CHEIRO வின் சுவாரஸ்யங்கள்
ஒரு சாயங்கால பொழுதில் ஒரு மனிதர் CHEIRO விடம் நான் உங்களை ஒரு இல்லத்திற்கு கூட்டி செல்கிறேன். அங்கே ஒருத்தருடைய கை ரேகையை நீங்கள் பார்க்க வேண்டும். அந்த கை உங்களை நிச்சயமாக ஈர்க்கும் வகையில் இருக்கும் என்று கூறினார். CHEIRO வும் அதற்க்கு சம்மதித்து அவருடைய காரில் புறப்பட்டார். மேலும் அந்த மனிதர் CHEIRO விடம் நீங்கள் கை ரேகை பார்க்கும் நபரிடம் எந்தவித கேள்விகளையும் கேட்க கூடாது, ஆனால் நீங்கள் அவர்களுடைய கை ரேகையில் என்ன பார்க்கிறீர்களா அதை அப்படியே அவரிடம் கூற வேண்டும் என்று வாக்குறுதியும் கேட்டார். CHEIRO அதற்கும் சம்மதித்தார். St. Johns Wood அருகில் உள்ள ஒரு பெரிய தோட்டம் உள்ள வீட்டிற்கு முன்னாள் CHEIRO வை அழைத்து வந்த நபர் கதவு மணியை தட்டினார். ஒரு பெண் தன் தலையும், முகமும் தெரியாத வகையில் முக்காடு போட்டு கொண்டு CHEIRO விடம் தன் கையை காண்பித்தார். CHEIRO அந்த கையை பார்த்து ப்ரம்மித்து போனார். CHEIRO கவனமாக அந்த பெண்ணின் கை ரேகையை பார்த்து அவருடைய வாழ்க்கை, புத்திசாலித்தனம், லட்சியம், வெற்றி சாதனைகள், போன்றவற்றை கூறிக்கொண்டு இருக்கும் போது அந்த பெண் "Oh My God Its all True" என்று பிரெஞ்சு மொழியில் நடு நடுவே கூறினால். அந்த பெண் இறுதியில் தன் முக திரையை விளக்கினால். அந்த பெண் வேறு யாருமில்லை SARAH BERNAHARDT என்னும் பிரபலமான பிரெஞ்சு நடிகை. CHEIRO விற்கு ஒரு பழக்கம் உண்டு. தன்னிடம் கை ரேகை பார்பவர்களுடய கை ரேகை பதிவை அவர் வைத்திருக்கும் புத்தகத்தில் பதிவிட்டு அவர்களுடைய கையொப்பததை பெறுவார். அப்படி SARAH BERNHARDT உடைய கை ரேகையும், கையொப்பததையும் பெற்றார். அதில் SARAH BERNHARDT இவ்வாறு எழுதி இருந்தார் " கடவுள் நம்முடைய கைகளில் ரேகைகளை கொடுத்து நம்முடைய கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் தெரிந்து கொள்ள வகை செய்திருக்கிறார், ஆனால் இந்த கை ரேகையை வைத்து நம்முடைய நெருங்கியவர்கள் உடைய ஆபத்துகள் மற்றும் அவர்களுடைய சோகங்கலை தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் கடவுள் எல்லாம் நன்மைக்காகவே செய்வார்".
SARAH BERNHARDT இந் புகைப்படம் கீழே கொடுத்துள்ளேன்.
CHEIRO, SARAH BERNHARDT பற்றி அவருடைய புத்தகமான "Languages of the Hand" இல் இவ்வாறு எழுதி இருந்தார். SARAH BERNHARDT இந் கைகள் குண்டான வட்ட வடிவிலும், கூர்மையான விரல்களுடனும் இருந்தது. இந்த மாதிரி கைகளை உடையவர்கள் உற்சாகமானவர்களாக, கலை சம்பந்த பட்டவர்களாகவும் இருப்பார்கள். அவருடைய கைகளில் உள்ள எல்லா ரேகைகளும் நேராக முடிகிறது. அவ்வாறு நேர் கோணத்தில் முடியும் கைரேகைகளை உடையவர்கள் வலுவான முடிவு எடுக்க கூடியவராகவும், தன்னம்பிக்கை உடையவராகவும், துல்லியமான நோக்கமுடையவராகவும் இருப்பார்கள். பொதுவாக பெரும்பாலானவர்கள் கைகளில் எதாவது ஒரு ரேகை மட்டும் நேர் முகமாக செல்லும். அனால் SARAH BERNHARDT கைகளில் அணைத்து முதன்மையான ரேகைகளும் நேர் முகமாக செல்வது, அவர் தன் சொந்த முயற்சியில் அவருடைய வெற்றி பாதையை வகுத்து கொள்வார் என்பதை குறித்தது. இன்னொரு வியக்க வைக்கும் விஷயம் என்னவென்றால் SARAH BERNHARDT இந் கைகளில் மணிக்கட்டில் (Wrist) இருந்து இரண்டு ரேகைகள் செல்கிறது. ஒரு ரேகை மணிக்கட்டில் இருந்து இரண்டாவது விரலுக்கும் (Index finger), மற்றொன்று ரேகை மூன்றாவது விரலுக்கும் (Middle finger) செல்கிறது. இது ரொம்பவும் அரிதாக இருக்க கூடிய அமைப்பு. இரண்டாவது விரலுக்கு செல்லும் கை ரேகையை " Line of Destiny" என்று கூறுவர், ஆனால் CHEIRO அவர்கள் அதை "Line of Individuality" என்று கூறுவார். மூன்றாவது விரலுக்கு செல்லும் கை ரேகையை "Line of Success" or "Line of Sun" என்று கூறுவர். அப்படி மணிக்கட்டில் இருந்து மூன்றாவது விரலுக்கு செல்லும் கை ரேகை ஒருத்தருடைய புத்திசாலித்தனம், வெற்றி, புகழ் போன்றவற்றை குறிக்கும். பொதுவாக பெரும்பாலான கைகளில் இந்த ரேகை இருக்காது, அப்படி இருந்தாலும் அது உடைந்தோ அல்லது அலை அலையாகவோ அல்லது தெளிவாகவோ இருக்காது. ஆனால் SARAH BERNHARDT கைகளில் அந்த ரேகை தெளிவாக இருப்பதை நாம் காணலாம். அப்படி பட்டவர்கள் வெற்றிகளை குவித்து மக்கள் மத்தியில் பிரபலயமானவர்களாக இருப்பார்கள். SARAH BERNHARDT உடைய கை ரேகை பதிவை கீழே கொடுத்துள்ளேன்.
SARAH BERNHARDT பற்றி தெரிந்து கொள்ள இந்த சட்டிக்குள் செல்லவும் https://en.wikipedia.org/wiki/Sarah_Bernhardt


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக