ஞாயிறு, 24 ஜனவரி, 2016

Hijacked Indian Aeronautics- Eternally Talented India



                                   நமது முன்னோர்களின் விமான அராய்ச்சி 



1895-ஆம் ஆண்டு- மும்பை சௌபாதி கடற்கரை மக்கள் பலர் ஆவலுடன் பார்த்து கொண்டிருக்க, ஓர் அதிசயம் அங்கே அரங்கேறியது.

ஆம். நவீன யுகத்தின் முதல் விமானம் காற்றைக் கிழித்துக் கொண்டு விண்ணில் 1500 அடி உயரத்தில் பறந்தது. பின்னர் பாதுகாப்பாக தரையை தொட்டது. இந்த விமானத்தை அதன் வெள்ளோட்டத்தை கண்டுகளித்த பலருள் முக்கியமான இருவர் பரோடா மன்னர் ஸ்ரீசாயாஜிராவ் கேய்க்வாடு மற்றும் நீதியரசர் மகாதேவ் கோவிந்த ரானடே.

இந்த வானவூர்தியை வடிவமைத்து இயக்கியவர் சிவகுமார் பாபுஜி தளபதே (Shivkar Bapuji Talpade) என்பவர். இவர் ஒரு வேத ஆராய்ச்சியாளர். ஒரு விஞ்ஞானி. கலை கல்லூரியின் ஆசிரியர். 

வேதங்களில் கூறப்பட்டுள்ள வானவூர்தி அமைப்பின் இலக்கணங்களை ஆழ்ந்து  கற்று அதன்படி அவர் வடிவமைத்தது தான் இந்த நவீன உலகத்தின் முதல் ஆகாய விமானம்!

இச்செய்தி புனேயில் இருந்து வெளிவரும் பாலகங்காதர திலகரின் பத்திரிகையான கேசரி எனும் நாளிதழில் வெளிவந்தது.

ஆக அண்மைய கால வரலாற்றின் வானவியலுக்கு பாரதமே முன்னோடி. தளபதேயின் இந்த விமானத்தின் பெயர்  மாருதி சக்தி.

இது பரத்வாஜ மகரிஷியின் 'யந்திர சர்வஸ்வம்' என்ற நூலில் 'வைமானிக சாஸ்திரா' என்ற அத்தியாயத்தின் தொழில்நுட்ப கொள்கைகளை ஆழ்ந்து கற்ற தளபதேயின் விஞ்ஞான அறிவால் வடிவமைக்கப்பட்டது. இது ஏன் தற்கால அறிவியல் கண்டுபிடிப்புகளின் வரிசையில் இடம் பெறவில்லை? விடை எளிது.

பிரிட்டிஷ் அரசு பரோடா மன்னரை மிரட்டி இந்த பெரும் மரமாக வளரவிருந்த இந்திய ஆராய்ச்சியை முளையிலேயே கிள்ளியது. அதோடு இந்த விமானத்தின் பாகங்களையும் செய்முறை குறிப்புகளையும் கைப்பற்றியது என டெக்கான் ஹெரால்ட் பத்திரிக்கை, செய்தி வெளியிட்டுள்ளது. (டிசம்பர் 2003)

இதற்கு 8 ஆண்டுகளுக்கு  பிறகே 1903, டிசம்பர் 7-ஆம் நாள் ரைட் சகோதரர்களின் விமானம் ஆகாயத்தில் பறந்தது.

பண்டைய பாரதத்தில் ஆகாய விமானம் பற்றிய ஆராய்ச்சி மிக பழங்காலதிலேயே இருந்தது என்பதை உணர்த்தும் தகவல்களில் சில:

திரிசக்கர ரதம் என்னும் முன்று சக்கரங்கள் கொண்ட, காற்றில் செல்ல கூடிய வாகனம். மற்றும் ஒரு வகை வாயுவின் சக்தியால் இயங்க கூடிய ஆகாய ஊர்தியை பற்றியும் ரிக்வேதம் குறிப்பிடுகிறது. எரிபொருள் மூலம் செலுத்தப்படகூடிய ரதங்கள் பற்றிய குறிப்பும் உள்ளது.

புராணங்களும் விமானங்களை பற்றிய பல செய்திகளை தருகின்றன. ராமாயணத்தில் வால்மீகி முனிவர் விளக்கும் புஷ்பக விமானம் காற்றில் நகரும் ஒரு நகரமாக விளங்கியது. ராவனணன் குபேரனிடமிருந்து இதை கைப்பற்றியதாக கூறபடுகிறது.

பாகவதத்தில், சிசுபாலனின் நண்பன் சால்வன், கிருஷ்ணன் மீது ஒரு வான்வெளி தாக்குதல் நடத்துகிறான். அவன் பயன்படுத்திய விண்வெளிகலம் 'ஸௌபா' என்ற பெயர் கொண்டு இரும்பினால் செய்யப்பட்டு உறுதியாக விளங்கியது. அது  மறைந்தும் மீண்டும் தோன்றியும் மயாஜாலமாக தாக்கும் சக்தி உடையது; தன்னிடமிருந்து மேலும் பல விமானங்களை வெளிபடுத்தும் சக்தி கொண்டது. உண்மையில் அது விமானம் அல்ல; ஓர் ஆகாய நகரம்!

கபில முனியின் பெற்றோர்கள் கபர்தா முனிவரும் அவரது மனைவியும் விமானத்தில் நக்ஷத்திரங்களுக்கு இடையே பயணித்ததாக ஒரு குறிப்பும் பாகவதத்தில் வருகிறது.

கௌடில்யர் நிர்வாகக் கொள்கைகளை பற்றி கூறும் தமது அர்த்த சாஸ்திரத்தில் விமான ஓட்டிகளுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரத்தையும் அரசு அளிக்க வேண்டியதின் முக்கியத்துவதை குறிப்பிடுகிறார். 

இந்திய வானவியல் பற்றிய பல செய்திகள் ஹரி வம்சம், மார்கண்டேய புராணம், விஷ்ணு புராணம், உத்தர ராமசரிதம், ஹர்ஷசரிதம், சீவக சிந்தாமணி (தமிழ்) போன்றவற்றில் கிடைகின்றன.

அண்மையில் சீன அரசு, திபெத் பகுதிகளில் கிடைத்த சமஸ்க்ரித கையெழுத்து பிரதிகளை, சண்டிகர் பல்கலைகழக பேராசிரியர் ருத்ரெய்னாவிடம் கொடுத்து அவற்றில் எழுதி இருப்பதை கண்டறிந்து சொல்லும்படி கேட்டுகொண்டது.

ருத்ரெய்னா இந்த கையெழுத்து பிரதிகள் நக்ஷத்திரங்களுக்கு ஊடேயான பயணம் மற்றும் ஈர்ப்பு விசையின் அடிப்படையிலான வான்வெளி பயணங்கள் பற்றிய பல செய்திகளை உள்ளடக்கியுள்ளன என்று கூறுகிறார். மேலும் அவர் 'இத்தகைய அற்புத சாஸ்திரங்கள் எனப்படும் எந்திரங்களின் மூலம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் மனிதர்களை வேற்று கிரகங்களுக்கு அனுப்பி இருக்ககூடும் என்கிறார்'.
 
 (Only a few years ago, the Chinese discovered some Sanskrit documents in Lhasa, Tibet and sent them to the University of Chandrigarh to be translated. Dr. Ruth Reyna of the University said recently that the documents contain directions for building interstellar spaceships! Their method of propulsion, she said, was "anti- gravitational" and was based upon a system analogous to that of "laghima," the unknown power of the ego existing in man's physiological makeup, "a centrifugal force strong enough to counteract all gravitational pull."
 
According to Hindu Yogis, it is this "laghima" which enables a person to levitate. Dr. Reyna said that on board these machines, which were called "Astras" by the text, the ancient Indians could have sent a detachment of men onto any planet, according to the document, which is thought to be thousands of years old).

வானவியலில் உன்னத நிலையை வேத காலத்திலேயே இந்தியா அடைந்திருந்தது என்பதை இவை உறுதி செய்கின்றன.


Source: Eternally Talented India 108 facts


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நந்தனார் சரித்திரம்- Part 2

  நந்தனார் சரித்திரம்-  Part 2 நந்தனார் திருப்புங்கூர் சிவலோகநாதனைத் தரிசனம் செய்து  ஆதனூர் வந்த நாள் முதலாய் உணவு உண்ணாமல், உறக்கம் கொள்ளாம...

Thiruvannamalai Girivalam benefits