செவ்வாய், 27 ஜூன், 2023

வெளிநாடு செல்லும் யோகம்

வெளிநாடு செல்லும் யோகம் 

ஒருவர் வெளிநாடு செல்வதற்கு ஜாதக அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று இந்த பதிவில் அலசுவோம். 

1. நீர் கிரகமான சந்திரன் ஜாதகத்தில் அமைந்திருப்பது பொறுத்து கூறலாம்.

2. நீண்ட தூர பயணத்தை குறிக்கும் 9' ம் இடம் எப்படி அமைந்திருக்கிறது என்று பொறுத்து கூறலாம்.

3. விரய ஸ்தானமான 12' ம் இடம் எப்படி அமைந்திருக்கிறது என்று பொறுத்து கூறலாம்.

4. ராசி கட்டங்களை நிலம், நீர், நெருப்பு, காற்று என்று பிரித்துள்ளார்கள். அதில் நீர் (கடகம், விருச்சிகம், மீனம்) மற்றும் காற்று (மிதுனம், துலாம், கும்பம்) ராசிகளில் அமர்ந்துள்ள கிரகம் பொறுத்து கூறலாம்

5. 9, 12 ம் வீடுகள் சர ராசியாக அமய வேண்டும் அல்லது 9,12 ம் அதிபதிகள் சர ராசியில் அமர்ந்து இருப்பதை பொறுத்து கூறலாம். மேஷம், கடகம், துலாம், மகரம் சர ராசிகளாகும். 

6. பாம்பு கிரகங்களான ராகு மற்றும் கேது (வேற்று இனத்தினர் அல்லது மதத்தினரை குறிக்கும்) ஜாதகத்தில் எவ்வாறு அமைந்து இருக்கிறார்கள் என்று பொருத்தும் கூறலாம்.

9. நான்காம் இடம் நாம் பிறந்த ஊரை குறிக்கும். நான்காம் இடத்தில் வந்து அமரும் கிரகங்களை வைத்தும் கூறலாம்.

10. நக்ஷத்திர சாரத்தையும் பார்க்க வேண்டும்

11. நடப்பு தசா புக்தி பலன்களை பார்க்க வேண்டும்.

உதாரண ஜாதகத்தை வைத்து அலசுவோம்.




1. இவருடைய ஜாதகத்தில் நீண்ட தூர பயணத்தை குறிக்கும்  9' ம் இடத்து அதிபதி மற்றும் நீர் கிரகமான சந்திரன் 12' ம் இடத்தில் அமர்ந்து இருக்கிறார். 
2. சந்திரன் அமர்ந்து இருக்கும் ராசி சர ராசியும் காற்று ராசியான துலாம்.
3. நான்காம் இடத்தில் அசுப கிரகங்களான ராகுவும் செவ்வாயும் அமர்ந்து சொந்த ஊரில் இருக்கும் அமைப்பை கெடுத்து விட்டார்கள்.
4. இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்தில் நான்காம் அதிபதி சனி. இவர் சனீஸ்வரர் தசையில் செவ்வாய் புக்தியில் குடும்பத்தை பிரிந்து வெளிநாடு சென்று வேலை நிமித்தமாக பணிபுரிந்தார்.


மேலே இருக்கும் ஜாதகம் ஒரு பெண்ணினுடைய ஜாதகம். இந்த பெண்ணினுடைய ஜாதகத்தில் நீண்ட பயணத்தை குறிக்கும் 9'ம் இடத்து அதிபதி (சூரியன்) 7'ம் இடத்து அதிபதியுடன்  (புதன்) மற்றும் ராகுவுடன் 11'ம் இடத்தில அமர்ந்து இருக்கிறார். இந்த பெண்ணிற்கு வெளிநாட்டில் பணிபுரியும் மாப்பிள்ளை அமைந்து, திருமணத்திற்கு பிறகு வெளிநாட்டில் சென்று வாழக்கூடிய அமைப்பு இருந்தது.







செயற்கை நுண்ணறிவு (ARTIFICIAL INTELLIGENCE)

 செயற்கை நுண்ணறிவு (ARTIFICIAL INTELLIGENCE)




இன்றைய தலைமுறை, எந்த ஒரு சிறிய விஷயத்துக்கும் ARTIFICIAL INTELLIGENCE என்னும் தொழிலநுட்பத்தை சார்ந்தே இருக்கின்றனர். உதாரணத்திற்கு நாம் எதோ ஒரு புதிய இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால், முந்தைய தலைமுறையினர் அந்த இடத்திற்கு வழி தெரிந்தவரிடம் கேட்டு தெரிந்துகொள்வர். ஆனால்  இன்றைய  தலைமுறையினர் அந்த புதிய இடத்திற்கான வழித்தடத்தை "Google Map" என்னும் ARTIFICIAL INTELLIGENCE என்னும் தொழிழ் நுட்பத்திடம் கேட்டு தெரிந்துகொள்கின்றனர். நாம் அன்றாட வாழ்க்கையில், இந்த ARTIFICIAL INTELLIGENCE என்னும் தொழில் நுட்பத்தை மிக அதிகமாக பயன்படுத்த தொடங்கிவிட்டோம். உதாரணத்திற்கு, எந்த உணவகம் செல்ல வேண்டும் என்று தீர்மானிப்பது முதல் கொண்டு பல செயல்களுக்கு நாம் ARTIFICIAL INTELLIGENCE என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டோம்.

ARTIFICIAL INTELLIGENCE இன்  அடுத்த பரிணாம வளர்ச்சியான "CHATGPT" பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கு காண்போம்.

OPEN SOURCE ARTIFICIAL INTELLIGENCE என்னும் தொழிலநுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்டது இந்த "CHATGPT" என்னும் தொழிலநுட்பம். பெரும்பாலான சாமானியர்கள் நினைப்பது என்ன வென்றால் இதுவும் கூகுளை போன்ற ஒரு தொழில்நுட்பம் என்று. ஆனால் அது முற்றிலும் தவறானது.

இந்த  "CHATGPT" என்பது ஒரு "HUMAN LIBRARY" போன்றது. இந்த CHATGPT இடம் எந்த ஒரு துறை சார்ந்த கேள்விக்கான விளக்கத்தை நாம் கேட்டு அறிந்து கொள்ளலாம்.

உதாரணத்திற்கு நாம் "CHATGPT" இடம் "TELL ME ABOUT HUMAN ANATOMY" என்று கேட்டால் அது நமக்கு "HUMAN ANATOMY" பற்றிய விளக்கத்தை ஒரு ஆசிரியர் எப்படி விவரிப்பாரோ அது போல விவரிக்கும். இது என்ன பெரிய விஷயம், இதை GOOGLE தேடலிலும் நாம் தெரிந்து கொள்ளலாம் என்று சிலர் நினைப்பீர்கள். அனால் GOOGLE பலதரப்பட்ட WEBSITE லிங்க் மூலமாக அந்த தரவுகளை கொடுக்கும். எந்த WEBSITE லிங்கில் சென்று பார்ப்பது என்று நமக்கு குழப்பம் வரும். ஆனால் CHATGPT நமக்கு அந்த பதிலை REAL TIME BASIS இல் கொடுக்கும், ஒரு ஆசிரியரை போல!

இது மட்டும் தான் CHATGPT செய்யுமா என்றால் அதுதான் இல்லை. CHATGPT யை எதாவது ஒரு தலைப்பு கொடுத்து கட்டுரை எழுத சொல்லலாம், ஒரு கவிதை எழுத சொல்லலாம், MAIL CONTENT எழுத சொல்லலாம், SOFTWARE CODING எழுத சொல்லலாம், இன்னும் பல. உதாரணத்திற்கு நான் CHATGPT இடம் "WRITE AN ESSAY ABOUT GANDHIJI", என்று கேட்டேன், அது எனக்கு கீழ்கண்ட விடையை கொடுத்தது,

Mahatma Gandhi, born in 1869 in India, was a prominent leader in the country's independence movement against British rule. He advocated for nonviolence, civil disobedience, and truth and justice. Gandhi's philosophy of nonviolence, known as Satyagraha, emphasized the power of peaceful resistance. Through campaigns like the Salt March and the Quit India Movement, he demonstrated the effectiveness of nonviolent protests in challenging oppressive regimes. Gandhi's leadership and principles inspired millions to join the fight for independence. He also championed social justice, fighting against caste discrimination and advocating for the rights of women. Gandhi's influence extended beyond India, inspiring liberation movements worldwide, including those led by Martin Luther King Jr. and Nelson Mandela. His teachings continue to resonate today, offering guidance in a world grappling with violence and inequality. Gandhi's legacy as the "Father of the Nation" serves as a reminder of the power of nonviolence and the ability of one individual to bring about significant change.

இது, தொழிழ் நுட்பத்தின் வரமா இல்லை சாபமா என்று கேட்டால், நான் இரண்டும் என்று சொல்வேன். ஒன்று நம்முடைய கல்வித்திறனை நாம் இந்த தொழிநுட்பம் மூலம் மேம்படுத்திக்கொள்ளலாம், ஆனால் அதுவே நம்முடைய  "CREATIVE/ IMAGINATIVE THINKING" மழுங்க செய்யும் என்பதற்கும் மாற்று கருத்து  இல்லை.

CHATGPT மூலமாக ஒரு ஜுட்ஜ்மெண்ட் எழுத முடியமா என்று ஒரு வக்கீலின் உதவியோடு சோதித்து பார்த்தோம். CHATGPT இடம் கீழ்வரும் கேள்வியை கேட்டோம்,

Write a judgement for a person who has convicted for offence u/s 294 (b), 324 of IPC. A attacked B with iron rod on head of b and using abusive words against b on 11.12.2014 at about 10 p.m at XXX . C and D are the eye witnesses. They clearly speaking about the occurrance to support the prosecution case.

CHATGPT இன் விடை கீழ்வருமாறு 

In the matter of the State vs. [Defendant's Name]

Case Number: [Case Number]

Date of Judgement: [Date]

Honorable Court:

The present case involves the accused, [Defendant's Name], who has been charged under sections 294 (b) and 324 of the Indian Penal Code (IPC). The charges arise from an incident that occurred on 11th December 2014, at approximately 10 p.m. at XXX . The accused, [Defendant's Name], attacked the victim, [Victim's Name], using an iron rod, causing injuries to the head. Furthermore, the accused also directed abusive words towards the victim.

The prosecution's case rests primarily on the testimonies of two eyewitnesses, C and D, who have provided clear and consistent accounts of the occurrence. Their testimonies establish the presence of the accused at the scene, the use of an iron rod as a weapon, and the utterance of abusive words towards the victim. Their testimonies are consistent with each other and with the nature of the injuries sustained by the victim.

Section 294 (b) of the IPC deals with the offense of using obscene language or making gestures in a public place, and section 324 of the IPC deals with the offense of causing hurt by dangerous weapons or means. In the present case, the accused's actions clearly fall within the purview of these sections, as he not only physically assaulted the victim with an iron rod but also resorted to using abusive language, thereby causing harm and distress to the victim.

Upon careful examination of the evidence presented, this court finds that the prosecution has successfully established its case beyond a reasonable doubt. The testimonies of the eyewitnesses, C and D, are credible, consistent, and corroborative. Their accounts provide a clear and coherent narrative of the events that transpired on the aforementioned date, time, and location.

Considering the severity of the offense committed by the accused, it is the duty of this court to ensure that justice is served and the society is protected. The accused's actions have caused physical harm and psychological distress to the victim. Such behavior cannot be tolerated in a civilized society governed by the rule of law.

Therefore, this court pronounces the accused, [Defendant's Name], guilty under sections 294 (b) and 324 of the IPC. The accused shall be sentenced to [appropriate sentence as per the provisions of the law], taking into consideration the nature of the offenses committed and any mitigating or aggravating factors present.

It is further directed that the victim, [Victim's Name], shall be provided with adequate compensation for the physical and mental suffering endured as a result of the accused's actions. The court also urges the concerned authorities to provide necessary medical and psychological support to the victim for their recovery.

The accused is hereby notified of their right to appeal this judgement to the appropriate appellate court within the prescribed timeframe.

With this, the court's judgement stands pronounced.

[Judge's Name]

[Designation]

[Court's Name]

ஆச்சரியமாக உள்ளதா, CHATGPT இந் சுவாரசியங்கள் மேலும் தொடரும்....

சனி, 12 நவம்பர், 2022

ஆபத்தில் உதவிய ROBOT

 ஆபத்தில் உதவிய ROBOT


அது ஒரு பெரிய தொழில் நிறுவனம். அந்த நிறுவனம் மின் ஆலை (Power Plant) உற்பத்தியில் இருந்தது. அன்று அந்த நிறுவனத்திற்கு திட்டமிடப்பட்ட பராமரிப்பு, அதாவது ஆங்கிலத்தில் SCHEDULED MAINTENANCE என்று சொல்வோம் அல்லவா அது.

அன்றைய தினம் அவர்களுக்கு கெட்ட நேரமோ அல்லது போராத காலமோ தெரியவில்லை. ஒரு 2.5 கிலோ எடையுள்ள சுத்தியல் அந்த நிறுவனத்துடைய உயர் அழுத்த நீராவி பைப்பில் (HIGH PRESSURE STEAM PIPE) விழுந்தது. அந்த சுத்தியலை எப்படி எடுப்பது என்று அவர்களுக்கு புரியவில்லை. அந்த சுத்தியலை எடுக்கும் வரை மின் ஆலை உற்பத்தியை தொடங்க முடியாது. அந்த சுத்தியல் எந்த இடத்தில் சென்று மாட்டிகொண்டு இருக்கிறது என்பதை கண்டு பிடிப்பதற்கே இரண்டு மூன்று நாட்கள் ஆகும். அதன்பிறகு அதை வெளியே எடுப்பதற்கு வழி காண வேண்டும். என்ன செய்வது என்றே பணியாளர்களுக்கு புரியவில்லை. அது வரை ஆலை உற்பத்தியை தொடங்க இயலாது. அத்தனை நாள் நிறுவனம் வருமான இழப்பை சந்திக்க நேரிடும். 

இடை நிலை பணியாளர்கள் மேல் அதிகாரிகளிடம் தகவலை தெரிவித்தனர். உடனே அவர்கள் தொழில் நுட்ப அதிகாரிகளை கூப்பிட்டு இந்த விபத்தை எப்படி சரி செய்வது என்று விவாதிக்க ஆரம்பித்தனர். தொழில் நுட்ப அதிகாரிகள் பலவாக யோசித்தனர். கடைசியாக ஒரு வழியை கண்டு பிடித்தனர். அதாவது அந்த சுத்தியல் எந்த இடத்தில் மாட்டி கொண்டு இருக்கிறதோ அந்த இடத்தில் உள்ள பைப்பை வெட்டி உள்ளே இருக்கும் சுத்தியலை எடுக்க வேண்டும். மீண்டும் வெட்டிய பைப்பை சரியாக்க வேண்டும். 

சரி இதை செய்வதர்க்கு எவ்வளவு செலவு ஆகும் என்று  மேலாண்மை பிரிவு (Management Department) தொழில் நுட்ப அதிகாரிகளிடம் வினவினர். அதற்கு அவர்கள் தோராயமாக ரூபாய் 5 கோடி செலவாகும் என்று கூறினர். அங்கு பணிபுரியும் பணியாளர் ஒருவருக்கு ஒரு யோசனை தோன்றியது.  ஏன் நாம் ரோபோவின் உதவியுடன் அந்த சுத்தியலை எடுக்க கூடாது என்று. அதை அவர் மேல் அதிகாரிகளிடம் தெரிவித்தார். 

மேல் அதிகாரிகளும், கொஞ்ச நேர யோசனைக்கு பிறகு இதுவும் நல்ல யோசனையாக தான் தெரிகிறது முயற்சித்து பார்ப்போம் என்று முடிவு எடுத்தனர். Robot தயாரிக்கும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு, நடந்த விபத்தினை பற்றி தகவல் பரிமாறினார்கள். அந்த நிறுவனமும் விபத்து நடந்த நிறுவனத்திர்க்கு செல்லும் முன் தங்களுடைய ரோபோட்டை சில மாற்றங்கள் செய்து சோதனை செய்தது. பிறகு விபத்து நடந்த நிறுவனத்திற்கு ரோபாட்டை எடுத்து கொண்டு சென்றார்கள். ஆனால் அங்கு அவர்களுக்கு பெரும் சவால் காத்திருந்தது. அந்த ரோபோட் நேர்கோட்டில் உள்ள பைப்பில் உள்ள பொருட்களை எடுப்பதற்கு ஏற்றவாறு இருந்தது. உதாரணத்திற்கு ஆள் குழாய் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை நேர்வாக்கில் உள்ள பைப்பில் இருந்து எப்படி எடுப்போமோ அவ்வாறு இருந்து. ஆனால் இங்குள்ள பைப்புகளில் பல பெண்டுகள். எல்லாம் 90 டிகிரி கொண்ட பெண்டுகள். அந்த பெண்டுகளை எல்லாம் கடந்து சுத்தியலை எடுக்க வேண்டும். 

ரோபாட்டை எடுத்து வந்த தொழில் நுட்ப அதிகாரிகள், ரோபோட்டில் சில மாறுதல்களை செய்து அந்த சுத்தியலை எடுக்க முற்பட்டனர். கிட்டத்தட்ட 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த சுத்தியலை வெற்றிகரமாக எடுத்தனர். அதற்கு அவர்கள் வசூலிக்க பட்ட கட்டணம் ரூபாய் 16 லட்சம். குறைந்தது 5 கோடி செலவு மற்றும் தோராயமான 5 கோடி வருவாய் இழப்பையும் சேர்த்தால் 10 கோடி அளவிளான செலவுக்கு வெறும் 16 லட்சத்தில் ரோபோட்டின் உதவியுடன் இந்த பிரச்சினையில் இருந்து அந்த நிறுவனம் வெளிவந்தது. 

இந்த சம்பவம் வேறு எங்கும் நடக்கவில்லை, நம் இந்தியாவில் 2017 ஆம் வருடம் தான் நடந்தது. அந்த விபத்திர்க்கு உள்ளான நிறுவனம் குஜராத்தில் இயங்கி கொண்டிருந்த "TATA POWER PLANT". அந்த ரோபோட் தயாரிக்கும் நிறுவனம், அகமதாபாதில் இயங்கி கொண்டிருக்கும் "GRID BOTS TECHNOLOGIES".









ஒரு கைதியின் கண்டுபிடிப்பு- Tooth Brush

டூத் பிரஷை கண்டுபிடித்தவர் ஒரு   கைதியான வியாபாரி


நம்மில் பலர் நினைப்போம், நாம் தினசரி உபயோகப்படுத்தும் ஒவ்வொரு பொருளும் எங்கோ ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்தது என்று. ஆனால் அது உண்மை அல்ல. ஒரு கண்டுபிடிப்பின் துவக்கம் நம் தேவைகளின் ஆரம்பமாக கூட இருக்கலாம். 

அப்படி ஒரு கைதி தன் தேவைக்காக கண்டு பிடித்த பொருள் தான் நாம் இன்று தினந்தோறும் உபயோக படுத்தும் டூத் பிரஷ். என்ன, ஆச்சிர்யமாக இருக்கிறது அல்லவா?. 

வில்லியம் அட்டிஸ் என்பவர் ஒரு பிரிட்டிஷ் வியாபாரி. அவர் ஒரு கை தகராரினால் ஜெயிலுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை. சிறை காவலர்கள் ஒவ்வோரு கைதியின் அறைகளை காலையில் தட்டி அவர்களை பல் தேய்க்க சொல்வார்கள். ஆனால் கைதிகளுக்கு பல் தேய்ப்பது என்றால் அவ்வளவு பெரிய கஷ்டம். அந்த காலத்தில் பல் தேய்ப்பதற்கு மர குச்சி, உப்பு, கரித்தூல் போன்றவற்றினால் பல்லை சுத்தம் செய்தனர்.  இது சாதாரண மக்களுக்கே கஷ்டமாக இருந்தது. சிறை கைதிகளை சொல்லவே வேண்டாம். பெரும்பாலான சிறை கைதிகள் பல்லை சுத்தம் செய்யவே மாட்டார்கள். சிலர் ஏனோ தானோ வென்று சுத்தம் செய்வார்கள். இதை கவனித்த வில்லியம் அட்டிஸ்க்கு இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று தோன்றியது. அன்று இரவு சிறை சாலையில் மாமிச உணவு தயாரித்து இருந்தார்கள். வில்லியம் அட்டிசும் அன்று அந்த மாமிச உணவை ஒரு வெட்டு வெட்டினார். நிறைய எலும்பு துண்டுகள் அவர் சாப்பிடும் மேஜையில் இருந்தது. ஒரு நீளமான எலும்பு துண்டை எடுத்தார். அந்த எலும்பு துண்டை வைத்து யோசிக்கலனார். ஏன் நாம் இந்த எலும்பு துண்டை வைத்து பல் துலக்க கூடாது என்று யோசிக்கலனார. இல்லை இல்லை இந்த எலும்பு துண்டை வெறுமனே பயன்படுத்தினால் பல்லுக்கு பாதிப்பு தான் ஏற்படும். இதை பற்றியே சில நாட்கள் சிந்தித்தார். ஒரு நாள் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. ஏன் நாம் குதிரையின் முடியை இந்த எலும்பின் முனையில் பதித்து, அதனை கொண்டு பல் தேய்க்கலாமே என்று யோசித்தார். உடனே ஒரு காவல் அதிகாரியை தொடர்பு கொண்டு குதிரையின் கழுத்தில் இருக்கும் முடி தனக்கு வேண்டும் என்று கேட்டார். காவலர் எதற்காக உனக்கு தேவை என்று கேட்டார். அதற்கு வில்லியம் அட்டிஸ் பதில் ஏதும் கூரமல், எனக்கு இந்த பொருளை கொண்டு வந்து கொடுத்தாள் தான் சிரையில் இருந்து வெளியில் வரும்போது அவருக்கு தக்க சன்மானம் தருவதாக கூறினார். வில்லியம் அட்டிஸ் ஒரு வியாபாரி அல்லவா! 

சிறை காவலரோ முயற்சி செய்கிறேன் என்று கூறி விடை பெறுகிறார். மறுநாள் வில்லியம் அட்டிஸ் கேட்டபடி சிறை காவலர் குதிரையின் முடியை கொடுத்தார்.  வில்லியம் அட்டிஸ்க்கு பெரும் மகிழ்ச்சி. தான் எண்ணிய படியே அந்த எலும்பு துண்டின் முனையில் குதிரையின் ரோமத்தை செருகி காய வைத்தார். மறு நாள் அந்த குதிரை ரோமங்களை கொண்ட எலும்பு துண்டை வைத்து பற்களை சுத்தம் செய்தார். மற்ற கைதிகள் எல்லாம் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர். இது என்ன புது விதமான ஒரு பொருளை வைத்து இவர் பற்களை சுத்தம் செய்கிராரே என்று கைதிகள் பிரமிப்பாக பார்த்தனர். சில கைதிகள் அவரிடம், இது என்ன என்று விசாரித்தனர். சில கைதிகள் தங்களுக்கும் இது போன்ற ஒரு பொருளை செய்து தருமாறு வில்லியம் அட்டிசிடம் கேட்டனர். வில்லியம் அட்டிசும் பல சிறை கைதிகளுக்கு தான் கண்டுபிடித்த டூத் பிரஷை செய்து கொடுத்தார். உலகின் முதல் டூத் பிரஷ் எலும்பு துண்டினாலும் மற்றும் குதிரை ரோமத்தினாலும் ஆனது என்றால் நம்ப முடியவில்லை அல்லவா. வில்லியம் அட்டிஸ் தான் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அந்த டூத் பிருஷை பெரிய அளவில் தயாரிக்கலானார். 

இங்கிலாந்து மக்களுக்கு வில்லியம் அட்டிசின் இந்த கண்டுபிடிப்பு மிகவும் பிடித்து விட்டது. பெரும்பாலானோர் இந்த புதிய வடிவமைப்பை கொண்ட டூத் பிருஷை உபயோகிக்க ஆரம்பித்தனர். அது வில்லியம் அட்டிசை பெரும் பணக்கராரராக ஆக்கியது.


https://youtu.be/6w4aCY_3OXE





புதன், 5 ஜனவரி, 2022

பிரபலமான நாட்டிய கலைஞரின் ஜாதகம் எவ்வாறு இருக்கும்




பிரபலமான நாட்டிய கலைஞரின் ஜாதகம் எவ்வாறு இருக்கும் என்று புலிப்பாணி சித்தர் கூறியது 



 புலிப்பாணி ஜோதிடம் பாடல் 110

செப்புவை சந்திரனும் ஈராறோனும் 
சிவசிவா பஞ்சமத்தோன் மூவர்சேர்ந்து 
அப்புவாய் ஆகாசங் கோபுரத்தில் 
அப்பனை கம்பத்தைக் கட்டித்தானும் 
ஒப்புவாய் உலகத்தோர் மதிமயங்க 
ஓகோகோ ஆகாச காரணம்போட்டு 
தப்புவாய் தரணி தனில்  கீழேவந்து 
தார்வேந்தர் மனமகிழ பணிவன்பாரே 

பாடல் விளக்கம்: புகழ் பெற்று சந்திரனும் பன்னிரெண்டுக்குடையவனும் சிவபரம்பொருளின் பேரருட்கருணையினால் ஐந்தாமிடத்தோணும் ஆகிய இவர்கள் மூவரும் சேர்ந்து நிற்க இச்சாதகன் நீர் மீதும், ஆகாசம் மீதும், கோபுரத்தின் மீதும் கம்பங்களை நாட்டி அதன் மீதிலும் உலகத்தோர் ஒப்பும்படியாக, அவர்களது மதியானது மயக்கமுறும்படியாக ஆகாசத்தில் கரணம் இட்டு வேடிக்கை காட்டி பூமியின் கீழ் வந்து மன்னர் முதலான மற்றையோர்களின் பரிசில்களை பெற்று மகிழ்வான் என்று போகமாமுனிவரது பேரருட்கருணையால் புலிப்பாணி கூறினேன்.



நாட்டியத்திற்கு கூறிய இறைவன் ஈசனான நடராஜன். அந்த நடராஜனின் அருள்பெறவேண்டும் என்றால் ஐந்தாம் இடம் பலம் பொருந்தியதாக இருக்க வேண்டும். ஏனென்றால் ஐந்தாம் இடம் பொழுதுபோக்கையும், நடனத்தையும் குறிக்கும். சந்திரன், ஐந்துக்குடையவனும் (பஞ்சமத்தோன்) , பன்னிரெண்டுக்குடையவனும்  (பாடலில் குறிப்பிட்டு இருப்பது ஈராறு - 6*2),  சேர்ந்து நிற்கின்ற ஜாதகன் நாட்டிய கலைஞனாக பெரும் புகழ் பெற்று மன்னர்களிடமும் மன்னர்களுக்கு ஒப்பானவர்களிடமும்  பெரும் பரிசில்களை பெற்று வாழ்வான் என்று புலிப்பாணி சித்தர் கூறுகிறார்.

பொதுவாக லக்னத்திலிருந்து ஐந்தாம் இடம் பொழுதுபோக்கையும், நடனத்தையும் குறிக்கும். சந்திரன் கலை நுட்பத்தை (Art Form) குறிப்பவர். பன்னிரெண்டாம் இடம் நம்முடைய கலை நுட்பத்தை வெளி உலகத்துக்கு காட்டும் இடம். கலை நுட்பம் இருந்தும் அது வெளியுலகத்திற்கு தெரியவில்லை என்றால் அது அவரை பிரபலமானவரை ஆக்காது. மேலும் 12'ம் இடம் உடல் உறுப்புகளில் கால்களை குறிக்கும். ஆகவே தான் கற்ற நடன கலையில் ஒருவர் மக்களிடம் பிரபலமானவராக திகழ, சந்திரன், 5'ம் இடத்து குறியோன், 12'ம் இடத்துக்குரியோன் சம்பந்தம் பெறவேண்டும். 

Micheal Jackson:




மைகேல் ஜாக்சன் நாட்டிய உலகத்தில் உள்ள அணைத்து மக்களையும் கவர்ந்தவர். இன்றும் பெரும்பாலான நடன கலைஞர்கள் மைகேல் ஜாக்சனின் நடனத்தை ஆடி பாராட்டுகளை பெறுவார்கள். அப்படிப்பட்ட மைகேல் ஜாக்சனின் ஜாதகத்தில் புலிப்பாணி சித்தர் கூறிய அமைப்பு இருந்ததா என்று பார்ப்போம். மைகேல் ஜாக்சனின் ஜாதகத்தில் சந்திரன் லக்கினத்தில் அமர்ந்து இருக்கிறார். ஐந்தாம் இடத்துக்குரியவர் புதன் 7'ம் இடத்தில அமர்ந்திருக்கிறார். 12'ம் இடத்துக்குரிய சனி 10'ம் இடத்தில தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கிறார். சந்திரனை ஐந்தாம் இடத்துக்குரிய புதன் சப்தம (7'ம் பார்வையாக) இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்கிறார்கள். சனி தன்னுடைய 10'ம் பார்வையால் ஐந்தாம் இடத்து அதிபதியை பார்க்கிறார். மேலும் கர்ம காரகன் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து அவருக்கு நடனத்தையே தொழிலாக கொடுத்தது. ஏற்கனவே சொன்னது போல் 12'ம் இடம் கால்களை குறிக்கும். அந்த 12க்கு அதிபதி சனி தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பது நடனத்தையே  தொழிலாக கொடுத்தது. ஆக மைகேல் ஜாக்சன் அவர்கள் ஜாதகத்தில் சந்திரன், ஐந்துக்குரியவர், பன்னிரண்டுக்குரியவர் சம்பந்தம், புலிப்பாணி சித்தர் கூறியது போல் அமைந்து இருக்கிறது. ஜாதக வரைபடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.







Russ Tamblyn:



Russ Tamblyn அமெரிக்க நடிகரும் நாட்டிய கலைஞருமானவருடைய ஜாதகத்தை பார்ப்போம். விருச்சிக லக்கனம், ஐந்துக்குரியவர் குரு. சந்திரனும், ஐந்தமாதிபதியான குரு சேர்ந்து பன்னிரெண்டாம் இடத்தில அமர்ந்து இருக்கிறார்கள். சந்திரன் இவருடைய ஜாதகத்தில் தொழில் ஸ்தானாதிபதி. இவருடைய ஜாதகத்திலும் சந்திரன், 5'ம் இடம், 12'ம் இடம், 10'ம் இடம் சம்பந்தம் இருப்பதனால் புலிப்பாணி சித்தர் கூறியது போல் நாட்டியத்தில் பிரபலமானவராக திகழ முடிந்தது. Russ Tamblyn உடைய ஜாதகத்தை கீழே கொடுத்துள்ளோம் 



Prabhu  Deva 



சரி ஹாலிவுட் டான்சர்ஸ் மட்டும் பார்த்தா போதுமா, நம்ம ஊரு டான்சர்ஸ் க்கு புலிப்பாணி சித்தர் சொன்ன மாதிரி அமைப்பு இருந்திருக்கிறதா என்று பார்ப்போம். நம்ம ஊரு டான்சர்னு நமக்கு ஞாபகம் வருவது பிரபு தேவா தான். அவருடைய ஜாதகம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். மிதுன லக்கினம், ஐந்தாம் அதிபதி, பன்னிரெண்டாம் அதிபதி, இருவருமே சுக்கிரன். சுக்கிரன், சந்திரனுடன் சேர்ந்து 10'ம் இடத்தில அமர்ந்து நடனத்தையே தொழிலாக அவருக்கு அமைந்து இருக்கிறது. புலிப்பாணி சித்தர் கூறியது போல் சந்திரன், 5'ம் இடம், 12'ம் இடம் சம்பந்தம் பிரபு தேவாவின் ஜாதகத்தில் தெளிவாக உள்ளது. பிரபு தேவாவின் ஜாதகத்தை கீழே கொடுத்துள்ளேன்.




Shobana 




மற்றுமொரு பிரபல்யமான ஜாதக அமைப்பு உள்ள ஜாதகத்தை பார்ப்போம். பரதநாட்டிய கலைஞர் ஷோபனா அவர்களுடையதை பார்ப்போம். மிதுன லக்கினம், ஐந்தாமிடத்து அதிபதி, பன்னிரண்டாம் அதிபதி சுக்ரன், 10'ம் இடத்தில அமர்ந்து நடனத்தையே இவருக்கும் தொழிலாக கொடுத்தது. ஆனால் புலிப்பாணி சித்தர் கூறியது போல சந்திரன் சம்பந்தம் ஷோபானா அவர்களுடைய  ஜாதகத்தில் இல்லை. ஆனாலும் அவரால் நடன துறையில் சாதிக்க முடிந்தது. அதற்க்கு காரணம். தொழில் ஸ்தானத்தில் (10'ம்) இடத்தில், 5'ம் மற்றும் 12'ம் கூறியவர் அமர்ந்து இருப்பது. நாட்டிய கலைஞர் ஷோபானாவுடைய ஜாதகத்தை கீழே கொடுத்துள்ளேன் 





ஆக ஒருவர் நாட்டியத்தில் சிறந்து விளங்குவது மட்டும் அல்லாமல், அதையே தொழிலாக பெறவேண்டும் என்றால் 5'ம் இடம் , 12'ம் இடம் ,  சந்திரனுடைய சம்பந்தம் மட்டுமில்லாமல் 10'ம் இடம் சம்பந்தமும்  பெறவேண்டும் என்பது இந்த ஜாதத்தின் வாயிலாக தெரிகிறது.











செவ்வாய், 4 ஜனவரி, 2022

குங்கிலியக் கலய நாயனார்

குங்கிலியக்  கலய  நாயனார் 




அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரான இவருக்கு 'குங்கிலியக்  கலய  நாயனார்' என்ற பெயர் எப்படி வந்தது என்று பாப்போம். இவருடைய இயற்பெயர் 'கலய'. இவர் திருக்கடையூரில் ஒரு அந்தண குடுமபத்தில்  பிறந்தார். இவருக்கு திருக்கடையூரில் இருக்கும் அமிர்தகடேஸ்வரர் அபிராமி கோயிலில் உள்ள ஈசன் பால் உள்ள அதீத பக்தியினால் தினமும் கோயிலில் குங்கிலிய புகை (அதாவது சாம்பிராணி) போடுவது வழக்கம். நல்ல செல்வந்த குடும்பத்தில் பிறந்தவர் என்பதாலும் இந்த குங்கிலிய புகை போடும் தொண்டை நெடுங்காலம் செய்து வந்தார். அதனாலேயே இவருக்கு 'குங்கிலியக்  கலய  நாயனார்' என்ற பெயர் வந்தது. இறைவனார் இவரை சோதிக்க எண்ணினார். வறுமை அவரையும் அவர் குடும்பத்தையும் சூழ்ந்தது. வீட்டில் இருக்கும் விலையுர்ந்த பொருட்களை எல்லாம் விற்க முற்பட்டார். வறுமையிலும் தன்னுடைய குங்கிலிய புகை போடும் தொண்டை தொடர்ந்தார். ஒரு நாள் வறுமை அவர்களை மிகவும் வாட்டியது. விற்பதற்கு வீட்டில் ஒன்றுமில்லை. அவருடைய பெண்டிரும் மக்களும் பசியால் வாடினர். குங்கிலியக்  கலய  நாயனாரின் மனைவியிடம் அவர் கட்டின தாலியை தவிர வேறு பொருள் எதுவும் இல்லை. குழந்தைகளின்  பசியை போக்குவதற்காக தன்னுடைய தாலியை குங்கிலியக்  கலய  நாயனாரிடம் கொடுத்து அரிசி வாங்கி வர அனுப்பினார். 

குங்கிலியக்  கலய  நாயனார்  அரிசி வாங்குவதற்காக சந்தை சென்றார். இறைவன் இவரை சோதிக்க எண்ணினார். ஈசன் குங்கிலிய வியாபாரம் செய்யும் ஒரு வணிகனாக உருமாறி, குங்கிலியம் விற்று கொண்டு வந்தார். குங்கிலியக்  கலய  நாயனார் அரிசி வாங்குவதற்காக அரிசி கடையில் நின்று கொண்டு இருந்தார். நம் அருகில் எதோ குங்கிலிய வாசனை வருகிறதே என்று திரும்பி பார்த்தார். ஒரு வணிகன் கூடை நிறைய குங்கிலியம் விற்று கொண்டு வருவதை பார்த்தார். மனம் இறைவனுக்கு செய்யும் கைங்கரியம் பால் திரும்பியது. வறுமையும் மறந்து போனது. மனைவி எதற்காக இந்த தாலியை கொடுத்தார் என்பதும் மறந்து போனது. குங்கிலியம் விற்கும் வணிகனை நிறுத்தினார். அப்பா! இந்த ஒரு கூடை குங்கிலியத்திற்கு இந்த தாலி போதுமானதாக இருக்குமா? என்று கேட்டார். வந்திருப்பதோ  ஈசன், ஆம் சரியாக இருக்கும் என்று தாலியை பெற்று கொண்டு கூடை குங்கிலியத்தையும் நாயனாரிடம் ஒப்படைத்தார். 

நாயனார் மிகுந்த சந்தோஷத்துடன் குங்கிலியத்தை வாங்கி கொண்டு அமிர்தகடேஸ்வரர் அபிராமி கோயிலுக்கு சென்று கோயில் மடப்பள்ளியில் குங்கிலியத்தை சேர்த்தார். மனதிற்குள் மிகுந்த மகிழ்ச்சியும், சந்தோசமும். இன்னும்  கொஞ்ச நாளைக்கு குங்கிலிய தொண்டுக்கு தடை இல்லை என்று மனம் தேற்றி கொண்டார். அப்படியே  கோயிலில் கண் அசந்து தூங்கினார். அவர் மனைவி, கணவர் வருவார் என்று காத்திருந்து வாசலையே பார்த்திருந்தார். கணவர் வருவதாக தெரியவில்லை. பிள்ளைகளும் அவளும் பசி மயக்கத்திலேயே தூங்கி போனார்கள். உலகத்துக்கே படி அளக்கும் ஈசன் தன் தொண்டனையும், தொண்டன் குடும்பத்தையும் பசியால் வாடுவிடுவாரா என்ன?. 

ஈசன் குங்கிலியக்  கலய  நாயனாரின் மனைவியின் கனவில் தோன்றினார். தாயே! எழுந்திரு உன் வீட்டில் சகல சம்பத்துகளும் இருக்கும்படி செய்தேன். குங்கிலியக்  கலய  நாயனாரின் மனைவி கண் விழித்து பார்த்தார். கனவா அல்லது நினைவா! வீடு முழுவதும் விலையுர்ந்த பொருட்களும், உணவு தானிய பொருட்களும் இருக்கின்றதே. எல்லாம் ஈசனின் கருணை என்று எண்ணி தன கணவருக்காக கரியமுது சமைக்க தயாரானாள். ஈசன் அதோடு விட வில்லை குங்கிலியக்  கலய  நாயனாரின் கனவிலும் சென்று, மகனே! எழுந்திரு, உன் மனைவி உனக்காக கரியமுது சமைத்து காத்து கொண்டிருக்கிறாள். சென்று வயிறார உன் என்று உரைத்தார். குங்கிலியக்  கலய  நாயனார் வீட்டை நோக்கி சென்றார். என்னே ஆச்சரியம் அவர் வீடு முழுவதும் செல்வம் நிறைந்து இருந்தது. மனைவிடம் கேட்டார், மனைவி  தன்னுடைய கனவு பற்றி குங்கிலியக் கலய நாயனாரிடம் தெரிவித்தார். குங்கிலியக்  கலய  நாயனாரும் தன கனவில் வந்து ஈசன் தன்னை சாப்பிட வீட்டிற்கு செல்லுமாறு கூறியதையும் மணிவயிடம் சொன்னார். குங்கிலியக்  கலய  நாயனாரும் அவருடைய மனைவியும் ஈசனின் கருணையை நினைத்து மெய்யுருகி நின்றனர்.




குங்கிலியக்  கலய  நாயனார் பற்றிய மற்றுமொரு சம்பவம்:

திருப்பனந்தாள் என்னும் ஊரில் அருண ஜடேஸ்வரர் என்று திருப்பெயர் கொண்டு ஈசன் வீற்று இருந்தார். அவ்வூரை சோழ மன்னன் ஆண்டு வந்தான். அவ்வூரில் உள்ள அருண ஜடேசவ்ரர் கோயிலை புனரமைக்க எண்ணினான். ஆனால் சோழ மன்னனின் மனதிற்குள் ஒரு சிறிய வருத்தம் இருந்தது. அது என்னவென்றால் கோயிலில் உள்ள லிங்கம் முன் பக்கம் சாய்ந்தவாறு இருப்பது. லிங்கம் எப்படி சாய்ந்தவாரானது? தாடகை (இவர் ராமாயணத்தில் வரும் தாடகை அல்ல) என்னும் பெண்மணி தனக்கு குழந்தை வரம் வேண்டி அருண ஜடேஸ்வரருக்கு தினமும் மாலை தொடுத்து சூட்டினால். ஒரு நாள் மாலையை சூடும் பொழுது தான் உடுத்தி இருந்த சேலை நழுவிற்று, தன சேலையை முழங்கையால் பிடித்து கொண்டால். மாலையையும் கையில் பிடித்து கொண்டால். ஆனால் அவளால் மாலையை உயர்த்தி ஈசனுக்கு சூட முடியவில்லை. ஈசனிடம் மனமுருகி வேண்டினாள், தன் மானத்தையும் காத்து, தன் மாலையையும் ஏற்றுக்கொள்ள வேண்டினாள். ஈசன் பக்தையின் திருவுள்ளத்திற்கேற்ப தன லிங்க மேனியை சாய்த்து மாலையை ஏற்று கொண்டார். அன்றிலிருந்து ஈசனின் லிங்க மேனி சாய்ந்தவாறு இருந்தது.





மன்னனுக்கோ ஈசனின் லிங்க மேனியை நிமிர்த்த வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார். தன்னுடைய சேனைப்படை வைத்து ஈசனின் லிங்க மேனியை நிமிர்த்த முயற்சித்தார். ஆனால் அவருடைய முயற்சி பலனளிக்கவில்லை. தன பட்டது யானையை கொண்டும் ஈசனின் லிங்க திருமேனியை நிமிர்த்த தயாரானார். அதுவும் பலனளிக்கவில்லை. என்ன செய்வதென்று தெரியாது ஈசனிடம் மனமுறுகினார். அருகிலிருந்த பெரியோர்கள் குங்கிலிய கலய நாயனார் பற்றியும் அவருடைய சிவ பக்தியை பற்றியும் கூறினார்கள். ஈசன் எவ்வாறு தன் பக்தைக்காக தன் லிங்க திருமேனியை சாய்த்தாரோ, அதே ஈசன் இன்னொரு பக்தனுக்காக தன்னுடைய லிங்க திருமேனியை நிமிர்த்து கொள்வார், கவலைப்படாதீர்கள் என்று கூறினர். 

குங்கிலியக்  கலய  நாயனாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. குங்கிலிய களைய நாயனார் திருப்பனந்தாள் என்னும் ஊரில் இருக்கும் அருண ஜடேஸ்வரர் கோயிலை நோக்கி சென்றார். ஈசனின் லிங்க திருமேனியை சுற்றி கயிறை காட்டினார். மற்றொரு பக்கம் இருக்கும் கயிறை தன்னுடைய கழுத்தில் மாட்டி கொண்டார். ஈசனை தன் கழுத்தில் மாட்டியிருக்கும் கயிறால் இழுத்தார். ஈசனின் திருமேனி மெல்ல நிமிர்ந்தது. என்னும் வேகமாக இழுத்தார். ஈசனின் லிங்க திருமேனி முழுவதுமாக நிமிர்ந்தது. பட்டத்து யானைக்கு நிமிராத ஈசனின் லிங்க திருமேனி குங்கிலியக்  கலய  நாயனாரின் பக்திக்கு நிமிர்ந்தது. 







திங்கள், 3 ஜனவரி, 2022

‘ஹஸ்தாமலக ஸ்தோத்திரம்’ Translation by Sri Ramana Maharishi

 

ஸ்ரீசங்கர ஜெகத்குரு மேற்கு திக்கில் பயணம் செய்தபோது, ஸ்ரீவல்லி எனும் கிராமத்தில், பிரபாகர் எனும் அந்தணர், சங்கரரின் வரவை அறிந்து, தன் 13 வயது புத்திரனை அழைத்துக்கொண்டு போய், அவனை நமஸ்காரம் செய்ய வைத்து, தானும் நமஸ்கரித்து, சின்ன வயது முதல் பேச்சு வராதவனாக, எதிலும் நாட்டம் இல்லாதவனாக, விருப்பு - வெறுப்பு இல்லாதவனாக, எதிலும் பக்குவம் இல்லாதவனாக இருக்கிறவனுடைய நிலைமையைச் சொல்ல... ஸ்ரீசங்கரபகவத்பாதாள் அந்த பாலகனை அணைத்துக்கொண்டார். "குழந்தாய், நீ யார், யாருடைய மைந்தன் நீ, எங்கே சென்றுகொண்டு இருக்கிறாய், உன் பெயர் என்ன, நீ எங்கிருந்து வந்திருக்கிறாய்?" என்று மிகக் கூர்மையான பெரிய கேள்விகளைக் கேட்டார். அவரிடம் அந்த பாலகன், தன் நிலைமையைப் பற்றி வாய் திறந்து சொன்ன ஸ்லோகங்களே, ‘ஹஸ்தாமலக ஸ்தோத்திரம்’. வடமொழியில் அமைக்கப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார், பகவான் ஸ்ரீரமணர். நான் மனிதன் அல்ல. தேவனோ, யட்சனோ, அந்தணனோ, அரசனோ, மனிதனோ அல்ல; நான் பிரம்மசாரியும் அல்ல; கிரகஸ்தனும் அல்ல; பால பிராயனும் அல்ல; கிழவனுமல்ல; ஒட்டுமொத்த சந்நியாசியும் அல்ல; யார் ஒருவனும் நான் அல்லேன்; நான் சத்தியபோத ஞான சொரூபமானவன். இதுவல்ல, இதுவல்ல என்று சொல்லி, தான் ஆன்மா என்பதை மிக அழகாக, அந்த குழந்தை ஸ்லோகங்களாகப் பேசினான். ‘மேலே இருக்கிற சந்திரன், காற்றில் அசையும் அலைகளால் ஆடுவதைக் கண்டால், சந்திரன் ஆடுவது போல இருக்கும். ஆனால், சந்திரனா ஆடுகிறான்? இல்லை; இது கண் கொண்ட மயக்கம். இதே மயக்கம்தான் புத்திக்கு இருக்கிறது. புத்தி, எதிரே இருப்பவர் அந்நியர் என்று நினைத்துக்கொள்கிறது. புத்தி, எதிரே இருப்பவர் வேறு மதத்தவர், வேறு இனத்தவர், வேறு குலத்தவர் என்று நினைத்திருக்கிறது. உயர்வு என்றும், தாழ்வு என்றும் பிரித்துக்கொள்கிறது. இது புத்தியினுடைய ஆட்டம். மாயையான பார்வை. ஆனால், எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கிற அந்த விஷயம் பேதமற்றது. அதுதான் உன்னிலும் சகல இடத்திலும் பரவியிருக்கிறது. இதைத் தெரிந்துகொண்ட ஆன்மா நான்.’ பையன் சொன்ன ஸ்லோகங்களைப் பார்த்து, தந்தை பிரமித்து, புதல்வனை வெளிக்கொண்டு வந்த குருவை நோக்கிக் கைகூப்பி நிற்க, "இவனை மகனாக நீங்கள் அடைந்தது பாக்கியம். இவனால் உங்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை; இவன் என்னோடு இருக்கட்டும்" என்று அவனை அழைத்துக்கொண்டு போய்விட்டார். பகவத்பாதாளுடைய சீடர்கள், "குழந்தை ஏன் இப்படி இருந்தது? ஏன் இப்படி ஆயிற்று?" என்று கேட்க, "இந்தக் குழந்தையின் தாய் கங்கையில் குளிக்கப் போனபோது, ஒரு சாதுவிடம், இந்தக் குழந்தையைக் கொஞ்ச நேரம் பார்த்துக் கொள்ளும்படி, ஒப்படைத்துவிட்டுப் போனாள். அவர் பார்த்துக்கொண்டிருந்த போதே, அந்த குழந்தை கால் இடறி, கங்கையில் விழுந்து, மரணமடைந்துவிட்டது. குழந்தையை வாரி எடுத்த சாது, என்ன செய்வது, பெற்றவளுக்கு என்ன பதில் சொல்வது என்று கலங்கினார். பெற்றவள் அழக்கூடாது என்று தீர்மானித்து, தன் உடம்பைவிட்டு, இந்தக் குழந்தைக்குள் புகுந்துகொண்டார். அந்தச் சாதுவே, இந்தக் குழந்தை" என்று பகவத்பாதாள் சொன்னார். 

நந்தனார் சரித்திரம்- Part 2

  நந்தனார் சரித்திரம்-  Part 2 நந்தனார் திருப்புங்கூர் சிவலோகநாதனைத் தரிசனம் செய்து  ஆதனூர் வந்த நாள் முதலாய் உணவு உண்ணாமல், உறக்கம் கொள்ளாம...

Thiruvannamalai Girivalam benefits