CHEIRO வின் சுவாரஸ்யங்கள் PART 4
CHEIRO தன்னுடைய secretary இடம் தான் கை ரேகை பார்க்கும் நபரின் விபரஙகளை தெரிவிக்க வேண்டாம் என்று உத்தரவு இட்டுறுந்தார். அது எதற்காக வென்றால் தன்னிடம் கை ரேகை பார்க்கும் நபர்கள் பெரும்பாலானோர் பிரபல்யம் ஆனவர்களாக இருப்பதாலும், அவர்களை பற்றி முன்னமே தெரிந்து இருப்பதனால் தான் கை ரேகையை பார்த்து அலசி கூறினாலும், அவரை பற்றி ஏற்கனவே தெரிந்ததால் கூறுகிறோம் என்று நினைக்க வாய்ப்பு உண்டு என்பதற்காக. ஒருமுறை அமெரிக்காவின் எழுத்தாளரும் நகைச்சுவையாளருமான Mark Twain என்பவர் CHEIRO, விடம் தன்னுடைய கையை காண்பித்து எதிர்காலத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு வந்திருந்தார். CHEIRO விற்கு வந்திருப்பவர் பிரபல எழுத்தாளர Mark Twain என்பது தெரியாது. Mark Twain அவர்கள் அப்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தார். Mark Twain அவர்கள் CHEIRO வை சந்திப்பதற்காக வந்து விட்டாரே தவிர மனதுக்குள் தான் நேரத்தையும் பணத்தையும் வீன் செலவு செய்கிறோமோ என்ற நினைப்பு மேலோங்கி இருந்தது. நாம் அனைவரும் நினைப்போம் அல்லவா, "வந்தது வந்து விட்டோம் அவர் என்னதான் சொல்ல போகிறார் என்று பார்த்து விடலாம்" என்று அவர் காத்திருந்தார். CHEIRO அவர்கள் Mark Twain அவர்களின கைகளை பார்த்து துல்லியமாக அவருடைய கடந்த காலத்தை கூறினார். Mark Twain அவர்களுக்கு ஒருத்தருடய எதிர்காலத்தை பற்றி முன்னமே தெரிந்து கொள்வது ஆச்சரியமாக இருந்தது.
எழுத்தாளர் அல்லவா, எதையும் ஆதாரம் இல்லாமல் நம்புவதற்கு மனம் ஒப்பவில்லை. அதனால் அவர் CHEIRO விடம் பல கேள்விகளை கேட்டு தெளிந்தார். CHEIRO அவர்கள் தன்னிடம் உள்ள இரண்டு கை ரேகை பதிவுகளை காட்டி அதில் உள்ள ரேகைகள் ஒன்று போல் உள்ளதை காண்பித்தார். அவர்களுடைய வாழ்க்கையிலும் ஒரே மாதிரியான சம்பவங்கள் நடந்தேறின என்பதை கூறினார். அந்த இரண்டு கை ரேகை பதிவுகளில் ஒன்று தாயுடயது மற்றொன்று மகளுடயது என்று CHEIRO கூறினார். இந்த சம்பவம் Mark Twain அவர்கள் எழுதிய நாவலான "Pudd’nhead Wilson" க்கு கதை கருவாக அமைந்தது.
மேலும் Mark Twain அவர்கள் Cheiro வின் கைரேகை பதிவு புத்தகத்தில் இவ்வாறு எழுதினார் "Cheiro அவர்கள் என்னுடைய குணத்தினை மிக துல்லியமாக கூறினார். இதை நான் கூற கூடாது என்று நினைத்தாலும் Cheiro வின் ஆளுமை என்னை இதை ஒப்புக்கொள்ள வைத்தது".


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக