சேநேயர் பெருமையிது.
அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே 
ஆயுத்தமாகி நின்றான், அணைத்து வானரங்களும் 
அங்கதனும், ஜாம்பவானும் அன்புடன் 
விடை கொடுத்து வழியனுப்பினரே!
வானவர்கள் தானவர்கள் வருநாத் தேவர்கள் 
வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே!
மைனாக பர்வதம் மாருதியை உபசரிக்க 
மகிழ்வுடன் மாருதியும் மைநாகனை திருப்தி செய்து 
சுரசையை வெற்றி கண்டு ஹிம்சை வதம் செய்து 
சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சேர்ந்தான் 
இடக்காக பேசிய இலங்கையின் தேவதையை 
இடக்கையால் தண்டித்து இலங்கையை கலக்கினான் 
அழகான இலங்கையில் அன்னை ஜானகியை அங்கும் 
இங்கும் தேடியே அசோக வனத்தை அடைந்தான் 
கிம்சுபா மரத்தடியில் ஸ்ரீராமனை தியானம் செய்யும் 
சீதா பிராட்டியை கண்டு சித்தம் கலங்கினான் 
ராவணன் வெகுண்டிட, ராட்சசியார் அரண்டிட 
வைதேகி கலங்கிட, வந்தான் துயர் துடைக்க 
கணையாழியை கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி 
சூடாமணியை பெற்று கொண்ட சுந்தர ஆஞ்சேநேயர் 
அன்னையின் கண்ணீர் கண்டு, அரக்கர் மேல் கோபம் கொண்டு 
அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான்.
பிரம்மாஸ்திரத்தால் பிணைத்திட்ட ஆஞ்சேநேயர் 
பட்டாபிராமன் பெயர் சொல்ல வெகுண்ட இலங்கை வேந்தன் 
வையுங்கள் தீ வாலுக்கென்றான். வைத்த நெருப்பினால் 
வெந்ததே இலங்கை நகரம். அரக்கனின் அகந்தையை அழித்திட்ட 
அனுமானும் அன்னை ஜானகியிடம் அனுமதி பெற்றுக்கொண்டு 
ஆகாய மார்கத்தில் தாவி வந்தான். அன்னையை கண்டவிட்ட 
ஆனந்தத்தில் மெய்மறந்தான். ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த
ஸ்ரீராமனிடம் ஆஞ்சநேயர் 'கண்டேன் சீதையை' என்றான்.
வைதேகி வாய்மொழியை அடையாளமாகக்  கூறி 
சொல்லின் செல்வன் ஆஞ்சநேயர் சூடாமணியை 
கொடுத்தான், மனம் கனிந்து மாருதியை மார்போடணைத்து 
ஸ்ரீராமர் மைதிலியை சிறை மீட்க சித்தமானார்.
ஆழ்கடலில் அற்புதமாய் அணை கட்டி படைகள் சூழ 
அனுமானும், இலக்குவனும் உடன் புறப்பட்டனர்.
அழித்திட்டான் இராவணனை ஒழித்திட்டான் அதர்மத்தை 
அயோத்தி சென்று ஸ்ரீராமர் அகிலம் புகழ ஆட்சி செய்தான்.
அவனை சரண் அடைந்தோருக்கு அவன் அருள் என்றும் உண்டு.

எங்கே எங்கே ரகுநாத கீர்த்தனமோ அங்கே அங்கே 
சிரம் மேல் கரம் குவித்து மனம் உருகி நீர் சொரிந்து 
ஆனந்தத்தில் மூழ்கி இருக்கும் ஆஞ்சேநேயா!
உன்னை பணிகின்றோம், பன்முறை உன்னை பணிகின்றோம்,
பன்முறை உன்னை பணிகின்றோம்.   
 


நந்தனார் சரித்திரம்- Part 2

  நந்தனார் சரித்திரம்-  Part 2 நந்தனார் திருப்புங்கூர் சிவலோகநாதனைத் தரிசனம் செய்து  ஆதனூர் வந்த நாள் முதலாய் உணவு உண்ணாமல், உறக்கம் கொள்ளாம...

Thiruvannamalai Girivalam benefits